Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனித உரிமை ???
#10
ஆசிய சகாக்களை தோற்கடித்துவிட்ட அமெரிக்கச் சித்திரவதையாளர்கள்

லாவோஸிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் சித்திரவதையிலிருந்து விடுபட்டு இரண்டு வருடங்கள் கழிந்த பின்னரும் கூட கே.டேன்ஸ் என்ற பெண்மணி 10 மாதங்களாக உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் அனுபவித்த வேதனையிலிருந்து இன்னமும் மீளவில்லை.

இரண்டு பிள்ளைகளின் தாயான இந்த அவுஸ்திரேலியப் பெண் 2000 ஆம் ஆண்டில் சிறை அதிகாரிகளால் பிஸ்டலினால் தாக்கப்பட்டும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டும் அவமதிக்கப்பட்டும் பல்வேறு இம்சைகளுக்கு உள்ளாக்கப்பட்ட வேளையில் இவரது கணவன் கெறி அதே சிறைச்சாலையின் இன்னொரு பகுதியில் இன்னும் மோசமான துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டார்.

கெறியின் கால்கள் 4-5 கிலோகிராம் எடையுள்ள மரக்கட்டைகளுக்குள் செலுத்தப்பட்டு விலங்கிடப்பட்டிருந்தன என்று டேன்ஸ் தெரிவித்தார். லாவோஸ் விசாரணையாளர்கள் கெறியை தங்கள் வழிக்குக் கொண்டு வரும் முயற்சியில் அவர் மீது மின்சாரம் பாய்ச்சியதுடன் வாய்க்குள் பலவந்தமாக சாக்கடை நீரை ஊற்றினார்கள்.

பாதுகாப்பு முகவர் நிலையம் ஒன்றை நடத்தி வந்த டேன்ஸ் தம்பதியர் இரத்தினக்கல் அகழ்வு கம்பனிக்கும் அரசாங்கத்துக்குமிடையே ஏற்பட்ட பிணக்கொன்றில் அகப்பட்டதால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள். அவுஸ்திரேலியத் தூதரகம் உன்னிப்பாக அவதானித்து வந்த இந்த வழக்கிலிருந்து கெறியும் டேன்ஸ{ம் 2001 ஆம் ஆண்டி ல் விடுதலை செய்யப்பட்டார்கள்.

1990 களில் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டமைக்காக பர்மிய சிறையில் 7 வருட காலம் பல்வேறு இம்சைகளுக்கும் ஆளான போ கீக்கு சித்திரவதைகளினால் ஏற்பட்ட வடுக்களைப் பொறுத்தவரை டேன்ஸின் அனுபவத்திற்கு ஒன்றும் குறைந்ததல்ல. இலேசான உடற்கட்டமைப்பைக் கொண்ட இந்த மனிதர் இரும்புச் சங்கிலிகளால் கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரபர் குழாய்களால் தாக்கப்பட்டதுடன் சிறை அதிகாரிகளின் ப10ட்ஸ் கால்களாலும் உதைக்கப்பட்டார்.

இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை காலை வேளைகளில் தான் கடுமையாகத் தாக்கப்பட்டதாக அவர் கூ றினார். சிலவேளைகளில் தான் நினைவிழந்து தரையில் வீழ்ந்ததாகவும் அவர் பேட்டி ஒன்றின்போது கூ றினார். ஆரம்பத்தில் நித்திரை செய்யவோ உணவு, நீர் அருந்தவோ தான் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இவர்களுக்கு நேர்ந்த அநர்த்தங்கள் கம்ய10னிஸ ஆட்சியிலுள்ள லாவோஸ், இராணுவ ஆட்சியிலுள்ள பர்மா ஆகிய நடுகளில் உள்ள சிறைச்சாலைகளில் கடைப்பிடிக்கப்படும் சித்திரவதை முறைகளில் சிலவாகும். அரசாங்க சொத்துக்களை திருடியதாக பொய்க் குற்றம் சாட்டப்பட்டு தங்களை அடைத்து வைத்திருந்த லாவோஸ் தலைநகரான வியன்ரயனில் உள்ள பொன்தோங் சிறைச்சாலையில் கைதிகள் தீயினால் சுடுதல், மூ ச்சைத் திணறவைத்தல், பாலுறுப்புக்களில் சித்திரவதை போன்ற துர்; பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

உலகிலுள்ள சில படு மோசமான சிறைகளில் நிறைந்து காணப்படும் கொடுமையான துர்;பிரயோகங்களை அம்பலப்படுத்துவதற்கென டேன்ஸ் நடத்தும் கழசநபைnpசளைழநெசள.உழஅ என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் முரட்டுத்தனமான தாக்குதல்கள், உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக் கூ டிய போதைப் பொருள் வழங்குதல், கடும் வெப்பத்திற்கும், குளிருக்கும் உள்ளாகுதல் போன்ற வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பர்மாவில் இராணுவ ஜுந்தா ஆட்சியாளர்களின் மொத்தம் 39 சிறைச்சாலைகள் இயங்கும் அந்த நாட்டி ல் இடம்பெறும் சிறைச்சாலைத் துர்;பிரயோகங்களில் உளவியல் ரீதியிலான சித்திரவதைகள், தலைக்கு மேல் அழுக்குகளை கொட்டுதல் போன்ற சித்திரவதைகள் அடங்கும் என்று அரசியல் கைதிகளுக்கான உதவிச் சங்கம் கூறுகிறது.

