06-09-2004, 12:52 PM
<b>நாடாளுமன்றில் காடைத்தனம்!
ஆளுங்கட்சி எம்.பிக்கள் அட்டகாசம்!!
பிக்குவைத் துாக்கிப் பிடித்து பந்தாடிய கேவலம்!!
செங்கோலைத் துாக்கிக் கொண்டு ஓடினார் பிரதிஅமைச்சர் </b>
நாடாளுமன்றம் நேற்றுக் கூடியபோது அங்கு பெரும் அமளிதுமளி ஏற்பட்டதுடன் காடைத்தனமும் இடம்பெற்றது.
ஆளுங்கட்சி எம்.பிக்கள் பண்பாடு அற்றமுறையில் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்று அல்லோலகல்லோலப்பட்டது.
ஹெல உறுமயவின் புதிய எம்.பியாகச் சத்தியப்பிரமாணம் செய்யவந்த வணக்கத்துக்குரிய தேரர் ஒருவரை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலவந்த மாகத் து}க்கி அங்குமிங்குமாக இழுத்தடித்துப் பந்தாடினர்.
ஆளுங்கட்சி உறுப்பினர்களின் இந்த அட்டகாசத்தின் போது புதிய எம்.பியான தேரரின் ஆடைகளைக் களையவும் முயற்சிக்கப்பட்டது. இந்தக் களேபரத்தின் நடுவே சபாபீடத்திலிருந்த செங்கோலைத் து}க்கிக்கொண்டு ஓடிய ஆளுங்கட்சியின் அமைச்சர் ஒருவர் அதனை எங்கோ ஒளித்து விட்டார். பின்னர் பிற்பகலில் அது மீட்கப்பட்டது.
இலங்கை நாடாளுமன்றத்தின் வர லாற்றில் மோசமான குழப்பம் என்று கொள்ளப்படும் இந்த அட்டகாசத்தின் மத்தியில் பிரஸ்தாப தேரர் நாடாளு மன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமா ணம் செய்துகொண்டார்.
ஆளுங்கட்சியினரின் அடாவடித் தனங்களாலும் எதிர்க்கட்சியினரின் பதில் நடவடிக்கைகளாலும் நாடாளு மன்றம் நேற்று அமளிதுமளிப்பட்டது.
அமைச்சர்களும் உறுப்பினர்களும் முஷ்டியை முறுக்கிக்கொண்டு இழுபறிப்பட்டனர்.
பௌத்த மதகுருவின் புனித அங்கியை துச்சாதனன் பாணியில் களைய முயன்றனர் ஆளும் கட்சியினர். பதவிப் பிரமாணம் செய்யவந்த பௌத்த குருவானவரை பந்தாடுவது போல் அங்கும் இங்கும் து}க்கி இழுத் தடித்தனர் அவர்கள். இந்தக் களேபர நிலையைப் பயன்படுத்திய அமைச் சர் ஒருவர் செங்கோலைத் து}க்கிக் கொண்டு சபையைவிட்டு ஓடினார். இத னால் சபை அமர்வும் ஒத்திவைக்கப் பட்டது.
செங்கோல் இன்றியே தேசிய ஹெல உறுமய உறுப்பினரான அக்மீ மன தயாரத்ன தேரர் - கூச்சல் குழப் பங்களுக்கு மத்தியில் - புதிய எம். பியாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
நேற்றுக்காலை பத்து மணிக்கு சபாநாயகர் டபிள்யுூ.கே.எம்.லொக்கு பண்டார தலைமையில் சபை கூடியது.
வழமையான சபை நடவடிக்கை களின் பின் புதிதாக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள வேண்டிய நேரம் வந்தது.
அப்போது தேசிய ஹெல உறு மய உறுப்பினரான வண ரத்தொளுவ ரத்னசீத தேரர் தமது பதவியை இராஜி னாமாச் செய்துள்ளதால் அவ்விடத் திற்கு நியமிக்கப்பட்ட வண.அக்மீமன தயாரத்ன தேரர் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார் என சபாநாயகர் அறி வித்தார்.
