06-11-2004, 02:22 PM
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40092000/jpg/_40092519_chandafp.jpg' border='0' alt='user posted image'>
விடுதலைப் புலிகளின் நிபந்தனையை ஏற்றார் சந்திரிகா!
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க வேண்டுமெனில் இடைக்கால சுய ஆட்சி ஆணையம் குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என்கின்ற விடுதலைப் புலிகளின் நிபந்தனையை இலங்கை அதிபர் சந்திரிகா ஏற்றுக் கொண்டுள்ளார்!
தன்னைச் சந்தித்த தமிழ் தேசிய கூட்டணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசிய சந்திரிகா குமாரதுங்கா, தமிழர்கள் அதிகம் வாழும் வடகிழக்கு மாகாணங்களை இணைத்து இடைக்கால சுய ஆட்சி ஆணையத்தை அமைப்பது குறித்து புலிகள் அளித்துள்ள வரைவுத் திட்டத்தின் மீது பேச்சுவார்த்தையை நடத்தத் தயார் என்று கூறியுள்ளார்.
இத்தகவலை சந்திரிகாவை சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் சம்மந்தன் செய்தியாளர்களிடம் கூறினார்.
புலிகள் அளித்துள்ள இடைக்கால சுய ஆட்சி ஆணையம் அமைப்பது குறித்து புலிகள் அளித்துள்ள வரைவுத் திட்டத்தின் மீது பேச்சுவார்த்தை நடத்தப்படும் அதே நேரத்தில், இலங்கை இனப்பிரச்சனையின் அடிப்படைக் கூறுகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை துவங்க புலிகள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
"புலிகளுடன் இடைக்கால சுய ஆட்சி ஆணையம் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று சந்திரிகா கூறிவிட்டார். அதனை அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தான 6 மாதத்திற்குள் சுய ஆட்சி ஆணையம் என்று உறுதியளித்துள்ளார். அந்த இடைப்பட்டக் காலத்தில் இலங்கை இலப்பிரச்சனையின் அடிப்படை கூறுகளுக்கு தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று சந்திரிகா வலியுறுத்துகிறார்" என்று தமிழ் தேசிய கூட்டணியின் அமைப்பாளரும், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் கே. பிரேமச்சந்திரன் யு.என்.ஐ. செய்தியாளரிடம் கூறியுள்ளார்.
இடைக்கால சுய ஆட்சி ஆணையம் அமைப்பது தொடர்பான தனது ஒப்புதலை நார்வே தூதுக் குழு வாயிலாக புலிகளின் தலைமைக்கு ஏற்கனவே சந்திரிகா தெரிவித்துவிட்டார் என்று கூறிய பிரேமச்சந்திரன், சந்திரிகாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெளிப்படையாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது என்று கூறினார்.
இந்த பேச்சுவார்த்தை ஆகஸ்ட் மாதத்தில் துவங்கலாம் என்றும் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இரண்டரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேற்று இரவு விருந்திற்கு அழைத்த அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, அவர்களுடன் கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் பிரச்சனை, யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் ராணுவ முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளில் மறுகுடியேற்றம் ஆகியன குறித்து விவாதித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் இதற்கு மேலும் சிங்கள பேரினவாத நிர்வாக அமைப்பு தொடர்வதை விரும்பவில்லை என்றும், தமிழர் பகுதிகளில் தமிழர்களை கொண்ட நிர்வாக அமைப்பு உடனடியாக ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரிகாவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பின் பொழுது இலங்கை அமைச்சர்கள் சுசில் பிரேம ஜெயந்த், மங்கள சமரவீரா, நிர்மல் ஸ்ரீபல டிசில்வா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். ஆனால் அயலுறவு அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் கலந்துகொள்ளவில்லை.
(webulagam.com)
---------------------------------
Sri Lankan talks 'set for August'
A Tamil political group in Sri Lanka says peace talks between Tamil Tiger rebels and the government could resume in August.
Joseph Pararajasingham, a member of Tamil National Alliance, said President Chandrika Kumaratunga had agreed to discuss a rebel proposal for self-rule.
(bbc.com)

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>