வாய், காது, விரல்நுனி, பாலுறுப்புக்கள் ஆகியவற்றில் மின்சாரம் பாய்ச்சுதல், தலையில் சுத்தியலால் அறைவது போன்ற உணர்வு வரும்வரை தலையில் பல மணித்தியாலங்களாக நீர் சொட்டுக்களை விழவிடுதல் ஆகிய உடல் ரீதியாக வேதனையைக் கொடுக்கும் சித்திரவதைகள் செய்யப்படுவதாகவும் இச்சங்கம் தெரிவித்துள்ளது.

தங்கள் சிறைகளில் சித்திரவதைக் கூ டங்களை வைத்திருந்த லாவோஸ், பர்மா மற்றும் ஆசிய ஒடுக்குமுறை சர்வாதிகாரிகள் மீது அமெரிக்க அரசாங்கத்தினால் அத்தகைய துர்; பிரயோகங்களும் இதைவிட மோசமான சித்திரவதைகளும் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க ராஜாங்க திணைக்களம் அண்மையில் வெளியிட்டுள்ள வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையில் இது சம்பந்தமான விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பர்மாவில் மாற்று அரசியல் கருத்துக்களை கொண்டிருந்தமைக்காக 1000 க்கும் அதிகமானோர் சிறையில் அடைக்கப்பட்டதற்காக பர்மிய ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சிக்கும் அமெரிக்க அரசாங்கம் லாவோஸிலுள்ள பல்வேறு சிறைகளிலும் பரிதவிக்கும் சிறைக் கைதிகள் தவறாக நடத்தப்படுவது குறித்தும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வியட்நாம், வட கொரியா போன்ற ஏனைய ஆசிய சர்வாதிகார நாடுகளும் சிறைச்சாலைகளில் கைதிகள் துர்; பிரயோகம் செய்யப்படுவது குறித்து அமெரிக்காவின் கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றன.

இருந்த போதிலும், ஆக்கிரமிப்புக்குள்ளான ஈராக்கில் அமெரிக்காவினால் நடத்தப்படும் சிறைச்சாலை ஒன்றில் இடம்பெற்ற சித்திரவதை சம்பவங்கள் அமெரிக்க பாதுகாப்பு படைகளின் சீருடை அணிந்த ஆண், பெண் அதிகாரிகள் புரிந்த புதுமையான சித்திரவதைகளை எடுத்துக் காட்டியுள்ளன.

அப10 கிறைப் சிறைச்சாலையில் மிகச் சாதாரணமாக இடம்பெற்ற இரண்டு வகை சித்திரவதைகளில் ஒன்று கைதிகளை பயப்பிராந்திக்கு உட்படுத்துவதற்காக நாய்களைப் பயன்படுத்துவதாகும். மற்றையது கைதிகளை பாலியல் ரீதியில் இம்சைப்படுத்துவது. இந்த இரண்டு வகை சித்திரவதைகளில் எதுவுமே தென்கிழக்காசிய சிறைகளில் செய்யப்படுவதில்லை என்று ஐ.பி.எஸ்.சால் பேட்டி, காணப்பட்ட மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்தன.

சிறைக் கைதிகள் நாய்களைக் கொண்டு பயப்பிராந்திக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் எதுவும் இடம்பெற்றதாக தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்று கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் சர்வதேச மன்னிப்புச் சபைக்காக மனித உரிமை மீறல்கள் சம்பவங்களை கண்காணித்து வரும் டானியல் அல்பேர்மன் தெரிவித்தார்.

மன்னிப்புச் சபையின் பர்மிய ஆராய்ச்சியாளர் டொனா கெஸ்ட் கருத்துத் தெரிவிக்கையில், சிறைக் கைதிகள் பாலியல் துர்;பிரயோகத்திற்கும் அவமதிப்பிற்கும் உட்படுத்தப்பட்டதாக தங்களுக்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என்று கூ றினார்.

ஈராக்கில் அமெரிக்கா நடத்திவரும் சிறைச்சாலை துர்;பிரயோக சம்பவங்கள் பற்றி கருத்துத் தெரிவிக்கையில், சம்பவங்கள் கேட்பதற்கு மிகவும் கவலை தரக்கூடி யவை என்று முன்னாள் பர்மிய சித்திரவதை மதிப்பீட்டாளர் கூறினார். இந்த நிலைக்கு கைதிகள் நிர்ப்பந்திக்கப்பட்டமை குறித்து அறிந்தபோது தாம் அதிர்ச்சிக்கு உள்ளானதாக அவர் சொன்னார். இதனால் ஏற்படும் வேதனை இலகுவில் நீங்கிவிட மாட்டாது என்றும் அவர் சொன்னார்.