இதனை ஆளுங்கட்சியின் பிர தான அமைப்பாளரும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் ஜே.வி.பியின் விமல் வீரவன்ஸவும் கடுமையாக ஆட்சேபித்தனர்.
தன்னைப் பலவந்தப்படுத்தியே ராஜினாமாச் செய்யவைத்தனர் என ரத்தொளுவ ரத்னசீக கூறுகிறார். ஆகவே, இந்த இராஜினாவை ஏற்றுக் கொள்வதை நாம் ஆட்சேபிக்கின்றோம். பலவந்தமாகப் பெறப்பட்ட இராஜி னாமா செல்லுபடியாகாது. எனவே, தனது இடத்திற்கு வேறு ஒருவரை நியமிக்க முடியாது. சத்தியப்பிரமா ணம் செய்யவும் அனுமதிக்க முடி யாது என அவர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு ஒன்றைப் பெற்றுள்ளார்.
நீதிமன்றத்தின் தடை உத்தரவை யும் மீறி புதியவர் ஒருவர் பதவிப் பிரமாணம் செய்ய முடியாது; இதனை அனுமதிக்க முடியாது|| என அமைச் சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே ஆட்சேபனை கிளப்பினார்.
ஆனால், நீதிமன்றத்தின் தடை உத்தரவு இதுவரை தனக்குக் கிடைக்கவில்லை. நீதிமன்ற உத்த ரவு கிடைக்காத வரை தன்னால் எது வும் செய்ய முடியாது எனச் சபாநாய கர் பதிலளித்தார்.
அப்போது ஆளும் தரப்பினர்கள் கூச்சல் எழுப்பி குழப்பம் செய்தனர்.
இவற்றைப் பொருட்படுத்தாமல் அக்மீமன தயாரத்ன தேரரைப் பத விப்பிரமாணம் செய்ய அழைத்தார் சபாநாயகர்.
சபாநாயகரின் கட்டளைக்கமைய படைக்கல சேவிதர் அக்மீமன தேரரை சபாபீடம் நோக்கி அழைத்தார்.
அப்போது திடீரென ஆசனத்தில் இருந்து பாய்ந்து வந்த விளையாட் டுத்துறை அமைச்சர் ஜீவன் குமார துங்க தேரரைக் கட்டிப்பிடித்து மல்லுக் கட்டி இடைமறித்தார். அவருடன் ஜே. வி.பி. உறுப்பினர்களும் சேர்ந்துகொண் டனர். சபை நடுவில் பெரும் கூட்;டம் கூடியது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சபை நடுவே விரைந்து தேரரைப் பாதுகாப் பாக சபாபீடத்தின் முன் அழைத்துச் செல்ல முயன்றனர்.
இதனால், இருதரப்பினருக்கும் இடையில் இழுபறிகள் ஏற்பட்டன. அமைச்சர் ஜீவன் குமாரதுங்க, முன் னாள் சபாநாயகர் மைக்கல் ஜோசப் பெரேராவின் சட்டையைப் பிடித்துக் கொண்டார். அந்தச் சமயத்தில் அடி விழும் சத்தம் ஒன்று கேட்டது.
எங்கே யார் யாருக்கு அடித்தார் என்பது எவருக்கும் புரியவில்லை. இரு தரப்பு இழுபறிகளுக்கு மத்தியிலும் கைப்பரிமாறல்கள் இடம்பெற்றன.
சத்தியப்பிரமாணம் செய்ய வந்த தேரர் இரண்டு பக்கத்திற்கும் நடு வில் சிக்கி இழுபட்டார். அவருடைய காவி உடையும் அலங்கோலமாக இழு பட்டுத் தொங்கியது அமைச்சர்களும் உறுப்பினர்களும் முட்டி மோதிக் கொண்டனர்.
