06-11-2004, 06:25 PM
பேச்சுகளை முன்னெடுப்பதிலும், யுத்த நிறுத்தத்தை பேணுவதிலும் அழுத்தங்களுக்குள்ளாகும் ஜனாதிபதி
சமாதான முயற்சிக்கான எந்தவொரு தயாரிப்பும் பதற்றங்களை அதிகரிக்கும்
இலங்கையில் புதிதாக பதவியேற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம், நாட்டில் 20 வருட உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவு கட்டுவதற்காக விடுதலைப்புலிகளுடனான இடைநிறுத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. ஒரு இராஜதந்திர நடவடிக்கைகளின் பரபரப்புகளை அடுத்து, அரசாங்கமும், விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான தமது விருப்பத்தைச் சுட்டிகாட்டியுள்ளனர்.
ஜனாதிபதி குமாரதுங்க, தற்போதைய யுத்த நிறுத்தத்தை பேணுவதிலும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதிலும் கணிசமான அழுத்தங்களுக்குள்ளாகியுள்ளார். தெற்காசியாவிற்கான அமெரிக்கத் துணை இராஜாங்கச் செயலாளர் கிறிஸ்டினா ரொக்கா, அண்மையில் கொழும்பு வந்தபோது, இலங்கைச் சமாதான முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிக்குமாறு எல்லாக் கட்சிகளையும் வலியுறுத்தினார். இது உலகின் ஏனைய பாகங்களில் ஒரு எடுத்துக் காட்டாக நோக்கப்படும் என அவர் பிரகடனம் செய்தார். இலங்கை உள்நாட்டு யுத்தம் மற்றும் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்ற நிலைமை போன்ற பிராந்திய மோதல்கள், தெற்காசியாவில் அதிகரித்து வரும் வார்pங்டனின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு குறுக்கே நிற்பதால் அவற்றைத் தவிர்த்துக் கொள்வதில் அது அக்கறை கொண்டுள்ளது.
ரொக்கா இலங்கையில் இருந்த அதேசமயம், இலங்கை வெளியுறவு அமைச்சர் லடீ;மன் கதிர்காமர், புர்; நிர்வாகத்தின் உயர்மட்ட அலுவலர்களுடன் ஐந்து நாள் பேச்சுவார்த்தைக்காக வார்pங்டனில் இருந்தார். ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிமிரப்பைச் சூழ்ந்துள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலும், கதிர்காமர் பெயரளவிலான பயங்கரவாதம் மீதான யுத்தத்திற்கு கொழும்பின் ஆதரவை மீண்டும் உறுதி செய்தார். அதற்குப் பிரதியுபகாரமாக, விடுதலைப்புலிகள் முழுமையாக நிராயுதபாணிகளாகும் வரை வார்pங்டன் அதைப் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்காது என்ற உத்தரவாதத்தை அவர் பெற்றுக் கொண்டார். அமெரிக்க மிலேனியம் கணக்கீட்டுத் திட்டத்தின் கீழ் மேலதிகமாக 100 மில்லியன் டொலர் உதவியைப் பெற்றுக் கொள்ளத் தகுதிவாய்ந்த 16 நாடுகளில் இலங்கையையும் சேர்த்துக் கொள்வதற்காக ஒரு சிறிய வைபவமும் இடம்பெற்றது.
ஜனாதிபதி குமாரதுங்கவின் }லங்கா சுதந்திரக் கட்சியும் (}.ல.சு.க.) சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் பல சிறு கட்சிகளின் கூட்டமைப்பான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது சமாதான முன்னெடுப்புகள் சம்பந்தமாக இனவாத பதற்ற நிலைமைகளைத் தூண்டிவிடுவதன் மூலமும், ஐ.தே.மு. வின் பொருளாதார மறுசீரமைப்புத் திட்டத்திற்கு எதிரான பரந்த அதிருப்தியைச் சுரண்டிக் கொண்டதன் மூலமும் ஏப்ரல் 2 தேர்தலில் வெற்றி பெற்றது. எவ்வாறெனினும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பொருளாதார மறுசீரமைப்பை முன்னெடுப்பதற்கான் சர்வதேச நாணய நிதியத்தின் நெருக்குதல்களுக்கு முகம் கொடுத்துள்ளது. அது தமது வாக்குறுதிகளான உர மானியம் மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு செலவு செய்யத் தள்ளப்பட்டுள்ளதோடு, சர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் எண்ணெய் விலையையும் எதிர்நோக்குகின்றது.
