06-17-2004, 03:02 PM
யாழில் முகாம்களை பலப்படுத்தும் படையினர்!
யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படை முகாம்கள் படையினரால் பலப்படுத்தப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்படை முகாம்கள் மற்றும் காவலரண்கள் இரவிலேயே படையினரால் பலப்படுத்தப்படுவதாக அச்செய்திகள் மேலும் கூறுகின்றன.
முன்னர் நகரையண்டிய முகாம் பகுதியிலேயே படையினர் அதிகம் நிலை கொண்டிருந்ததாகவும், தற்போது குடாநாட்டின் எல்லா பகுதிகளிலும் படையினர் அதிகம் நடமாடுவதை அவதானிக்க முடிவதாகவும் யாழிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்து நான்கைந்து நாட்களாக இடம்பெறும்;;; இந்நடமாட்டமானது, இன்று நடைபெறவிருக்கும் கண்டன ஊர்வலத்தினை ஒழுங்கு செய்பவர்களை இனம் காண்பதற்காகவும், அவர்களை அச்சுறுத்தும் வகையிலும் இடம்பெறுவதாக அமையலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை, யாழ் குடாநாட்டின் வல்வெட்டித்துறை பகுதியில் தரையிறங்கு கலம் ஒன்று கடந்த இரண்டு நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்ட பின்னர் இத்தகைய கலமெதுவும் இப்பகுதியில் காணப்பட்டிருக்கவில்லை எனவும், இத்தரையிறங்கு கலம் மக்களை பெரிதும் சந்தேகத்துககும் அச்சத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>