06-11-2004, 06:18 PM
பவுத்த மதத்திற்கு சோதனைக் காலம்! - நக்கீரன்
சிறீலங்காவின் 13வது நாடாளுமன்றம் என்ன மூகூர்த்தத்தில் கூடியதோ தெரியாது அது கூடிய ஒவ்வொரு முறையும் அமளி துமளியில் முடிந்துள்ளது.
அமளி துமளி கடந்த ஏப்பிரல் 22 அன்று நாடாளுமன்றம் சபாநாயகர் ஒருவரை தெரிவு செய்யக் கூடியபோதே தொடங்கிவிட்டது. அவையில் தமிழர் தேசிய முன்னணி நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு.இரா சம்பந்தன் 'யாழ்ப்பாண மாவட்டத்தில் பழுதான வாக்குகளைவிட (21,233) குறைவான எண்ணிக்கை வாக்குகளை (18,612) பெற்ற இபிடிபி செயலாளர் டக்லஸ் தேவனந்தாவை அமைச்சராக்கியது யாழ்ப்பாண மக்களை அவமானப் படுத்தும் செயல்' என்று குறிப்பிட்ட போது சபையில் அமளி துமளி ஏற்பட்டது.
பின்னர் அரசுக்கு சார்பாக வாக்களித்த சிங்கள ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்த இரண்டு தேரர்கள் பேச எழுந்தபோது அதே கட்சியைச் சேர்ந்த மி;குதி ஏழு தேரர்கள் ஒரே நேரத்தில் பேச முற்பட்டபோது மீண்டும் சபையில் அமளி துமளி ஏற்பட்டது. சபாநாயகர் தெரிவில் திரு. லொக்கு பண்டாரவுக்கு ஆதரவாக வாக்களித்த வண.அத்துரேலியா ரத்தன பேச எழுந்தபோது அவர் மீது ஆளும்கட்சி உறுப்பினர்கள் கோப்புக்கள், காகிதங்கள் போன்றவற்றை எடுத்து வீசினர். அவர் பேசி முடிக்கு மட்டும் இந்தத் தாக்குதல் தொடர்ந்தது.
கடந்த செவ்வாய்க் கிழமை (யூன் 8) நாடாளுமன்றம் கூடிய போது சபையில் மீண்டும் அமளி துமளி மட்டுமல்ல காடைத்தனமும் இடம்பெற்றது.
சிங்கள ஹெல உறுமய உறுப்பினரான வண. ரத்தொளுவ ரத்னசீக தேரர் தமது பதவியை இராஜீனாமா செய்து விட்டதால் அவரது இடத்திற்கு நியமிக்கப்பட்ட வண. அக்மீமன தயாரத்ன தேரர் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார் என சபாநாயகர் அறிவித்தார்.
இதனை ஆளுங்கட்சியின் முதன்மை அமைப்பாளரும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் ஜே.வி.பியின் விமல் வீரவன்ஸவும் கடுமையாக ஆட்சேபித்தனர்.
'என்னைப் பலவந்தப்படுத்தியே பதவி விலக வைத்தனர் என ரத்தொளுவ ரத்னசீக கூறுகிறார். ஆகவே அவரது விலகலை ஏற்றுக் கொள்வதை நாம் ஆட்சேபிக்கின்றோம். பலவந்தமாகப் பெறப்பட்ட விலகல் கடிதம் செல்லுபடியாகாது. அவரது இடத்திற்கு வேறு ஒருவரை நியமிக்க முடியாது. மேலும் அவர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு ஒன்றைப் பெற்றுள்ளார். நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி புதியவர் ஒருவர் பதவிப் பிரமாணம் செய்ய முடியாது. அதனை அனுமதிக்கவும் முடியாது' என அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதனை அடுத்து ஆளுங்கட்சி அமைச்சர்களும் உறுப்பினர்களும் சண்டித்தனத்தில் இறங்கினார்கள். ஆளுங்கட்சியினரின் காடைத்தனத்தாலும் எதிர்க்கட்சியினரின் பதில் நடவடிக்கைகளாலும் நாடாளு மன்றம் அமளிதுமளி அல்லோல கல்லோலம் பட்டது.
