06-17-2004, 02:53 PM
வெளிநாட்டு தமிழ் வானொலிச் சேவையினை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு புலிகள் கோரிக்கை
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒலிபரப்பாகி வரும் வெளிநாட்டு தமிழ் வானொலிச் சேவையினை இடைநிறுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளவேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வன்னியில் நேற்று இடம்பெற்ற இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கருடனான சந்திப்பின் போதே, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
ஐரோப்பாவில் இருந்து ஒலிபரப்பாகும் இந்த தமிழ்ச் சேவை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு களங்கம் ஏற்படுத்துவதையே இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதோடு, தமிழ்த் தேசியத்துக்கு எதிரான கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசப்போவதாகக் கூறிவரும் அரசாங்கம், தமது உத்தியோகபூர்வ வானொலியின் ஊடாக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையை தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி..puthinam.com
----------------------
இந்த வானொலி இந்திய இலங்கை உளவுத்துறையினரின் உதவியுடன் தாய்மண்ணில் இருந்து தப்பியோடித் தலைமறைவாகி ஐரோப்பாவில் அடைக்கலம் அடைந்துள்ள தேசத்துரோகிகளால் சுயலாபம் கருதி நடத்தப்படுவதாகச் சந்தேகிக்கப்படுகிறது..அன்று இந்திய இலங்கை இராணுவத்தினதும் அரசுகளின் உதவியுடனும் கொழும்பில் இருந்து ஒரு மக்களின் குரல்...இன்று அதே கூட்டம் ஐரோப்பாவில் அடைக்கலம் தேடிக் கொண்டு தமிழ் தேசியம், தேசத்தையும் இனத்தையும் அதன் காப்பாளர்களையும் கொச்சைப்படுத்த இதனை நடத்துவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>