06-21-2004, 05:06 PM
இலங்கையின் வரலாற்றை திருத்தி எழுதினால்தான் இனவாதம் முடிவுக்கு வரும்: பிரபல சிங்கள பேராசிரியர் சுஷரித்த ஹம்லத்
இலங்கையின் வரலாற்றை திருத்தி எழுதினால்தான் இனவாதம் முடிவுக்கு வருமென பிரபல சிங்களப் பேராசிரியரான சுஷரித்த ஹம்லத் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு சிங்கள நூல்களின் வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் விரோதம் இருப்பதாகவே நீண்ட காலமாக வரலாறுகளில் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது என்று இங்கு சுட்டிக்காட்டிய அவர், எனினும் இவ்வாறான வரலாற்றுப் பதிவுகள் பொய்யானவை எனவும், முன்னைய காலங்களில் தமிழ் மொழிதான் சிங்கள மொழியின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்திருந்தது என்றும் குறிப்பிட்டார்.
மொழி ஆய்வு மற்றும் தொல்பொருள் ஆய்வுகளில் இருந்து எடுக்கப்பட்ட உண்மைகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகள் ஆங்கில மொழியில் இடம்பெற்றிருந்தமையால் சிங்களவர்களும், தமிழர்களும் அதன் உண்மைத்தன்மையினை புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றனர்,
இதுவே உண்மை எனவும் தெரிவித்துள்ள, பேராசிரியர் சுஷரித்த ஹம்லத், இவ்வாறு திரிபுபடுத்தப்பட்ட வரலாற்றினை திருத்தி எழுதுவதன் மூலமே இலங்கையில் நிலவும் இனக் குரோதத்தினை முடிவுக்குக் கொண்டுவரமுடியும் எனவும் அவர் மேலும்; தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு, தமிழர் தாயகம் தொடர்ந்தும் தென்னிலங்கையுடன் இணைந்து இருப்பதா? அல்லது பிரிந்து செல்வதா? என்பது தொடர்பாக வடக்கு கிழக்கு மக்களிடம் கருத்துக் கணிப்பினை மேற்கொள்ள வேண்டும் எனவும் அங்கு கருத்துத் தெரிவித்த சிங்களப் பேராசிரியரான சுஷரித்த ஹம்லத், இதன்போது தமிழ் மக்கள் அளிக்கும் ஆணையினை சிங்கள அரசியல்வாதிகளும், சர்வதேச சமுகமும் உரிய மதிப்பளித்து நடக்க வேண்டுமெனவும்; கோரிக்கை விடுத்துள்ளார்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>