06-15-2004, 08:47 PM
ஜனாதிபதி முரண்பாடான நிலைப்பாட்டால் சமாதான பேச்சினை மீள ஆரம்பிப்பது கடினம்: நெதர்லாந்து அரசாங்க தூதுக்குழுவிடம் தமிழ்க் கூட்டமைப்பினர் தெரிவிப்பு
'ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பேச்சுவார்த்தைக்கான அடிப்படை விடயங்களில் தீர்க்கமான முடிவினை எடுக்காது, முரண்பாடான நிலையினைக் கடைப்பிடித்தால் சமாதானப் பேச்சுவார்த்தையினை மீண்டும் ஆரம்பிப்பதென்பது கடினமான விடயமாக அமைந்து விடும்" என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நெதர்லாந்து தூதுக்குழுவினரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நெதர்லாந்து நாட்டின் அரசாங்க தூதுக் குழுவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நேற்றுக்காலை சந்தித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினர். கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதரகத்தில் நடைபெற்ற இச் சந்திப்பில் அந்நாட்டின் அரசாங்க பிரதிநிதிகளான ஜெசில்லா கொவ்லண்ட், ஹரிஜேஜே வால்டிஜ்க் ஆகியோரையே கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடினர்.
சமாதான முயற்சியின் நிலைப்பாடு, தற்போதைய அரசியல் சூழ்நிலை, இடைக்கால நிர்வாக சபை என்பன குறித்தும் கூட்டமைப்பினரிடம் நெதர்லாந்து குழுவினர் கேட்டறிந்து கொண்டனர்.
சமாதானப் பேச்சுவார்த்தையினை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாடு எமக்கு சந்தேகமளிப்பதாகவுள்ளது. கடந்த வாரம் எம்மை சந்தித்து பேசிய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இடைக்கால தன்னாட்சி அதிகார சபை குறித்து பேச்சு நடத்தி அதற்கான ஒப்பந்தத்தினை மேற்கொண்டு நடைமுறைப்படுத்திய பின்னரே இறுதி தீர்வு குறித்து பேசத்தயார் என்று தெரிவித்திருந்தார்.
இடைக்கால தன்னாட்சி அதிகார சபை குறித்து பேச்சு நடத்தி அதற்கான ஒப்பந்தத்தினை மேற்கொண்டு நடைமுறைப்படுத்திய பின்னரே இறுதி தீர்வு குறித்து பேசத்தயார் என்று தெரிவித்திருந்தார்.
விடுதலைப் புலிகள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையினை கோருவதனால் தமது நிலைப்பாட்டினை மாற்றியுள்ளதாக தெரிவித்திருந்தார் ஆனால் இவ்விடயம் குறித்து ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையில், முரண்பாடான நிலை காணப்படுகிறது. இத்தகைய முரண்பாடு சமாதான முயற்சிக்கு பாதகமாகவே அமையும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நெதர்லாந்து பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எம்மிடம் இடைக்கால நிர்வாக சபை குறித்து முதலில் பேச தயார் என ஜனாதிபதி தெரிவித்த அதேவேளையில் ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையில் இறுதி தீர்வுக்கான பேச்சுவார்த்தையின் போது இடைக்கால நிர்வாக சபைகுறித்த பேச்சுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இத்தகைய முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடு சமாதான பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கு உதவப்போவதில்லை என்றும் கூட்டமைப்பினர் விளக்கிக் கூறியுள்ளனர்.
வட - கிழக்கில் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வழங்கப்படுவது அவசியமாகும். யுத்தத்தால் பாதிப்புக்குள்ளான வட - கிழக்கை புனரமைக்க உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும் கூட்டமைப்பினர் விரிவாக எடுத்து விளக்கியுள்ளனர்.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எதிர்வரும் மாகாண சபை தேர்தலுக்காகவோ ஜே.வி.பி.யை சமாளிப்பதற்காகவோ, இத்தகைய முரண்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதாக சந்தேகமெழுகின்றது எனவும் இச் சந்திப்பில் கூட்டமைப்பினர் எடுத்துக் கூறியுள்ளனர்.
இச் சந்திப்பில் கூட்டமைப்பின் எம்.பி. க்களான ஜோசப் பரராஜசிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர். இலங்கையின் நிலைவரம் குறித்து அறிந்து வரும் நெதர்லாந்து குழுவினர் தமது அரசாங்கத்துக்கு தற்போதைய நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>