06-21-2004, 04:45 PM
விரக்தியின் விளிம்பில் வெற்று வேட்டுப் பிரசாரங்கள்
பதிவு செய்தவர் Mohan காலம் June 21, 2004 11:08 AM
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை சிறப்புத் தளபதி ரமேஷ் கிழக்கு நிலைமைகள் தொடர்பாக - தென்தமிழீழக் களநிலைவரங்கள் சம்பந்தமாக - நிலைமையைத் தெளிவுபடுத்தியிருக்கின்றார். கருணா அணியினரின் பெரும் தாக்குதல் நடவடிக்கைகளில் கொல்லப்பட்டவர் என சிங்கள ஊடகங்களினால் அறிவிக்கப்பட்ட தளபதி ரமேஷ், உயிருடன் வந்து அளித்த செவ்வியும் தெரிவித்த தகவல்களும் தவறான பிரசாரங்களுக்கு இதுவரை கருவியான தென்பகுதி ஊடகவியலாளர்களின் கண்களைத் திறந்திருக்கும் என எதிர்பார்க்கலாம்.
தொப்பிகல காட்டுப் பகுதியில் குறிப்பிடத்தக்க சம்பவம் எதுவும் நிகழாத நிலையில் - ஒன்றுமில்லாததை - தெற்கு ஊடகங்கள் அவ்வளவு பெரிதாக ஊதிப்பெருப்பித்தது ஏன்? தளபதி ரமேஷ் பலியானார்!, பொட்டு அம்மான் உயிரிழந்தார்!, கிழக்கு யுத்தத்தில் 85 புலிகள் சாவு!, கிழக்கில் கணிசமான பகுதி கருணா குழு வசம் வீழ்ந்தது! என்றெல்லாம் அடிப்படை ஒன்றுமில்லாமல் பரபரப்பான செய்திகளை சிங்கள, ஆங்கில ஊடகங்கள் வெளியிடக் காரணம் என்ன?
பல தரப்பிலும் இப்போது எழுப்பப்படும் வினாக்கள் இவைதான். இலங்கை இராணுவத்தின் புலனாய்வுத்துறையின் செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள விரக்தியின் உச்ச வெளிப்பாடே இதுவன்றி வேறில்லை. தளபதி ரமேஷ் கரடியனாறு தேனகம் விடுதியில் கடந்த சனியன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சுட்டிக்காட்டியது போன்று, போர் நடைபெற்ற காலத்தில் அரச ஊடகங்கள் உட்பட தெற்கு ஊடகங்கள் எவ்வாறு பொய்ச் செய்திகளையும், வதந்திகளையும் உண்மை போன்று பரப்பினவோ அது போன்ற நிலைமைதான் இப்போது அரங்கேறியிருக்கிறது.
யுத்த காலத்தில் பொய்ப்பிரசாரத்தையும், புரட்டுப்பரப்புகளையும் கூட, ஆயுதங்களாகப் பயன்படுத்திய அரசுத் தரப்பு, இந்தச் சமாதான காலத்திலும் அதையே நாடியிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நேர்ந்த தனிமனித பிறழ்வு, கருணா விடயம், தலைவருக்கு அடுத்த மட்டத்தில் - உயர் நிலையில் - உயர் தரத்தில் - பேணப்பட்ட ஒரு தளபதி கேவலமாகிப் போனமை தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு துரதிர்ஷ்டமே. ஒரு கசப்பான நிகழ்வும் கூட. அந்தத் தனி மனிதனின் அற்பத்தனத்தை - துரோகப்போக்கை - தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைத்த சிங்கள இராணுவமும் அதன் புலனாய்வுப் பிரிவும் அம்முயற்சிகளில் தோற்று, இன்று அவ்விடயத்தில் விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. அதன் வெளிப்பாடே பொய்ப்பிரசாரத்தின் உச்சக்கட்டம்.
தன்னுடைய 41 நாள் அட்டகாசத்துக்குத் தாம் பயன்படுத்திய முக்கிய தளபதிகளில் ஒரு குழுவினரை, மட்டக்களப்பு-அம்பாறையை விட்டுக் கொழும்புக்குத் தாம் தப்பி ஓடியபோது கூட்டிக்கொண்டுசென்றார் கருணா. ஆனால், அதில் ஒரு குழுவினர் எப்படியோ கருணா தரப்பின் பிடியிலிருந்து நழுவி புலிகளின் தலைமையிடம் சரணடைந்து விட்டனர். கருணாவுடன் எஞ்சியிருந்த முக்கிய மகளிர் அணியின் உறுப்பினர்களும் இப்போது கருணாவுக்கும் இராணுவத் தரப்புக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு புலிகளின் தலைமையிடம் வந்து சேர்ந்துவிட்டனர். கருணாவின் காலத்தில் மட்டக்களப்பு - அம்பாறை மகளிர் விசேட தளபதியாகவிருந்த நிலாவினி, தளபதியாகவிருந்த தீந்தமிழ், துணைத் தளபதியாகவிருந்த லாவண்யா, மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த பிரேமினி ஆகியோரே புலிகளின் தலைமையிடம் வந்து சேர்ந்திருக்கின்றனர். இவர்களும் கருணாவைக் கைவிட்ட நிலையில் இன்று கருணா குழு கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைதான்! கருணாவும் அவரது ஆங்கில, சிங்கள மொழிபெயர்ப்பாளர் வரதனும்தான் இன்று இராணுவத்தினர் வசம் எஞ்சியிருக்கின் றனர்.
அதுமட்டுமல்ல, கருணாவுடன் இதுவரை - கடைசி நேரம் வரை - இருந்த முக்கிய புள்ளிகள் பலர் புலிகளின் தலைமையிடம் வந்துவிட்டதால் கருணாவைப் பயன்படுத்தி இராணுவத்தரப்பு புரிந்த திருகுதாளங்கள் எல்லாம் புலிகளின் தலைமைக்கு அப்பட்டமாகத் தெரிய வந்துவிட்டன. சம்பந்தப்பட்ட பெண் முக்கியஸ்தர்கள் இதுவரை நடந்த சம்பவங்களையெல்லாம் விரைவில் செய்தியாளர்களுக்கு எடுத்துரைப்பார்கள் என்று தளபதி ரமேஷ் வேறு அறிவித்திருக்கின்றார்.
அதாவது, கருணா குழுவின் பெயரைப் பயன்படுத்தி இராணுவத் தரப்பு மேற்கொண்ட இசகுபிசகு நடவடிக்கைகள் எல்லாம் விரைவில் புட்டுப்புட்டு வைக்கப்படவுள்ளன, அம்பலமாகவுள்ளன. இதனால், தமது எத்தனங்கள் - முயற்சிகள் - எல்லாம் தோற்றுப்போய் - உண்மை அம்பலமாகப் போகிறது என்ற விரக்தியின் எல்லையில் நிற்கும் இராணுவத் தரப்பு, வேறு வழியின்றி அவிழ்த்துவிடும் வெற்று வேட்டுப் பிரசாரங்களே இப்போது தென்னிலங்கை ஊடகங்களை ஒன்றுமில்லாமல் கலகலக்க வைத்திருக்கின்றன.
நன்றி: உதயன் and yarl.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>