06-15-2004, 08:52 PM
<img src='http://www.lttepeacesecretariat.com/mainpages/images/i15064_01.jpg' border='0' alt='user posted image'>
சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் ஐ.நா முகவர் அமைப்பு பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளுடன் சந்திப்பு
வடக்கு, கிழக்கில் பணியாற்றும் அனைத்துச் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும், ஐ.நா.முகவர் அமைப்புகளுக்குமான கலந்துரையாடல் இன்று காலை 11.00 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திட்டமிடலுக்கும், மேம்பாட்டுக்குமான செயலகத்தில் நடைபெற்றது.
திட்டமிடல் அபிவிருத்திச் செயலகப் பணிப்பாளர் திரு.தூயவன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.சு.ப.தமிழ்ச்செல்வன், அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் திரு.சோ.தங்கன், திட்டமிடல் அபிவிருத்திச் செயலகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.மாறன், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களினதும் ஐ.நா. நிறுவனங்களின் இணைப்பாளர் திரு.தியாகராஜா, அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் செல்வி.தமிழினி, சமாதானச் செயலகப் பணிப்பாளர் திரு.புலித்தேவன் மற்றும் அனைத்து சர்வதேச அரசார்பற்ற நிறுவனங்களும், ஐ.நா. முகவர் நிறுவனங்களும் கலந்து கொண்டன.
இக்கூட்டம் முடிவடைந்த பின்னர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் வழங்கிய பதில்கள் வருமாறு:- கேள்வி: இன்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயம் என்ன என்று கூறுவீர்களா?
பதில்: இன்று நாங்கள் எமது தாயகப் பிரதேசத்திலே மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற ஐ.நா. அமைப்புக்களையும் தொண்;டர் ஸ்தாபனங்களையும் அழைத்து இன்றைய நிலைப்பாடு சம்மந்தமாக கலந்துரையாடியிருக்கின்றோம்.
முக்கியமாக இங்கே எமது மக்களுக்காக முன்னெடுக்கப்படுகின்ற மனிதாபிமானப் பணிகளை செயற்படுத்தப்படுத்தப்படுவது குறித்தும், உள்ளுர் ஸ்தாபனங்களோடு இணைந்து எமது மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய செயற்பாடுகளை ஆராய்வது குறித்தும் கலந்தாலோசித்துள்ளோம்.
முக்கியமாக தமிழர் தாயகத்திலே முன்னெடுக்கப்பட வேண்டிய மனிதாபிமான பணிகளை எந்த வகையில் எப்படியான ஒருங்கிணைப்போடு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து கலந்துரையாடினோம்.
கேள்வி: உதவி வழங்கும் நாடுகள் தமது உதவிகளை அதிகரிக்குமா?
பதில்: நாங்கள் இந்தக் கலந்துரையாடலில், தொண்டர் ஸ்தாபனங்கள், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து மட்டுமே கலந்துரையாடினோம். ஏற்கனவே நடைபெறுகின்ற மனிதாபிமானப் பணிகளை உள்ளுர் அமைப்புக்களோடு இணைத்து முன்னெடுத்துச் செல்கின்ற வகையில் ஒரு சிறப்பான செயல்திட்டத்தை ஏற்படுத்துகின்ற நோக்கோடும் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
கேள்வி: சமாதான நடவடிக்ககைள் தற்பொழுது எந்த நிலையில் உள்ளது?
பதில்;: ஏற்கனவே நாம் தெரியப்படுத்தியிருக்கின்றோம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டுமென்று இல்லை. இன்று சமாதான முன்னெடுப்புக்கள் எல்லாம் ஒரு முடக்கமான கேள்விக்குறியில் தள்ளப்பட்டிருக்கின்றன.
நன்றி.... புதினம் மற்றும் விடுதலைப்புலிகளின் சமாதான தலைமைச் செயலக இணையத்தளம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>