06-22-2004, 07:12 PM
தோழியர் வலைப்பதிவில் வாசித்த ஒரு நேர்காணலிருந்து, இந்தத் தலைப்புக்குப் பொருந்திய ஒரு கேள்வியும் பதிலையும் இங்கிடுகிறேன்:
உரையாடல் - சிவகாமி & றஞ்சி(சுவிஸ்)
இந்தியாவை பிறப்பிடமாகவும் ஜப்பானை தற்காலிக வதிப்பிடமாகவும் கொண்ட தலித் பெண்ணியவாதியான சிவகாமி அவர்கள் யூலை 2000 ஆண்டு பெண்கள் சந்திப்புக்காக பிரான்ஸ் வந்திருந்தார். அவருடனான உரையாடல் இங்கு சக்தி சஞ்சிகைக்காக தொகுக்கப்பட்டது.
நேர்காணல்: றஞ்சி(சுவிஸ்)
<i>குடும்ப அமைப்பு முறையினுள் பாலியல் உந்துதல்கள் மீது மிகக்கடுமையான ஒழுக்கவிதிகள் கடைப்பிடிக்கப்ட்டுவரும் வேளையில் ஆண்மேலாதிக்கக் கருத்தியலின் அடிப்படையிலான பாலியல் கருத்துகளுக்குச் சவாலாக ஓரிணப்புணர்ச்சியாளர்கள் செயற்பட்டு வருகின்றனர் என்று கூறப்படுவது பற்றியும், பாலியல் ஒழுக்கவிதிகள் அப்படியே நிலவ லெஸ்பியன் உறவு ஆணாதிக்கத்தால் கேலிக்குரிய செயற்பாடாக உருவகிக்கப்படும் சாத்தியம் பற்றியும் என்ன கூறுகிறீர்கள்?? </i>
ஓரினப்புணர்ச்சியாளர்கள் ஆண் மேலாதிக்கக் கருத்தியலின் அடிப்படையிலான பாலியல் கருத்துக்களுக்குச் சவாலாக செயல்பட்டு வருகின்றனர் என்பதன் அடிப்படையில் பெண்ணியம் பற்றி பேசும் ஒவ்வொருவரும் இதன் மீது கருத்துத் தெரிவிக்கும்படி வற்புறுத்தப்படுகிறார்கள். ஒருவேளை புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் சூழலையொட்டியும் இக்கேள்வி எழ வாய்ப்பிருக்கிறது.
ஓரினப்புணர்ச்சியிலும் ஒருவர் தன்னை ஆணாகவும் மற்றொருவர் தன்னைப் பெண்ணாகவும் வரித்துக் கொள்கிறார்கள் என்றும் ஒருத்திக்கு ஒருத்தி, அல்லது ஒருவனுக்கு ஒருவன் என்று பாலியல்விதி கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதாகவம் கேள்விப்பட நேர்ந்தது. பெண் விடுதலையை அடிப்படையாகக் கொண்டும் இயற்கையை அடிப்படையாகக் கொண்டும் ஒருதாரமணத்தை வன்முறையென வரையறுக்கும்போது ஒருத்திக்கு ஒருத்தி, அல்லது ஒருவனுக்கு ஒருவன் என்பதை ஆணாதிக்க கருத்துக்கு எதிரான செயல்பாடாக எப்படிக் கொள்வது? அவர்களும் தேவாலயங்களில் திருமணம் செய்து கொண்டு தங்களுக்கென குழந்தைகளை தத்து எடுத்துக் கொண்டு சொத்து சேர்த்துக்கொண்டு.... இதுசவாலா அல்லது அவர்கள் தங்களது தனிவாழ்க்கையில் மேற்கொண்டுள்ள சங்கடங்களா? ஓரினப்புணர்ச்சி இப்போதைய பாலியல் ஒழுக்கவிதிகளின் மீறல் என்றளவில்தான் புரிந்துகொள்ள முடிகிறது. ஓரினபுணர்ச்சியாளர்களின் நடவடிக்கையின் விபரங்கள் முழுவதுமாகத் தெரியாத நிலையில், அதை நீங்கள் வசிக்குமிடங்களில் உள்ளவர்கள் தொகுத்தால் நன்றாயிருக்கும்.
நன்றி: http://womankind.yarl.net/