06-19-2004, 03:23 AM
நான் சில காலங்களுக்கு முன் நிர்வாகப்பகுதியில் எழுதியதை மீண்டும். எல்லோரும் பார்க்கும் வண்ணம் போடுகிறேன். ஏனெனில் முன்பும் அப்படி ஒரு விடயமாக எழுதியபோது தான் அதை எழுதினேன்.
Ilango Wrote:இதைப்பற்றி பெரிதாக நான் ஒன்றும் சொல்லவிரும்பவில்லை.
ஓரினச்செயற்கை பற்றிய அறிவு தமிழருக்குள் குறைவு.
ஓரினச்செயற்கையையும் சிறுவருடனான பாலியலையும் கூட ஒன்று என்று நினைப்பவர்களே இவர்கள்.
<b>ஓரினச்செயற்கை</b>
இது ஒரு இயற்கையின் தவறு. பிறக்கும் போதோ சிலர் குருடாக பிறக்கின்றனர், சிலர் செவிடாக சிலர் முடமாக பிறக்கின்றனர். அதாவது மனிதனுக்கான பூரண அங்கங்களற்ற நிலையில் பிறக்கின்றனர்.
அதே பொல்த்தான் ஓரினச்செயற்கையும். ஒரு பெண் அங்கங்களால் 100 வீதம் பெண்ணாக இருக்கிறாள் ஆனால் மரபணு ஆண்களுக்குரியதாக இருக்கிறது. உணர்வுகளை கொடுப்பது மரபணுவும் ஹோர்மோனும் என்பதால் அவள் தன்னை ஒரு ஆணாக உணர்கிறாள் (...........) இதனால் அவளால் ஒரு ஆணின் மீது காதல் கொள்ளமுடியாது.
இதேபோல்தான் ஒரு ஆணால் ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளமுடியாது. இவர்கள் தங்களைப்போல் உணர்வுள்ள இன்னொரு ஓரின செயற்கையாளரை நாடுகின்றனர்.
இவர்கள் நடத்தை கெட்டவர்கள் இல்லை
சாதரணமாக ஒருத்தனுக்கு ஒருத்தி என்பது போல் இவர்களுக்குள்ளும் ஒருவனுக்கு ஒருவன் , ஒருத்திக்கு ஒருத்தி என்று வாழ்வோருமுன்டு.
அதே போல் சாதரண ஒரின செயற்கையற்றவர்கள் இழிவு வாழ்கை வாழ்வதுபோலும் இவர்களுக்குள்ளுமுண்டு.
உலகத்திலேயே முதல் முதல் ஓரினசெயற்கை திருமணத்திற்கு ஆங்கீகாரமளித்த நாடு ஒல்லாந்து.
உலகத்தின் முதன் முதல் ஹோமோ திருமணச்சோடிகளும் இந்த நாட்டை சேர்ந்தவர்களே. அண்மையில் அவர்களை ரீவி பார்த்தேன். இன்றும் சந்தோசமாக ஒன்றாகத்தான் உள்ளனர். நல்ல மனிநேயசிந்தனை உள்ளவர்கள்.
இதே போல் பெரிய பெரிய பதவிகளில் இவர்கள் இருக்கிறார்கள். தாங்கள் ஹோமோ என்று சொல்ல வெட்கப்படுவதில்லை.
<b>குழந்தைகளுடன் பாலுறவு</b>
இப்படியானவர்கள் பெண்களுடன் தம்பத்தியம் கொள்ளக்கூடியவர்கள். ஆனால் ஒருவித மனநோய் பிடித்தவர்கள். ஒரு பெண்ணுடன் இணைவதில் திருப்தியடையாதவர்கள். அவர்கள் சிறுவயதில் பாலியலுக்குள் உள்ளாக்கட்டிருக்கலாம் அல்லது வேறுவிதத்தில் உடலுறவு கொள்ளவதில் திருப்தியடைபவர்களாக உள்ளனர். அவர்களுக்குள் மனிதநேயம் காணமுடியாது கொலைகூட செய்யக்கூடியவர்கள்.
பரணி நீங்கள் நினைப்பது போல் ஓரினச்செயற்கை இன்று தொடங்கியது அல்ல அது பைபிள் காலத்திலிருந்து இருக்கிறது. பைபிளில் பல சந்தர்ப்பங்கள் அது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. பைபிள் கதைகள் எந்த தேசத்துக்குரியவை என்பது பற்றி உங்களுக்குத்தெரியும்.
எனவே இது மெலத்தேயருக்கானதுமல்ல , கலியுக விநோதமுமல்ல
ஓரினசெயற்கை பற்றிய புத்தகம் குறும்படங்கள் பல பார்த்துள்ளேன். அவர்களை நினைத்து அனுதாபப்படுவேன். ஆனால் அவர்கள் தாங்கள் அனுதாப்துக்குரியவர்களாக நினைப்பதில்லை. அவர்களை அவர்கள் பாட்டுக்கு விட்டாலே அவர்கள் சந்தோசமாக வாழ்வார்கள்.
நான் அங்கவீனர்களுக்கு பக்கத்திலிருந்து வாழ்ந்ததில்லை. எனக்கு தெரிந்தவரை பெரிதாக எனது ஊரில் அங்கவீனர்கள் இல்லை. எனக்கு அடுத்த வகுப்பில் மட்டும் ஒருவன் இருந்தான்.
ஒரு கால் அவனுக்கு ஏலாது. தனக்கு ஒரு கால் ஏலாது என்று அவன்கவலைப்பட்டதை நான் அறியவில்லை. ஆனால் எல்லோரும் அவனை நொண்டி என்று சொல்வதை நினைத்து அவன் அழுததை பல தடவை பார்த்துள்ளேன்.
இறைவன்(இயற்கை) எம்மை எதுவித குறையுமில்லாமல் படைத்துள்ளான் அதற்கு அவனக்கு நன்றி சொல்லுவோம்.
இதை லெஸ்பியன் தலைப்புக்குத்தான் எழுதினேன்.
ஆனாலும் அதற்குள் போட்டு அந்த லூசுகளுடன் என்னால் மல்லுக்கட்ட முடியாது என்பதால். பரணியும் அங்கு கருத்து எழுதியிருப்பதால் இங்கு போடுகிறேன்.
பரணிக்கு எதிர்க்கருத்து இருந்தால் அதற்கும் பதிலளிக்க நான் தயார்

