06-21-2004, 04:59 PM
<img src='http://www.tamilnet.com/img/publish/2002/11/sub-committee_batti_3_201102.jpg' border='0' alt='user posted image'>
image from tamilnet photo library
கருணா சிறிலங்கா இராணுவத்துடன் இருப்பதை உறுதிப்படுத்த முடியும்: புலிகளிடம் சரணடைந்துள்ள நிலாவினி பி.பி.சி.க்கு தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கருணாவுக்கு சிறிலங்கா இராணுவம் அடைக்கலம் கொடுத்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கருணாவுடனிருந்து தற்போது விடுதலைப்புலிகளிடம் சரணடைந்துள்ள முன்னாள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மகளீர் படையணித் தளபதியாகவிருந்த நிலாவினி லண்டன் பி.பி.சி வானொலிக்கு வழங்கிய பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்தார். கருணா இராணுவத்துடன் தான் இருக்கிறார். இதனை சிறிலங்கா இராணுவம் மறுக்க முடியாது. ஏனெனில் நாங்களும் அங்கிருந்து தான் வந்திருக்கிறோம். இதனை நாங்கள் உறுதிப்படுத்துவோம். எனவும் நிலாவினி பி.பி.சி.செய்தியாளர் கேட்ட போது குறிப்பிட்டார்.
இது தொடர்பாக பி.பி.சி.க்கு வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்ததாவது,
கருணாவின் செயற்பாடு எங்களுக்கு பிடிக்கவில்லை, எங்களை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு நாங்கள் பலமுறை வற்புறுத்திய போது எங்களை விடாது வைத்திருந்தார்.
நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தோம். கடுமையான அழுத்தத்தின் மத்தியில் எங்களுக்கு பிடிக்காததால் தப்பி வந்தோம். நாங்கள் வரும் வரை இராணுவப் பாதுகாப்புடன் தான் கருணாவும் இருந்தார். அவரோடு போன நாங்களும் அங்குதான் இருந்தோம். அவர் வேறு இடத்திற்கு பிரிந்து சென்றவுடன் நாங்கள் அங்கிருந்து வந்து விட்டோம் எனவும் குறிப்பிட்டார்.
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கருணாவுடன் தப்பி ஓடிய முன்னாள் மகளிர் பிரிவுத் தளபதியான நிலாவினி மற்றும் தீந்தமிழ், லாவண்யா, முன்னாள் மகளிர் அரசியல் பொறுப்பாளர் பிறேமினி ஆகியோர் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்துள் ளமை குறிப்பிடத்தக்கது.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>