பின்னர் சிங்கள ஹெல உறுமயவின் புதிய உறுப்பினர் வண. அக்மீமன தயாரத்ன தேரர் உறுதிமொழி எடுக்க வந்தபோது அவரை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலவந்தமாகத் து}க்கி அங்குமிங்குமாக இழுத்தடித்துப் பந்தாடினர். அமைச்சர்களும் உறுப்பினர்களும் தேரரும் இழுபறிப் பட்டனர்.
அதன் உச்சகட்ட காட்சியாக துச்சாதனன் பாணியில் புதிய உறுப்பிரனரான அக்மீமன தயாரத்ன தேரரின் புனித மஞ்சள் அங்கியை உரிய ஆளும்கட்சி உறுப்பினர்கள் முற்பட்டனர். இந்தக் குழப்பம் கூச்சலுக்கு இடையே ஆளுங்கட்சியின் அமைச்சர் ஒருவர் சபாபீடத்தில் இருந்த செங்கோலைத் து}க்கிக்கொண்டு ஓடி அதனை எங்கோ ஒளித்து விட்டார். பிற்பகலில்தான் அது மீட்கப்பட்டது.
இந்த அடிபிடிகளுக்கு மத்தியில் செங்கோல் இன்றியே அக்மீமன தயாரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
ஆளும்கட்சி அமைச்சர்களும் உறுப்பினர்களும் மேற்கொண்ட தாக்குதலில் காயம்பட்ட சிங்கள ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்த இரண்டு பவுத்த தேரர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.
இலங்கை நாடாளுமன்றத்தின் வரலாற்றில் மிக மிக மோசமான குழப்பம் இது என்று செய்தி ஏடுகள் வர்ணித்துள்ளன.
1959ஆம் ஆண்டு பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சோமராம தேரர் என்பவரால் சுட்டுக் கொண்டதை அடுத்து மஞ்சள் அங்கி அணிந்த பவுத்த தேரர்கள் பலர் சிங்களவர்களால் ஆங்காங்கு தாக்கப்பட்டனர்.
அதன் பின்னர் இப்போதுதான் பவுத்த தேரர்கள் மிகவும் கேவலமான முறையில், அதிலும் நாடாளுமன்றத்திற்கு உள்ளே தாக்கப்பட்டுள்ளார்கள்.
சாதாரணமாக பவுத்த தேரர்கள் பொது மக்களால் மட்டுமல்ல அமைச்சர்கள், அரசியல்வாதிகள் போன்றோர்களாலும் மிகவும் பயபக்தியோடு மதிக்கப்படுபவர்கள்.
ஒரு குட்டி பவுத்த தேரரைக் கூட அமைச்சர்கள் தலை சாய்த்து பணிவோடு வணங்கியதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
சிங்கள ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற நுளைவுக்குச் சொல்லப்பட்ட காரணங்களில் பவுத்த தேரர்கள் சபையில் இருந்தால் ஆளும்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாகரிகமாக நடந்து கொள்வார்கள் என்பது ஒன்றாகும்.
இப்போது பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாய் மஞ்சள் அங்கிக்கு இருந்த மரியாதை அடியோடு போய்விட்டது.
'பச்சை சிங்கள இனவாதத்தை கக்கும் உந்த மொட்டையர்களுக்கு உது வேணும்' என்று சிலர் நினைக்கலாம். ஏன் 'உது காணாது' என்று கூட சொல்லலாம்.
என்ன இருந்தாலும் சமய குருமார்களுக்கு, அவர்கள் எந்தச் சமயத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், ஒரு குறைந்தளவு மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அதுதான் நாகரிகம்.
பவுத்த தேரர்கள் அரசியலில் நுளைந்து, தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் செல்வது அவர்கள் மேற்கொண்ட துறவுக்கு, எடுத்துக் கொண்ட உறுதி மொழிக்கு எதிரானது என்பது உண்மை.
ஆனால் அவர்கள் சரியாகவோ பிழையாகவோ மக்களால் தேர்ந்தெடுக்கப ;பட்டவர்கள். நடந்து முடிந்த தேர்தலில் சிங்கள ஹெல உறுமய பெற்ற மொத்த வாக்குகள் 555,724 ஆகும்.
யதார்த்தம் என்னவென்றால் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு பவுத்த மதம் அரசியல் மயப்படுத்தப்பட்டு வந்துள்ளது. பவுத்த மகா சங்கத்தை தீவிர அரசியலுக்கு முதலில் இழுத்து வந்தவர் எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆவார்.