'பு@ம் பேர்க்" ஏஜென்சிக்கு வழங்கிய ஒரு பேட்டியில் நிதி அமைச்சர் சரத் அமுனுகம, அரசாங்கம் வரவு செலவுப் பற்றாக்குறையை குறைக்கும் ஒரு முயற்சியாக }லங்கா ரெலிக்கொம், }லங்கன் எயர் லைன்ஸ் மற்றும் ஏனைய கம்பனிகளில் அதன் பங்கை விற்றுத் தள்ளவுள்ளதாகச் சுட்டிக் காட்டினார். சமாதான முயற்சிகளிலான எந்தவொரு பின்னடைவும் சர்வதேச உதவி, கடன் மற்றும் முதலீட்டில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, அரசாங்கத்தின் நிதி நெருக்கடியையும் மோசமாக்கும்.
விடுதலைப்புலிகளின் உடன்பாடு
தமது பங்கிற்கு விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கான தமது ஆதரவை உடனடியாக வெளிப்படுத்தினர். விடுதலைப்புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளரான அன்ரன் பாலசிங்கம், அண்மையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலான வன்னிப் பிராந்தியத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது, புதிய அரசாங்கத்தின் ஆரம்ப முயற்சிகள் 'மிகவும் திருப்திகரமானது" எனத் தெரிவித்தார். அவரது கருத்துகள் பேச்சுகளுக்கான கட்டமைப்பை உருவாக்க முயற்சித் வரும் நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜோன் பீற்றர்சன் உட்பட நோர்வே அலுவலர்களுடனான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே வெளியானது.
விடுதலைப்புலிகள் குமாரதுங்கவுடனும், ஜே.வி.பி.யுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது சம்பந்தமான தமது எதிர்ப்பை தேர்தலுக்கு முன்னதாகவே கைவிட்டு விட்டது. பத்திரிகையாளர் மாநாட்டில் குமாரதுங்கவின் போலியின்மையைப் பற்றி பாலசிங்கத்திடம் கேட்ட போது, 'ஜனாதிபதி சமாதானப் பேச்சுகளை அவசரமாகத் தொடங்குவதில் அக்கறை காட்டுவது ஏன் என்பது எமக்கு நன்றாகத் தெரியும். மற்றும் அவரது நேர்மையைப் பற்றி கேள்வியெழுப்பும் அல்லது எமது நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் அல்லது அவரைப் பகிரங்கமாகக் கண்டனம் செய்யும் தேவை எமக்கில்லை" என பிரகடனப்படுத்தினார்.
கொழும்பு அரசாங்கத்தைப் போலவே, விடுதலைப்புலிகளும் நிதி நெருக்கடி களையும் மற்றும் அடிப்படை வசதிகள் வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் அழிவுற்றவற்றை மீண்டும் கட்டியெழுப்புதல் ஆகியவற்றில் நிலவும் தொடர்ச்சியான பற்றாக்குறைகளையிட்டு பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர். விடுதலைப்புலிகள் வாக்குறுதியளிக்கப்பட்ட சில நிதியுதவிகளைப் பெறுவதில் நம்பிக்கையற்றுள்ள அதேவேளை, உள்@ர் ஜனங்களின் மத்தியில் தமது சொந்த ஆதரவைப் பெரிதாக்கிக் கொள்வதன் பேரில், அது சிதறாமல் கட்டுப்படுத்த வேண்டியும் உள்ளது. அதன் பெறுபேறாக எந்தவொரு பேச்சுவார்த்தையும் வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலான ஒரு இடைக்கால நிர்வாகத்துக்கான பிரேரணைகளான இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையை அமைப்பதை இலக்காகக் கொள்ள வேண்டுமென வலியுறுத்துகின்றது.
ஆயினும், இடைக்கால நிர்வாக சபைக்கான கோரிக்கையை விடுதலைப்புலிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான தற்போதைய பிளவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தன்னாட்சி அதிகார சபை பற்றிய பேச்சுகளில் அக்கறை செலுத்தியதற்காகக் கூட ஐ.தே.மு. வை துரோகிகளாகக் கண்டனம் செய்ததால், இந்த விடயம் தொடர்பாக குமாரதுங்கவால் வழங்கப்படும் எந்தவொரு சலுகையும் புதிய அரசாங்கத்துக்குள் பதற்ற நிலைமைகளை உக்கிரமாக்கும். விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் முயற்சியில் தன்னாட்சி அதிகாரசபை பற்றி கலந்துரையாடுவதற்காக குமாரதுங்க விருப்பம் தெரிவித்த போதிலும், அது யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இறுதியான அரசியல் உடன்பாடுகள் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளின் ஒரு பாகமாக மாத்திரமே இருந்தது. குமாரதுங்கவின் பிரேரணைகளின் இறுதி விளைவு எந்தவொரு 'இடைக்கால நிர்வாகசபையும்" அமைக்கப்படுவதை காலவரையறையற்று தாமதமாக்குவதாகவே அமையும். இதையே விடுதலைப்புலிகள் உடனடியாக நிராகரித்தனர்.
