Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய உளவுத்துறையில் ஒரு கருப்பு ஆடு!
#10
தோண்டத் தோண்ட திகில் மயம்தான்!

<img src='http://www.vikatan.com/jv/2004/jun/20062004/p4.jpg' border='0' alt='user posted image'>

இந்திய அரசாங்கத்தின் மிகப்பெரிய உளவு அமைப்பான ராவில் இணைச் செயலாளராக இருந்த ரவீந்திரசிங், கருப்பு ஆடாக இருந்து, டபுள் ஏஜெண்ட் ஆக செயல்பட்டு அமெரிக்காவுக்கு ஓடியது பற்றி கடந்த இதழ் ஜூ.வியில் எழுதி இருந்தோம்.

ரவீந்திரசிங் அமெரிக்காவில்தான் பதுங்கியிருக்கிறார் என்பதை ரா அதிகாரிகள் உறுதிப்படுத்திவிட்டனர்.. அமெரிக்காவில் எங்கு இருக்கிறார் என்பதைக் கண்டறியும் விசாரணையில் ரா தீவிரமாகியிருக்கிறது.

இதற்காக ரவீந்திரசிங்கின் நண்பர்களான இரண்டு பஞ்சாபி தொழிலதிபர்களிடம் விசாரணை நடக்கிறது. இவர்கள் இருவருமே சிங்கின் சொந்த ஊரான அமிர்தசரஸ்காரர்கள். இதில் ஒருவர் டெல்லியில் செட்டிலாகிவிட்டவர். இவர் முன்னாள் மத்திய இணை அமைச்சரான ஆர்.எஸ். பாட்டியாவுக்கு நெருங்கிய நண்பர். பத்து வருடங்களுக்கு முன்பு நரசிம்மராவ் அமைச்சரவையில் பாட்டியா வெளியுறவு இணை அமைச்சராக இருந்தார். அப்போது பல சீனியர்களையும் மீறி ரவீந்திரசிங்குக்கு வாஷிங்டன் தூதரகத்துக்கு டிரான்ஸ்ஃபர் கிடைத்தது. ஒரு வருடம் வாஷிங்டனில் பணிபுரிந்தசமயத்தில்தான் அவருக்கு சி.ஐ.ஏ வுடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டதாகத் தெரியவந்திருக்கிறது.

இந்த டிரான்ஸ்ஃபர் தொடர்பாக பாட்டியாவிடம் அதிகாரிகள் விசாரித்திருக்கிறார்கள்.

மனிதாபிமான அடிப்படையில்தான் நான் அந்த டிரான்ஸ்ஃபர் உத்தரவு போட்டேன். எனது மகள் பக்கவாதம் தாக்கி ஆபத்தான நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறாள். அவளை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும்.. அதுபோக, அமெரிக்காவில் போஸ்டிங் என்றால் எனக்கு அலவன்ஸ் நிறையக் கிடைக்கும் என்று கெஞ்சினார். அதனால்தான் அதைச் செய்தேன் என்று பாட்டியா சொன்னாராம்.

ரவீந்திரசிங்கும், அவரது மனைவி பர்மிந்தர் கவுரும் அக்கம்பக்கத்தில்கூட யாருடனும் பேச மாட்டார்களாம். எஸ்கேப் ஆவதற்கு முதல்நாள், அமெரிக்காவில் எங்கள் மகள் கல்யாணத்துக்குப் போகிறோம் என்று பக்கத்து வீட்டில் அவராக வலியப் போய் சொல்லியிருக்கிறார்.

சிங்கின் அம்மா, அக்கா, மகன், மகள் என எல்லோருமே இருப்பது அமெரிக்காவில். சிங்கின் அக்கா USAID எனப்படும் அமெரிக்க தன்னார்வ நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். (சி.ஐ.ஏ\வின் முகமூடி என குற்றம் சாட்டப்படும் அமைப்பு இது!) சிங்கின் இரண்டு மகள்களையும், மகனையும் இவர்தான் வளர்க்கிறாராம். வருடத்துக்கு ஒருமுறை இவர்களைப் பார்க்க அமெரிக்கா போவாராம் சிங். அவருடைய மனைவி ஆறுமாதம் அங்கே... ஆறுமாதம் இங்கே என இருப்பவர்.