அதற்கு முன்னர் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிங்களவர் மத்தியில் உள்ள மாற்று சமயத்தவரை வேறுபடுத்தும் முகமாக 'சிங்கள பவுத்தாய' என்ற சொல் வழக்கில் வரத் தொடங்கிற்று.
இந்த சொற்றொடரை சிங்கள பவுத்தாய என்னும் பத்திரிகையில் முதன் முதலில் பயன்படுத்தியவர் அநகாரிக தர்மபால என்பவரே. இவர்தான் 'பவுத்த தேசியத்தின்' பிதாமகன் ஆவார். இவரே தமிழ் முஸ்லிம் மக்கள் அந்நியர் என்ற உணர்வை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்தவர். 'இலங்கை ஒரு சிங்கள பவுத்த நாடு ஏனையோர் வந்தேறு குடிகள்' எனும் கொள்கையை பரப்பியவர்.
'ஆங்கிலேயர் ஆட்சியில் தென்னிந்திய கீழ் சாதியினர் நாட்டினுள் குடியேற அனுமதிக்கப்பட்டனர்' என்று 1902 இல் அநகாரிக தர்மபால அநாகரிகமாகப் பேசினார்.
திரு. பண்டாரநாயக்க 1956ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பவுத்த சங்கம், தொழிலாளர்கள், விவசாயிகள், சிங்கள மருத்துவர்கள், சிங்கள ஆசிரியர்கள் (பஞ்சசக்திகள்) கொண்ட கூட்டணியை உருவாக்கினார்.
1956 ஆம் ஆண்டுக்குப் பின்னரே அரசியல் பவுத்தம் ( pழடவைiஉயட டீரனனாளைஅ ) சிங்கள பவுத்தம் ( ளுinhயடய டீரனனாளைஅ ) என்ற புது சொல்லாட்சிகள் அகராதியில் வந்தன.
திரு. பண்டாரநாயக்க தேர்தலில் பெற்ற வெற்றியால் சிங்கள பவுத்த தேசியம் என்ற இனமதக் கோட்பாடு நாட்டில் வேரூன்றியது.
1956க்குப் பின்னரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தென்னிலங்கை சிங்கள அரசியல் கட்சிகள் பவுத்த தேரர்களது ஆதரவை பெறுவதில் போட்டி போட்டன. கட்சி மேடைகளில் பவுத்த தேரர்கள் வெட்கமோ துக்கமோ இன்றி பச்சை இனவாத அரசியல் பேசினார்கள். பண்டைய சிங்கள அரசர்களது ஆட்சிக் காலம் போல் நாட்டை ஆள்வோர் தங்களது ஆலோசனைப்படிதான் ஆள வேண்டும் என்று பவுத்த தேரர்கள் கோரினார்கள்.
சமய தத்துவங்கள் வேறு. சமய நடைமுறைகள் வேறு. இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.
பவுத்த தேரர்கள் பிச்கை எடுத்தே ஒரு நாளில் இருமுறை பகலில் உண்ண வேண்டும். இந்த விதியை இன்றைய தேரர்களில் எத்தனை விழுக்காட்டினர் கடைப் பிடித்து ஒழுகுகின்;றனர்?
பவுத்த மதத்தின் அடிப்படை கோட்பாடுகள் மிகவும் எளிதானவை. மனிதன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்பது பவுத்த மதத்தின் அடிநாதமான கோட்பாடாகும்.
புத்தர் உயிர்கள் மூவகைப் பட்டதென்று சொன்னர். அவை மனிதர், விலங்குகள், தாவரங்கள் என்பன. இவற்றில் எதற்கும் தீங்கு விளைவிக்கக்கூடாது. தீங்கு விளைவித்தால் அது எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டப்பட வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு தீங்கு விளைவித்ததாக முடியும்.
மேலும் உலகில் நான்கு வாய்மைகள் உண்டு. அவற்றை அறிந்து அதில் இருந்து விடுபட அட்டாங்க மார்க்கத்தை ஒருவன் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி அவன் அட்டாங்க மார்க்கத்தை கடைப்பிடிப்பானேயானால் அவன் மறுபிறப்பை அறுத்து நிர்வாணம் அல்லது வீடுபேறு அடைவான். இதுதான் பவுத்த மதத்தின் அத்திவாரம்.
