07-08-2003, 09:58 PM
kuruvikal Wrote:முதலாவது பதில் குதர்க்கத்தற்கு தரப்பட்டுள்ளதால் அதற்கு விடை எழுதிப்பயனில்லை! பெண்கள் தங்கள் தவறை ஒத்துக் கொண்டதாக வரலாறு இல்லை...தொடருங்கள்...!
அச்சம் மடம் நாணம் பயிர்ப்புப் பற்றி நள வெண்பாவிலும் மற்றும் இலக்கியங்களிலும் பெண்களுக்கே முதன்மைபடுத்தி விபரிக்கப்பட்டது ஏனெனில் பெண்களிடம் இயல்பிலே இக்குணங்கள் ஆதிக்கம் செய்வதே காரணமாகவிருக்கலாம். அதற்காக அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆண்களுக்கு இல்லை என்றில்லைஅதையும் எடுத்து ஒரு புரட்சி செய்ய வேண்டியதுதானே!
:twisted: :roll: :twisted:
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பன யாரிடம் இருக்கிறதென்பதல்ல இப்போது பிரச்சனை.
பெண்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்தப் படுகிறதே!
அதுதான் பிரச்சனை.
பெண் என்ற பதம் பாவனையில் இருப்பதற்காக பெண் அடங்க வேண்டுமென்றோ, அச்சப்பட வேண்டுமென்றோ அவசியமெதுவுமில்லை.
மீசை இருக்கிறது என்பதற்காக ஆண்கள் பெண்களை அடக்க வேண்டும் என்றில்லை.
nadpudan
alai
alai

