06-17-2004, 02:59 PM
மட்டு. மாவட்டத்தில் மோதல்கள் இல்லை...! சிறிலங்கா அரச ஊடகங்களே குழப்புகின்றன: மட்டு. அம்பாறை அரசியல்துறை கண்டனம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மோதல்கள் இடம்பெற்று வருவதாக அரச ஊடகங்கள் தெரிவித்து வரும் பொயப்; பிரசாரங்கள் தொடர்பாக விடுதலைப்புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான ஊடகப் பிரசாரங்கள் சமாதான முன்னெடுப்புக்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கும் எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மட்டு. அம்பாறை அரசியல்துறையினரால் நேற்று விடுக்கப்பட்டுள்ள அறிக்கையின் முழு விபரமும் வருமாறு:-
சிறிலங்கா அரச ஊடகங்களிலும், தனியார் ஊடகங்களிலும் அண்மைக் காலமாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மக்கள் மத்தியில் பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் திட்டமிட்ட hPதியில் பல்வேறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இவ்வகையில் கடந்த சில நாட்களாக தொப்பிக்கல காட்டுப் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் கருணா குழுவினருக்கும் இடையே பெரும் மோதல்கள் நடந்து வருவதாகவும், 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இப் பகுதியில் இவ்வகையான எந்தவொரு மோதலோ அல்லது ஆள் இழப்புக்களோ ஏற்படவில்லையென்பதே உண்மையானதாகும். இந்நிலையில் அரச ஊடகங்களில் திட்டமிட்ட hPதியில் பரப்பப்பட்டு வரும் இவ்வகையான செய்திகளையிட்டு நாங்கள் எமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறான செய்தியின் உண்மைத் தன்மை பற்றித் தெளிவாக அறிந்து ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறோம்.
இத்தகைய போலிச் செய்திகளை உண்மையானவையென நம்ப வைப்பதற்கான முயற்சிகளும் சிறிலங்கா படைத்தரப்பினால் முடக்கிவிடப்படுவதாக நாங்கள் கருதுகிறோம்.
கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு பிரதேச எல்லைப் புறங்களிலுள்ள இராணுவ முகாம்களிலிருந்து தொடர்ச்சியான எறிகணை வீச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. பயிற்சி என்ற hPதியில் இராணுவத்தால் நடத்தப்படும் இந்த எறிகணை வீச்சுக்கள் அங்கே ஒரு மோதல் இடம்பெறுகிறது என்ற மாயத் தோற்றத்தைப் பிரதிபலிக்கின்றது.
மேலும் சிறிலங்கா அரச ஊடகச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மோதலின் போது உயிர் இழந்தவர்களின் 17க்கும் மேற்பட்ட சடலங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறாயின் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் மோதல் நிகழ்ந்துள்ளதா? என்ற வினாவும் இங்கே எழுகிறது.
தமிழீழ விடுதலைப்புலிகள் சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு அதில் நம்பிக்கை வைத்துள்ளதுடன், இதற்கு எவ்வித குந்தகமும், பாதகமும் ஏற்படாத வகையில் புரிந்துணர்வுடன் நடந்து வருகின்றனர்.
அண்மைக் காலமாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் இடம்பெறும் சம்பவங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளை வலிந்து யுத்தத்திற்கு இழுக்கின்ற சீண்டல் நடவடிக்கைகளாகவே கருத முடிகிறது.
இவ்வகையான நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் சமாதான முன்னெடுப்புக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இச் செய்தியினைப் பரப்பும் ஊடகங்கள் மக்கள் மத்தியில் ஒரு மூன்றாம் தரப்பாகச் செயற்பட்டு சமாதான நடவடிக்கைகளைப் பலவீனப்படுத்துவதாக நாம் கருத வேண்டியுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>