நான்கு வாய்மைகள் எவை? அட்டாங்க மார்க்கம் எவையெவை? நான்கு வாய்மைகள் ஆவன:
(1) துன்பம். (2) துன்ப காரணம். (3) துன்ப நீக்கம். (4) துன்பம் நீக்கும் வழி.
பாலிமொழியில் இவை துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என அழைக்கப்படுகிறது.
அட்டாங்க மார்க்கம் என்பன:
1) நற்காட்சி (ஸ்ம்மா திட்டி): மேலே கூறப்பட்ட நான்கு வாய்மைகளை (சத்தியங்களை) நன்றாக ஆழ்ந்து சிந்தித்து அறிந்து கொள்வது. .
(2) நல்லொழுக்கம் (ஸம்மா ஸங்கப்போ) - தன்னலத்தை மறந்து எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக இருத்தல். வாழ்க்கையின் நோக்கம் பிறவித் துன்பத்தில் இருந்து விடுதலை அடைவதுதான் என்னும் எண்ணத்தோடு எப்போதும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பையும் நல்லெண்ணத்தையும் வளர்த்தல், சிற்றின்ப எண்ணங்களை ஒழித்தல்.
(3) நல்வாய்மை (ஸம்மா வாசா) - பொய் சொல்லுதல், புறங்கூறுதல், கடுமொழி பேசுதல் அவதூறு கூறல், பயனில்லாப் பேச்சுக்களைப் பேசுதல் முதலியவற்றை நீக்கி உண்மையே பேசுவது. பேசும்போது அன்பாகவும் இனிமையாகவும் பேசுதல்.
(4) நற்செய்கை (ஸம்மா கம்மதோ) - கொலை செய்தல், களவு செய்தல், காமம் விழைதல் முதலிய பாவமும் தீமையும் ஆன செயல்களைச் செய்யாமல் நல்ல செயல்களைச் செய்து கொண்டு ஒழுக்கமாகவும் அமைதியாகவும் இருத்தல்.
(5) நல்வாழ்க்கை( ஸம்மா ஆஜீவோ) - அடிமைகளை விற்பது, மாமிசத்துக்காகப் பிராணிகளை விற்பது, மயக்கந்தருகிற கள், மதுபானம், அபினி முதலிய பொருள்களை விற்பது, கொலைக்குக் காரணமான கத்தி, ஈட்டி, வாள், அம்பு முதலிய ஆயுதங்களை விற்பது, சு10துவாது செய்வது. இவற்றை விலக்கி அகிம்சையை மேற்கொண்டு வாழ்தல்.
(6) நன்முயற்சி ( ஸம்மா வியாயாமோ) - தீய எண்ணங்களும் தீய செயல்களும் தன்னிடம் உண்டாகாமல் தடுத்து நல்ல எண்ணங்களையும் நல்ல செயல்களையும் வளர்ப்பது நன்முயற்சி எனப்படும். தீய எண்ணங்கள் மனத்தில் தோன்றினால் அவற்றை முயற்சியோடு தடுத்து நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும்.
(7) நற்கடைப்பிடி (ஸம்மா ஸதி) - உடம்பின் நிலையாமையை ஆழ்ந்து சிந்தித்து ஐம்பொறி ஐம்புலன் இவைகiளின் உண்மைத் தன்மையை உணர்தல். இவ்விதம் சிந்திப்பது மெய்ஞ்ஞானம் பெறுவதற்கு உதவியாகும்.
(8) நற்றியானம் (ஸம்மா ஸமாது) - மனதை ஒரு நிலையில் நிறுத்தப் பழகுதல். மனதைச் சிதறவிடாமல் அடக்கிக் நல்ல எண்ணங்களை நினைத்து மனத்தை ஒரு நிலையில் நிறுத்தப் பழகுதல். இந்தச் சமாதிப் (மன அடக்கம்) பழக்கம், புலன்களையும் மனத்தையும் அடக்கியாள உதவுகிறது. அஞ்ஞானம், ஆசை, பகை முதலிய தீய எண்ணங்கள் நீக்கி ஞானம் வளர உதவுகிறது.
