06-22-2004, 09:15 PM
இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி
சிறீலங்காவில் தற்போது உருவாகியுள்ள ஸ்திரமற்ற அரசியற் சூழ்நிலை காரணமாக பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சிறீலங்கா நாணயத்தின் பெறுமதி மிக மோசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. முன்னொருபோதும் இல்லாத வகையில் இலங்கை ரூபா 3.2 வீத அதிகூடிய வீழ்ச்சியை அடைந்துள்ளது. சர்வதேச நாடுகளிடமிருந்து கிடைக்கவிருந்த 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையின் பின்னர், இலங்கை ரூபாவிலும் பங்குச் சந்தையிலும் பூரண வளர்ச்சி உருவாகும் என்று வணிக உலகம் நம்பிக்கை கொண்டிருந்த வேளையில், ஐனாதிபதி சந்திரிகாவின் முன்னுக்குப் பின் முரணான செயற்பாடுகள், பேச்சுக்களினால், நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் சூன்யத் தன்மையும் ஸ்திரமற்ற நிலையும் தோன்றியுள்ளன.
தற்போதைய நாணயப் பெறுமதியின் வீழ்ச்சியை எவ்வாறு சீர்செய்வதென்று தெரியாது மத்திய வங்கி குழம்பிப்போயுள்ளதாக சிறீலங்கா பங்குச்சந்தை அவதானிகள் கூறியுள்ளார்கள்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>