06-08-2004, 01:37 PM
<b>பொடா சட்டம் ரத்து, தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து </b>
[ காவலு}ர் கவிதன் ] [ செவ்வாய்க்கிழமை, 08 யுூன் 2004, 2:42 ஈழம் ]
இந்தியா முழுவதிலும் அமுலில் இருந்தாலும், தமிழ்நாட்டில் மிக அதிகமாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்த பொடா சட்டம் ரத்து செய்யப்படுவதாக ஐனாதிபதி அப்துல் கலாம் இன்று நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் அறிவித்தார்.
அதேபோன்று புதிய அரசின் இன்னுமொரு கொள்கையான தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்படவேண்டுமென்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளதென்று ஐனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்தார்.
நாட்டில் பாவனையிலுள்ள தேசிய மொழிகள் அனைத்தையும் அரசின் ஆட்சி மொழிகளாக்குவது குறித்து ஆராய ஓர் உயர்மட்டக் குழுவை அமைக்கவுள்ளதாகவும் ஐனாதிபதி மேலும் அறிவித்தார்.
பொடா சட்டம் ரத்தானாலும், தீவிரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகளில் எந்தத் தொய்வும் இருக்காது என்று குறிப்பிட்டார். பொடா சட்டம் ரத்தாவதாக அறிவித்தபோது, அ.தி.மு.க. மற்றும் பா.ஐ.க. தவிர்ந்த ஏனைய அனைத்துக் கட்சி அங்கத்தவர்களும் மிகவும் மகிழ்ச்சிப் பிரவாகம் செய்து, மேசைகளில் தட்டி, கைதட்டி ஆரவாரத்துடன் தங்கள் திருப்தியை வெளியிட்டார்கள் என்று புதினம் நிருபர் தெரிவித்துள்ளார்.
நன்றி புதினம்