06-17-2004, 03:05 PM
அரசுக்கு காய்ச்சல் 113 என்கிறார் ஜி.எல்.பீரிஸ்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் காய்ச்சல் 113 எனப்படும் கடுமையான நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் தேவைப்படும் ஆகக்குறைந்த பெரும்பான்மையான 113 ஆசனங்களைக் கொண்டிராத நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும் அவதிப்படுவதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பயமுறுத்தல், தாக்குதல்கள், இரகசிய பேரம் பேசல்கள் முதலான வழிமுறைகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை தன்பக்கம் இழுக்க அரசாங்கம் முயல்வதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன் காரணமாகவே, சமதான முயற்சிகள், பொருளாதார அபிவிருத்தி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் முதலான விடயங்களைப் புறந்தள்ளிவிட்டு அரசாங்கம் 113 நாடாளுமன்ற உறப்பினர்களைத் தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் பேராசிரியர் பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>