இப்படி சபை அல்லோலகல் லோலப்பட்டபோது முன்னாள் அமைச் சர் மகேஸ்வரன் எதிர்க்கட்சி ஆச னங்களுக்கு ஊடாக அக்மீமன தயா ரத்ன தேர ரைப் பாதுகாப்பாக சபா பீடத்திற்கு அழைத்து வந்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களும் ஜே.வி.பியினரும் சபாபீடத்தை சுற்றிவளைத்துக் கொண்டு தேரரை சபை பீடத்திற்கு செல்ல விடாமல் தடுத்து மல்லுக் கட்டினர். அப்போது கலாசார தேசிய விழுமியங்கள் அமைச்சர் விஜித ஹேரத் (ஜே.வி.பி.) அக்மீமன தேர ரின் காவியைப் பிடித்து இழுத்தார். அமைச்சரின் கைகளில் பாதி தேரரின் உடலில் மீதிஎன்று எப்படியோ காவி உடை களையப்படாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாதுகாத்துவிட்டனர். சந்தடிகளுக்கு மத்தியில் தேரர் பத விப் பிரமாணம் செய்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மோதல்களைத் தடுப்பதில் படைப் பல சேவிதரும் உதவியாளர்களும் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி பிரதியமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சபாபீடத்தில் இருந்த செங்கோலைத் து}க்கிக்கொண்டு சபைக்கு வெளியே ஓட்டம் பிடித் தார்.
இதனைத் து}ர இருந்து அவதா னித்த பிரதி படைக்கல சேவிதர் பிரதியமைச்சரை விரட்டிச் சென்றார். என்றாலும் அவரால் செங்கோலைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்நிலையில், சபையில் மேலும் அமளிதுமளிக் குழப்பம் ஏற்பட்டது. செங்கோலை மீண்டும் சபாபீடத்தில் கொண்டுவந்து வைக்கும்படி சபாநாய கர் பலமுறை அறிவித்தும் அதனை ஆளும்கட்சியினர் எவரும் ஏற்க வில்லை.
சபாபீடத்தில் செங்கோல் இல்லா மலேயே எதிர்க்கட்சியினரும் படைக் கல சேவிதர், நாடாளுமன்ற செயலா ளர் நாயகம் ஆகியோர் சூழ நிற்க அக்மீமன தயாரத்ன தேரர் கூச்சல், குழப்பங்களுக்கு மத்தியில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
முன்னாள் அமைச்சர் ரவி கருணா நாயக்க, தேரருக்கு பக்கபலமாக நின்றார். அப்போதும் ஆளும்கட்சியி னர் சபை நடுவில் இருந்து ஆரவா ரம் செய்துகொண்டே இருந்தனர்.
சபையில் அமைதி குலைந்தது.
செங்கோலைக் கொண்டுவந்து வைக்கும்படி சபாநாயகர் பலமுறை வேண்டுகோள் விடுத்தார் பயனில்லை. எனவே, சபையை பத்து நிமிடங்க ளுக்கு ஒத்திவைப்பதாக அறிவித் தார். அப்போது மணி காலை 10.35.
பதினைந்து நிமிடங்களின் பின் சபாநாயகர் மீண்டும் சபைக்கு வந் தார். அப்போதும் செங்கோல் கொண்டு வந்து வைக்கப்படவில்லை. எனவே, மீண்டும் சபையை ஒத்திவைப்பதா கக் கூறி, கட்சித் தலைவர்கள் கூட் டத்தில் இதனைப் பேசித் தீர்க்க லாம் என்று தெரிவித்து சபாநாயகர் எழுந்து சென்றார்.
பிற்பகல் 2.17 மணியளவில் சபை கூடியது. அப்போது செங்கோல் சபை யில் இருந்தது. சபையை ஜூலை 20 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக சபா நாயகர் அறிவித்தார்.
மேலும், மூன்று புதிய எம்.பிக் கள் நேற்று சத்தியப்பிரமாணம் செய் வதற்குக் காத்திருந்தனர். ஆனால், முதலாவது பிக்கு எம்.பியின் சத்தி யப்பிரமாணத்தோடு சபை அமளிது மளிப்பட்டு அடுத்த அமர்வு ஜூலை 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப் பட்டதால் அம்மூவரும் அதுவரைக் காத்திருக்க வேண்டியேற்பட்டுள்ளது.
நன்றி உதயன் 09-05-2004