07-09-2003, 12:54 PM
அமெரிக்க கண்ணிவெடி அகற்றும் நிறுவனமாகிய ~றொங்கோ| அமைப்பு யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது.
இதுபற்றி ஆராய்வதற்கென அந்த அமைப்பின் செயற்றிட்ட முகாமையாளர் வில்லியம் ஜே.றீட் நேற்று யாழ்.வந்தார்.அவருடன் வாஷ~pங்ரனில் உள்ள மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் அதிகாரியான போரா நிற்லன்டும் வந்தார்.
அமெரிக்க கண்ணிவெடி அகற்றும் ~றொங்கோ| அமைப்பின் குழுவினர் கடந்த சில மாதங்களாக யாழ்.குடாநாட்டில் சரசாலைப் பகுதியில் கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இக்குழுவினரின் ஒப்பந்தகாலம் கடந்தமாதம் 30ஆம் திகதி யுடன் முடிவடைந்தது. எனினும், யாழ்.குடாநாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையையும், மீள்குடியமர்வையும் கருத்திற் கொண்டு கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளைத் துரித மாக்குவதற்கு ~றொங்கோ| அமைப்பு தொடர்ந்து இங்கு கண்ணி வெடியகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டுமென யாழ். அரச அதிபர் எஸ்.பத்மநாதன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதற்கமைய, ~றொங்கோ| அமைப்பை மீண்டும் இங்கு மிதி வெடியகற்றும் நடவடிக்கையில் ஈடுபடுத்துவது தொடர்பாக நேற்று யாழ்.வந்த குழுவினர் அரச அதிபரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பில் அமெரிக்கத் து}தரக அரசியல் அதிகாரி கிறிஸ்லோங், பொதுமக்கள் தொடர்பு அதிகாரி பத்மினி இராஜதுரை ஆகி யோரும் கலந்துகொண்டனர்.இலங்கை - அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஒப்பந்தத்திற்கு அமைவாக அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவுடன் இணைந்து இங்கு கண்ணி வெடிஅகற்றும் பணியில் ஈடுபடுவது தொடர்பாகவும், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் இராணுவ பொறியியல் பிரிவுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது தொடர்பாகவும் ஆராயும் நோக்குடனே அவர்கள் விஜயம் செய்துள்ளதாக யாழ்.அரச அதிபர் தெரிவித்தார்.இக்குழுவினர் யாழ்.செயலகத்தில் உள்ள கண்ணிவெடி அகற்றும் பிரிவின் இணைப்பாளரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். அதன்பின், சரசாலை, பளை ஆகிய பகுதிகளுக்கும் சென்று கண்ணிவெடி புதைக்கப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டனர். .