Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்தமிழரின் அகதி வாழ்க்கையின் ரகசியம் என்ன...??!
#1
செய்தி...

சட்ட விரோதமாக இத்தாலி செல்ல முற்பட்ட 38 தமிழ் இளைஞர்கள் கைது

சட்ட விரோதமாக இத்தாலி செல்ல முற்பட்ட தமிழ் இளைஞர்கள் 38 பேர் சிறிலங்கா பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை இன்று காலை மாத்தறை வெலிகம பகுதியில் வைத்து சிறிலங்கா பொலிசார் கைது செய்துள்ளனர்.

இத்தமிழ் இளைஞர்கள் யாழ்ப்பாணம், திருக்கோணமலை, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிகம நகர்ப்பகுதியிலிருந்து வெலிகம மீன்பிடித் துறைமுகம் ஊடாக இத்தாலி செல்வதற்காக பாரஊர்தி ஒன்றில் சென்ற வேளையே இவர்கள் சிறிலங்கா பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒவ்வொருவரும் சராசரி மூன்று தொடக்கம் நான்கு இலட்சம் ரூபாய்களைச் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சட்ட விரோதமாக இத்தாலி செல்ல முற்பட்ட 400 சிங்கள இனத்தவர்கள் சோமாலியாவில் அநாதரவாக விடப்பட்டுள்ள நிலையில் அங்கு அவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

<span style='font-size:16pt;line-height:100%'>puthinam.com </span>


ஈழத்தமிழரின் அகதி வாழ்க்கையின் ரகசியம் என்ன...??!

அரசியல் புகலிடமா.....பொருளாதார புகலிடமா...தற்போது தாயகத்தில் அரசியல் நெருக்கடி ஓரளவேணும் அமைதியாக இருக்கின்ற நிலையிலும் மேற்குலக நாடுகளில் அகதியாக தஞ்சம் கோரும் ஈழத்தமிழர்களினது செயற்பாடு...குறிப்பாக இளைஞர்களின் செயற்பாடு தொடர்வதன் மர்மம் என்ன...???!

இது ஈழத்தமிழரின் புலம்பெயர்வின் உண்மை நிலையை செப்புமா...உண்மையில் தாயக விடுதலை... உரிமை என்பது தாயகத்தில் இருந்துதான் பெறப்பட வேண்டுமே தவிர மேற்கில் இருந்தல்ல....எனவே தமிழர்கள் போரைச்சாட்டாக வைத்துப் புலம்பெயர்வதென்னவோ....சுகத்திற்கும் சுகபோகத்திற்கும் என்பதாகவே படுகிறது.....இப்படிப்பட்டவர்களால் உண்மையான இன விடுதலையை தாயகத்தில் ஈட்டமுடியுமா...????!

இது தாயக்கத் தமிழர்களின் கோரிக்கைகளையும் முயற்சிகளையும் அவர்களின் சந்ததிகளின் கல்வி மற்றும் சமூகவியல் வளச்சியையும் எந்தளவு தூரம் பாதிக்கும் அல்லது ஊக்கிவிக்கும்....எங்கே உங்கள் கருத்துக்களையும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்களேன்....

:!: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
ஈழத்தமிழரின் அகதி வாழ - by kuruvikal - 06-13-2004, 07:24 PM
[No subject] - by kuruvikal - 06-13-2004, 07:33 PM
[No subject] - by Mathivathanan - 06-13-2004, 07:48 PM
[No subject] - by kavithan - 06-14-2004, 03:13 AM
கஸ்டம்,கடன் - by kavithan - 06-14-2004, 03:32 AM
[No subject] - by Eelavan - 06-14-2004, 08:18 AM
[No subject] - by kuruvikal - 06-14-2004, 03:33 PM
[No subject] - by tamilini - 06-14-2004, 10:25 PM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 06:44 PM
[No subject] - by Mathivathanan - 06-15-2004, 07:06 PM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 07:19 PM
[No subject] - by Mathivathanan - 06-15-2004, 07:28 PM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 07:42 PM
[No subject] - by Mathivathanan - 06-15-2004, 07:51 PM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 08:17 PM
[No subject] - by Mathivathanan - 06-15-2004, 08:32 PM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 08:37 PM
[No subject] - by Mathivathanan - 06-15-2004, 08:50 PM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 08:57 PM
[No subject] - by Mathivathanan - 06-15-2004, 09:25 PM
[No subject] - by kuruvikal - 06-15-2004, 09:48 PM
[No subject] - by vallai - 06-16-2004, 12:55 PM
[No subject] - by Mathivathanan - 06-16-2004, 07:36 PM
[No subject] - by tamilini - 06-16-2004, 10:09 PM
[No subject] - by kuruvikal - 06-17-2004, 12:44 AM
[No subject] - by vallai - 06-17-2004, 12:41 PM
[No subject] - by kuruvikal - 06-17-2004, 02:03 PM
[No subject] - by Mathivathanan - 06-17-2004, 02:11 PM
[No subject] - by kuruvikal - 06-17-2004, 02:29 PM
[No subject] - by vallai - 06-17-2004, 02:45 PM
[No subject] - by kuruvikal - 06-17-2004, 03:57 PM
[No subject] - by tamilini - 06-17-2004, 09:37 PM
[No subject] - by kavithan - 06-17-2004, 10:36 PM
[No subject] - by vallai - 06-18-2004, 06:16 AM
[No subject] - by tamilini - 06-18-2004, 10:47 AM
[No subject] - by kuruvikal - 06-18-2004, 02:16 PM
[No subject] - by vallai - 06-18-2004, 02:19 PM
[No subject] - by kuruvikal - 06-18-2004, 02:26 PM
[No subject] - by vallai - 06-18-2004, 02:33 PM
[No subject] - by kuruvikal - 06-18-2004, 07:56 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)