06-17-2004, 03:00 PM
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இருவர் துர்நடத்தைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டி துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்
யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் இருவர், பல்கலைக்கழக வளாகத்துக்குள் துர்நடத்தைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டி, குறிப்பிட்ட இருவரையும் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றுமாறு கோரும் துண்டுப் பிரசுரங்கள் அங்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த விரிவுரையாளர்கள் இருவரும், பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், இதனை நேரில் கண்ட சாட்சிகள் நிரூபித்துள்ளதாகவும் தெரிவிக்கும் இந்தத் துண்டுப் பிரசுரங்கள், இவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.
இவ்விரண்டு விரிவுரையாளர்களும் நீண்ட நாட்களாகவே இத்தகைய நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும், இதுகுறித்து நிர்வாகம் கவலையீனமாக இருந்து வருவது வேதனையானது எனவும் அத்துண்டுப்பிரசுரம் தெரிவித்துள்ளது.
இந்த விரிவுரையாளர்களுள் ஒருவர், சில வருடங்களுக்கு முன்னரும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் எனவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>