சமாதானப் பேச்சுகளை மீண்டும் தொடங்குவதற்காக முயற்சிப்பதன் மூலம் குமாரதுங்க ஒரு நெருக்கடியான பாதையில் பயணிக்கின்றார். விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகையும் அண்மைய மாதங்களாக அவர் தங்கியிருக்கும் முக்கிய தட்டுகளின் இராணுவ, மற்றும் சுதந்திரக்கூட்டமைப்பில் இப்போது அங்கம் வகிக்கும் ஜே.வி.பி. போன்ற சிங்களத் தீவிரவாதக் குழுக்கள் எதிர்ப்பை உடனடியாகத் தூண்டி விடும்.
சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற சபாநாயகருக்கான வேட்பாளர் தோல்வியடைந்ததையடுத்து அதன் பலவீனம் அம்பலத்துக்கு வந்தது. குறிப்பிடத்தக்க வகையில் அதேதினம் சமாதான முன்னெடுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கையை குமாரதுங்க தொடங்கினார். எதிர்க்கட்சியான ஐ.தே.மு. வெற்றிபெறவிருந்த நிலையில், குமாரதுங்கவின் இலக்கு, தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை நாடுவதும், அதன் மூலம் தனது அரசியல் பாதுகாப்பு ஜே.வி.பி. மற்றும் அமைப்புகளில் தங்கியிருப்பதை குறைத்துக் கொள்வதாகவும் இருந்தது. ஆயினும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் சுதந்திரக் கூ ட்டமைப்பிற்கு ஆதரவளிக்கவில்லை.
ஐ.தே.மு. பேச்சாளரும், முன்னைய அரசாங்கத்தின் பிரதான பேச்சுவார்த்தையாளருமான ஜீ.எல்.பீரிஸ், எதிர்க்கட்சி சுதந்திரக் 'கூட்டமைப்பின் பாசாங்குகளை ஆதரிக்காது. அது பாராளுமன்றப் பெரும்பான்மையை அடைவதற்காக சமாதான முன்னெடுப்புகளை ஒரு சூழ்ச்சித் திட்டமாகப் பயன்படுத்துவதோடு, நிதி உதவியளிக்கும் நாடுகளிடமிருந்து மிகவும் அவசியமான நிதிகளைப் பெற்றுக் கொள்ளவும் பயன்படுத்துகின்றது" என பிரகடனம் செய்தார். அரசியல் தீர்வு காண்பது பற்றிய விடயத்தில் }.ல.சு.க. மற்றும் ஜே.வி.பி. ஆகியவற்றுக்கிடையிலான கூர்மையான பிளவுகளை ஐ.தே.மு. முதலில் சுட்டிக்காட்டியது. ஜே.வி.பி. வடக்கு, கிழக்கில் மாகாண மட்டத்தில் வரையறுக்கப்பட்ட அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் }.ல.சு.க.வின் திட்டத்தை தொடர்ச்சியாக எதிர்க்கின்றது.
இந்த எல்லாவிதமான பதற்றங்களும் விடுதலைப்புலிகளுடனான பேச்சுகளுக்கான எந்தவொரு தயாரிப்பும் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் நிச்சயமாக உக்கிரமடையும். கடந்த வருடம் தோன்றிய அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்குப் பதிலாக, குமாரதுங்க முக்கிய கொள்கைகளை அமுல்படுத்த முயற்சிக்கும் ஒரு மிகவும் ஸ்திரமற்ற சிறுபான்மை அரசாங்கத்திற்குத் தலைமை வகிக்கின்றார். இந்தக் கொள்கைகள் கடந்த இரு வருடங்களாகக் கடுமையான எதிர்ப்புக்குள்ளாகின. அது மேலதிக அரசியல் குழப்பத்திற்கான வழி முறையாக அமையும்.
Thinakkural

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>