06-17-2004, 01:16 AM
சமாதானத்தைக் குழப்பும் தீய சக்திகள் ஊடகங்களில் பொய் பிரசாரங்கள்
சமாதானத்தைக் குழப்பும் தீயசக்திகள் ஊடகங்களில் சில பொய்யான செய்திகளைப் பரப்பி மக்களை குழப்ப நிலைக்கு இட்டுச் செல்வதாக விடுதலைப் புலிகளின் மட்டு.அம்பாறை அரசியல் பிரிவு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெண்டுகள் சேனைப்பகுதியில் மோதல்கள் இடம்பெற்று வருவதாகப் பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளமை கவலை தரும் விடயமாகும்.
நேற்று வவுணதீவில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடந்த சந்திப்பின் போது விடுதலைப்புலிகள் இத்தாக்குதல் சம்பவத்தை ஒத்துக் கொண்டதாகவும், ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் செயற்படுகின்றன.
இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>