06-15-2004, 08:21 PM
'போரிடும் வல்லமை சேர்ப்போம்" வெளியீட்டு விழாவில் தேசியத் தலைவர் கலந்துகொண்டு சிறப்பிப்பு!
'போரிடும் வல்லமை சேர்ப்போம்" இறுவெட்டு வெளியீட்டு விழாவில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவினரால் உருவாக்கப்பட்ட இவ் இறுவெட்டை வைத்தியக் கலாநிதி அஜந்தன் அவர்கள் வெளியிட்டு வைக்க தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அதனைப் பெற்றுக் கொண்டார்.
விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவின் உருவாக்கத்தில் புலிகளின் குரல் சிட்டு கலையகத்தின் வெளியீடாக 'போரிடும் வல்லமை சேர்ப்போம்" எனும் இறுவெட்டு நேற்று கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது.
இதற்கான இசையுருவாக்கத்தை இளைய இசையமைப்பாளரும் போராளியுமான செயல்வீரன் அவர்கள் ஆக்கியுள்ளார். நிதர்சனப் போராளி வீரா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக முதன்மைச் சுடரினை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் ஏற்றிவைத்ததேடு இதுவரை காலமும் வீரச்சாவடைந்த மருத்துவப் பிரிவுப் போராளிகளை நினைவுகூரும் முகமாக வரையப்பட்டிருந்த பொதுப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மருத்துவப்பிரிவுப் போராளி மாவீரான் கப்டன் யாழ்வேலின் திருவுருவப்படத்திற்கான ஈகச் சுடரினை தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன் தியாகம் ஏற்றி வைத்ததோடு மலர்மாலையையும் அணிவித்தார்.
தொடர்ந்தும் மருத்துவப்பிரிவுப் பெண் போராளிகளின் மாவீரர் வணக்க நடனத்துடன் உள்ளரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. இவ் வெளியீட்டு விழாவின் வெளியீட்டு உரையினை விடுதலைப் புலிகளின் வைத்தியக் கலாநிதி அஜந்தன் அவர்கள் ஆற்றினார்.
தொடர்ந்தும் வைத்தியக் கலாநிதி அஜந்தன் அவர்கள் இறுவெட்டை வெளியிட்டு வைக்க தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அதனைப் பெற்றுக் கொண்டார் அதனைத் தொடர்ந்து இவ்வுருவாக்கத்தில் பங்கெடுத்த அனைத்துக் கலைஞர்களும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.
'போரிடும் வல்லமை சேர்ப்போம்" இறுவெட்டின் மதிப்பீட்டு உரையினை விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் திரு வே. பாலகுமாரன் அவர்கள் நிகழ்த்தினார். இறுதியாக நன்றிவுரையினை யாழ்வேல் மருத்துவமனைப் பொறுப்பாளர் திரு சிவா அவர்கள் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வுக்கு போராளிகள், பொறுப்பாளர்கள், தளபதிகள், வைத்தியர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவப் பிரிவுப் போராளிகள் கடந்த காலங்களில் விடுதலைப் போராட்டத்தின் சமர்க்களங்களிலெல்லாம் தாம் மனப்பதிவுகளாகிய பலவிடயங்களும், அவர்களின் உள்ளத்து உணர்வுகளும் இங்கு பாடல் வடிவம் பெற்று உயிரூட்டப்பட்;டிருக்கின்றன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இப்பாடல்கள் வரலாற்றுப் பதிவுகளாகவும், மீட்டப்படும் நினைவுகளாகவும் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
நன்றி புதினம்...& ஈழநாதம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>