பவுத்த மதத்தில் இல்லறம் துறவறம் என இரண்டு அறங்களே உள்ளன. இல்லறத்தாராகிய சாவக நோன்பிகள் மும்மணிகளை வணங்கி பஞ்சசீலங்களைக் கடைப்பிடித்து ஒழுகுதல் வேண்டும். ஆனால் இல்லறத்தார் பிறவா நிலையாகிய நிர்வாண மோட்சம் அடைய முடியாது. துறவறத்தில் நின்றவர்கள் மும்மணிகளை வணங்கி மேலே கூறியவாறு பத்துவகைச் சீலங்களை மேற்கொண்டு, நான்கு வாய்மைகளைக் கடைப் பிடித்து, அட்டாங்க மார்க்கத்தில் ஒழுகி, ஞானம், யோகம் இவற்றை அனுட்டித்தால் பிறவா நிலையாகிய அல்லது பேரின்பமாகிய நிர்வாண மோட்சத்தை அடைவார்கள்.
பவுத்த சமயத்தவர், துறவறத்தாரும் இல்லறத்தாரும் புத்தம், தர்மம், சங்கம் என்னும் மும்மணிகளைச் சரண் அடைய வேண்டும். இதற்குத் திரிசரணம் என்பது பெயர். இந்த திரிசரணத்தின் பாலி மொழி வாசகம் இது.
புத்தம் சரணம் கச்சாமி (புத்தரிடம் அடைக்கலம் புகுகிறேன்)
தர்மம் சரணம் கச்சாமி (புத்தரின் போதனைகளிடம் அடைக்கலம் புகுகிறேன்)
சங்கம் சரணம் கச்சாமி (பவுத்த தேரர்களின் சங்கத்திடம் அடைக்கலம் புகுகிறேன்)
இம் மும்மணிகளை மும்முறை வணங்க வேண்டும்.
இல்லறத்தில் இருப்பவர் ஒருவர் பவுத்த சமயியாய் மாறுவதற்கு எந்தவித சடங்கும் இல்லை. ஆனால் பவுத்த துறவியாக வருவதற்கு விதிமுறைகளும் சடங்குகளும் இருக்கின்றன.
புத்த சங்கத்தில் சேர விரும்பும் ஒருவர் உலக பந்தங்களைத் துறந்து தலைமுடி, தாடி இவற்றை வழித்து பவுத்த விகாரை ஒன்றில் இருக்கும் மூத்த தேரரை வணங்கி அவருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின் கீழே தரையில் அமர்ந்து கைகளைக் கட்டி சம்மணம் கொட்டி உட்கார்ந்து கொண்டு மும்மணிகளை மூன்று முறை சொல்ல வேண்டும். பின்னர் மூத்த தேரர் சொல்ல தசசீலங்களை சொல்லி அவற்றைக் கடைப்பிடித்து ஒழுகுவேன் என சத்தியப் பிரமாணம் செய்தல் வேண்டும். இதனை உபசம்பத அல்லது உபநயனம் எனக் கூறுவர்.
இருபது அகவை நிறைந்த ஒருவருக்கே குறைந்தது பத்துத் தேரர்கள் முன்னிலையில் இந்த உபநயனம் நடாத்தி வைக்கப்படும். இருபது வயதுக்குக் குறைந்தவர்கள் மாணாக்க தேரராக சேர்த்துக் கொள்ளப்படுவர். சேரும்போது பாவம் எதுவும் செய்யாதவராகவும், நோயற்றவராகவும், அங்கயீனமற்றவராகவும், கடனாளியாவும் இருக்கக் கூடாது என்பது கேட்டறியப்படும்.
எனவே உண்மையான புத்த மதத்தில் உலக பந்தங்களைத் துறந்து தலைமுடி, தாடி இவற்றை வழித்து துறவு மேற்கொண்ட தேரர்கள் அரசியலில் ஈடுபட இடம் இல்லை. அரசியலில் மட்டும் அல்ல மந்திர தந்திரம், சோதிடம், மருத்துவம், வாணிகம், தொழிற்சங்கம் போன்றவற்றிலும் ஈடுபட முடியாது.
சிறீலங்கா நாடாளுமன்றத்தில் மருத்துவ மனைக்கு போகும் அளவிற்கு இரண்டு பவுத்த தேரர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல், கட்டவிழ்த்து விடப்பட்ட காடைத்தனம், தொடுக்கப்பட்ட சொல் அம்புகள் பவுத்த சமயத்துக்கு ஒரு சோதனைக் காலம் உருவாகி இருப்பதைக் காட்டுகிறது!

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>