06-22-2004, 01:52 PM
<span style='font-size:25pt;line-height:100%'>இராணுவப் புலனாய்வுப் பிரிவே
கருணாவுக்கு முழுப் பாதுகாப்பு!</span>
ஐ.தே.கட்சி எம்.பியே அக்குழுவைக் காப்பாற்றி
தலைநகர் கொழும்புக்குக் கூட்டிச்சென்றார்
கிழக்கு மாகாணத்திலிருந்து தப்பியோடிய புலிகளின் முன்னாள் தளபதி கருணாவுக்கு இலங்கை இராணுவமே முழுப் பாதுகாப்புக் கொடுத்து அவரை வைத்திருக்கிறது.
- இவ்வாறு அடித்துக் கூறியிருக்கிறார் கடந்த வாரம்வரை கருணாவுடன் கூடவிருந்த அவரின் உதவியாளர்களுள் ஒருவரான நிலாவினி.
ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பியான அலி ஸாஹிர் மௌலானாவே கிழக்கு மாகாணத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொழும்புக்குக் கூட்டிச்சென்றார் என்றும் அவர் தகவல் வெளியிட்டிருக்கின்றார்.
கருணாவுடன் சென்ற பெண் தளபதிகளில் ஒருவரான நிலாவினி நேற்று மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி னார். அப்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவருடன் முன்னாள் தளபதிக ளான தீந்தமிழ், லாவண்யா, பிறேமினி ஆகியோரும் விடுதலைப் புலிகளின் மட்டு - அம்பாறை மாவட்ட இராணுவத் தளபதி றமணன், நிர்வா கச் செயலகப் பொறுப்பாளர் பாபா ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் மாநாட்டில் மேற் படி நான்கு பெண்களும் தெரிவித்த தாவது:-
கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து புறப் பட்டு, கொழும்பு வீதியால் சென்று கொண்டிருந்தபோது நாலாம் புதுச்சந்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாகிர் மௌலானா பொலீஸாருடன் வந்து எம்மை வான் ஒன்றில் ஏற்றிச் சென்றார்.
குருநாகலில் நாங்கள் தேநீர் அருந்தினோம். பின்னர், அங்கிருந்து கொழும்பு ஹில்டன் ஹோட்டலுக்கு எங்களை அழைத்துச் சென்றனர். அங்கு நான்கு நாள்கள் தங்கியி ருந்தோம்.
அப்போது டக்ளஸ் தேவானந்தா தொலைபேசி மூலம் கருணாவுடன் தொடர்புகொண்டு பேசினார். தன்னு டன் சேர்ந்து இயங்குமாறு அவர் கேட்டார். ஆனால், அதற்கு மறுப்புத் தெரிவித்த கருணா தான் இராணுவத் துடன் சேர்ந்து இயங்கப் போகிறார் எனத் தெரிவித்தார். ஆரம்பத்தில் இரா ணுவத்துடன் சேர்ந்து இயங்கவே கருணா திட்டமிட்டிருந்தார்.
ஏப்ரல் 12ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை நாங்கள் ஹில்டன் ஹோட்டலில் தங்கியிருந்தோம். பின்னர் அங்கிருந்து மற்றொரு வீட்டுக்குச் சென்றோம். அந்த வீட்டில் கருணாவின் மனைவி, மூன்று பிள்ளைகள், கருணாவின் மொழிபெயர்ப்பாளர் வர தன் மற்றும் சில போராளிகள் தங்கியிருந்தனர். அங்கு நாங்கள் ஐந்தாறு நாள்கள் தங்கியிருந்தபின், அப்பலோ வைத்தியசாலைக்கு அண்மையில் நுகேகொடவிலுள்ள ஒரு வீட்டுக்கு மாற்றப்பட்டோம். அங்கு எமக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பாது காப்பை அளித்தனர்.
நாங்கள் எங்களை வீட்டுக்கு, எங்கள் பெற்றோரிடம் அனுப்புமாறு கருணாவிடம் கோரினோம். அதற்குப் பதிலாக அவர் சவுதிஅரேபியாவுக்கு எம்மை அனுப்பலாம் எனவும் அங்கு வீட்டுப்பணிப்பெண்ணாக நாம் வேலை செய்யலாம் எனவும் கூறினார்.
அவரின் போக்கு எங்களுக்குப் பிடிக்கவில்லை.
கொழும்பில் அவருடன் இருந்த சமயத்தில் அறை ஒன்றுக்குள் புூட்டி எம்மை முடக்கி வைத்திருந்தனர். எனினும், கருணாவின் மனைவியுடன் சேர்ந்து சமைக்கவும், தொலைக் காட்சி பார்க்கவும் நாம் அனுமதிக் கப்பட்டோம்.
இலங்கை இராணுவத்தின் பெரிய படைப்பிரிவு கருணாவுக்குப் பாதுகாப்பு வழங்கவில்லை. ஆனால், இலங்கை இராணுவத்தின் ஒரு பிரிவு - பெரும்பாலும் புலனாய்வுப் பிரிவு பாதுகாப்பு வழங்கியதென்பதை நாம் உறுதிப்படக் கூறுகின்றோம். அவர்கள் கனரக ஆயுதங்களுடன் பெரிய குறு}ப்| ஆக வரவில்லை. சீருடையு டனும் வரவில்லை. சாதாரண உடையில் ஆயுதங்களுடன் அவர்கள் பாதுகாப்பு வழங்கினார்கள்.
அடிக்கடி கருணா எம்முடன் தொடர்புகொண்டு பேசுவார். கடந்த 13 ஆம் திகதி நாமிருந்த வீட்டுக்கு வந்த கருணா, தான் வெளிநாடு செல்லப் போகிறார் என்றும் ஐந்தாறு மாதங்களில் திரும்பி வந்து கட்சி ஒன்றை ஆரம்பிக்கப் போகிறார் என்றும், அதுவரை எம்மைக் காத்திருக்கு மாறும் கூறினார்.
பின்னர் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் பாதுகாப்புடன் ஒரு காரில் ஏறிச் சென்றுவிட்டார். அவருடன் அவரது மனைவி, பிள்ளைகளும் சென்றனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. வெளி நாடு செல்வதாக மட்டுமே எங்களி டம் சொன்னார்கள்.
அதன்பின்னர் அப்பலோ வைத்திய சாலை அருகிலிருந்த நாங்கள் ஒருவாறு தப்பி வெளியேறி விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து கொண்டோம்.
இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற வர்கள் எவருமே அவருடன் இப்போது இல்லை. தேசியத் தலைவரின் சிறப்புப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமலேயே அவர் மட்டக்களப்பிலிருந்து ஓடவேண்டி ஏற்பட்டது.
நாங்கள் அங்கு தங்கியிருந்த காலத்தில் அரசியல்வாதிகள் எவரும் எம்முடன் தொடர்புகொள்ள வில்லை. அரச உயர் அதிகாரி ஒருவர் மட்டும் எம்முடன் தொடர்புகொண்டு பேசினார் அவர் யார் என எமக்குத் தெரியாது.
கருணாவின் தவறால் இயக்கத்தை விட்டு விலக்கிப்போன போராளிகள் மீண்டும் இயக்கத்தில் இணைந்து கொள்ள வேண்டும். தலைமைக்கு விசுவாசமாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு தேசிய விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் - இப்படி அவர்கள் தெரி வித்தனர்.
இந்த நால்வரும் அவர்கள் விட்ட தவறு காரணமாக இயக்கத்தில் பதவி நிலை இறக்கப்பட்டிருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது
http://www.uthayan.com/news/newsmain.htm

Truth 'll prevail