ரொம்ப அசாதாரண காரெக்டர் என்று இவரை ரா வட்டாரத்தில் வர்ணிக்கிறார்கள். சிங்கப்பூர், புரூனே, அமெரிக்கா என்று பல நாடுகளில் ரகசிய அக்கௌண்ட்களில் கோடிக்கணக்கில் அவர் பணம் சேர்த்து வைத்திருப்பதாகவும் நம் அரசுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதுகுறித்து விசாரிக்க ஒரு தனி டீம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, அமெரிக்காவில் இருக்கும் சிங்கின் உறவினர்கள் வீடுகள் எல்லாமே ரா அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகின்றன. உறவினர்களில் யாரையாவது சிங் நேரில் பார்க்க போவார் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் ரா அதிகாரிகள். இவ்வளவுக்குப் பிறகும் கூட, ரவீந்தர்சிங் முக்கியத்துவம் இல்லாத பதவிகளில்தான் இருந்தார்... அதனால் ராவின் ஆபரேஷன்கள் பற்றி பெரிதாக அவர் எதையும் அமெரிக்காவுக்குச் சொல்லியிருக்க வாய்ப் பில்லை. அந்தளவுக்கு அவர் புத்திசாலியும் கிடையாது. சிரியா நாட்டில் பணிபுரிந்த சமயத்தில், சிங் எதற்கும் லாயக்கில்லாதவர் என்ற குறிப்பை அவரது உயர் அதிகாரி ஒருவரே சர்வீஸ் புக்கில் எழுதியிருக்கிறார் என்றால் பாருங்களேன். அதனால் அவர் டபுள் ஏஜெண்டாக இருந்ததில் எந்தப் பயமும் இல்லை.. இந்தியாவின் ரகசியங்கள் எதுவும் கசிந்திருக்காது என்று சமாளிக்கப் பார்க்கிறார்கள் ரா அதிகாரிகள்.

ஆனால், இரண்டு விஷயங்கள் இடிக்கின்றன. ரா தலைமையகத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை காலை பத்தரை மணிக்கும் ஒரு மீட்டிங் நடக்கும். ராவின் இயக்குநர் அறையிலோ, சிறப்பு செயலாளர் அறையிலோ நடக்கும் இந்தக் கூட்டத்தில் முக்கிய உயர்அதிகாரிகள் பங்கேற்பார்கள். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ரா ஏஜெண்டுகள் அனுப்பி வைக்கும் அறிக்கைகள் இந்தக் கூட்டத்தில் படிக்கப்படும். இந்தக் கூட்டங்களில் சிங்கும் பங்கேற்க முடியும். அப்படியிருக்கும்போது, இந்தக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை அவர் அமெரிக்காவுக்குச் சொல்லியிருக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? (சிங் எஸ்கேப் ஆன பிறகு இந்த கூட்டங்கள் தொடர்பான சிஸ்டத்தையே மாற்ற முடிவெடுத்து விட்டது ரா. இனிமேல் குறிப்பிட்ட இரண்டு, மூன்று அதிகாரிகள் மட்டுமே இதுமாதிரியான கூட்டங்களில் பங்கேற்பார்களாம்!)

இன்னொரு விஷயம்... ரா தலைமையகத் தின் க்யூ செக்ஷனில்தான் மிக முக்கியமான ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த செக்ஷனில் நவீனரக தகவல் தொடர்பு சாதனங்கள் கேட்பாரற்று கிடந்ததாக ஒரு தகவல். இந்தச் சாதனங்களை யார் இங்கு வைத்தார்கள்... இவற்றை வைத்து என்னென்ன ஆவணங்களை பிரதியெடுத்து அனுப்பினார்கள் எனத் தெரியவில்லை. எத்தனை காலமாக இந்த சாதனங்கள் இங்கு இருக்கிறது என்பதும் குழப்பமாக இருக்கிறதாம். இதன் பின்னணியிலும் சிங் இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை ஆதாரமற்ற வதந்தி என ரா மறுத்தாலும், நெருப்பில்லாமல் புகையுமா? என்று 'ரா'விலேயே சில நேர்மையான அதிகாரிகள் கேட்கிறார்கள்.

ஜூ.வி. க்ரைம் டீம்
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 06-17-2004, 02:46 AM
[No subject] - by kuruvikal - 06-17-2004, 02:22 PM
[No subject] - by vallai - 06-17-2004, 02:55 PM
[No subject] - by kavithan - 06-17-2004, 07:58 PM
[No subject] - by tamilini - 06-17-2004, 10:12 PM
[No subject] - by vasisutha - 06-18-2004, 05:36 AM
[No subject] - by vallai - 06-18-2004, 06:31 AM
[No subject] - by tamilini - 06-18-2004, 10:53 AM
[No subject] - by vasisutha - 06-21-2004, 12:58 AM
[No subject] - by Paranee - 06-21-2004, 04:44 PM
[No subject] - by tamilini - 06-21-2004, 09:46 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)