அமெரிக்க மேஜர் ஜெனரல் அன்ரோனியோ டகுபா தயாரித்த அறிக்கை ஒன்றில் ஆட்கள் பல்வேறு பாலியல் நிலைகளுக்கு தள்ளப்படுவதும் தடுப்புக் கைதிகளை கரமுட்டி மைதனத்துக்கு நிர்ப்பந்திப்பதும் தும்புத்தடிகளைக் கொண்டு ஒருவரை இயற்கைக்கு விரோதமான பாலுறவில் ஈடுபடச் செய்வது போன்ற துர்;பிரயோகங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், இரண்டு விடயங்களில் அமெரிக்க அரசாங்கம் ஆசிய சர்வாதிகார ஆட்சியாளர்களை தோற்கடி த்துள்ளது. ஒன்று, சிறைச்சாலைகளை அதன் எல்லைகளுக்கப்பால் ஆடம்பரமாக வைத்திருத்தல், 2001 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பயங்கரவாதம் மீதான யுத்தம் ஆரம்பமானதன் பின்னர் வந்த ஆண்டுகளில் கைதிகள் மீதான சித்திரவதை சர்வசாதாரணம் என்று தெரிய வருகிறது.

ஆப்கானிஸ்தானில் பக்றம், கந்தஹார் இராணுவத் தளங்கள் மற்றும் கிய10பாவில் குவாந்தனாமோ இராணுவத் தளம் ஆகியவற்றில தடுப்புக் கைதிகளுக்கெதிராக இதே போன்ற (அப10 கிரெய்பில் பயன்படுத்தப்பட்டது போன்றே) கைங்கரியங்களை அமெரிக்க படையினர் பயன்படுத்தி உள்ளார்கள் என்று "ஹிய10மன் றைட்ஸ் வோச்' என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

சவ10தி அரேபியா, எகிப்து, உஸ்பெகிஸ்தான், ஜோர்தான் ஆகிய உரிமை மீறல்களில் பெயர்பெற்ற நாடுகளையும் தோற்கடிக்கும் அளவுக்கு அமெரிக்கா சித்திரவதை நடவடி க்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட அல்-ஹைடா சந்தேக நபர்கள் இந்நாடுகளிலுள்ள சிறைச்சாலைகளில் சித்திரவதை அல்லது தவறான நடத்தைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுவதாக நிய10யோர்க்கில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள மனித உரிமைகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

உண்மையில், அமெரிக்க இராணுவத்தினால் நடத்தப்படும் சிறைச்சாலைகளில் சித்திரவதைகளின் அளவு இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது யுத்தக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய முகாம்களில் இடம்பெற்ற சித்திரவதைகளின் அளவுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல என்று அரசியல் ஆய்வாளர்கள் கண்டுள்ளார்கள்.

மனித உரிமை பேணலைப் பொறுத்தவரையில் இது ஒரு "அசலைப் பரிகசிக்கும் போலி' போன்ற விடயமாகும். இது பெரிதும் பின்னடைவான ஒரு விடயம் என்று பாங்கொக்கிலுள்ள சுலலோங்கோண் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அரசியல் விஞ்ஞான பேராசிரியர் கைல்ஸ் உங்பகோண் கூ றினார். அமெரிக்கா ஒரு போதுமே நல்ல மனித உரிமை பேணல் வரலாற்றைக் கொண்டிருக்கவில்லை என்பதை இது உறுதிப்படுத்துகிறது என்றும் அவர் கூ றினார்.

இருந்தும் சில அம்சங்களில் அமெரிக்க இராணுவச் சிறைகளிலும் ஆசிய இராணுவச் சிறைகளிலும் ஒற்றுமை காணப்படுகிறது. அடித்தல், உதைத்தல், கைதிகளை இக்கட்டான நிலைகளில் வைத்து விலங்கிடுதல், நீரில் அமுக்கி சாகடி க்கப் போவதாக அச்சுறுத்தி அவர்களது தலைகளை நீருக்குள் அமிழ்த்துதல் போன்ற உடல் வேதனையைக் கொடுக்கும் சித்திரவதைகளில் இத்தகைய ஒற்றுமை காணப்படுகிறது.

மக்கள் அரசாங்க அல்லது இராணுவ அதிகாரிகளின் பாதுகாப்பில் இருக்கும்போது சித்திரவதைகளிலிருந்தும் மனிதாபிமானமற்ற தண்டனைகளிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றுவதற்கான சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளை அலட்சியப்படுத்துவதிலும் இரு தரப்பினருக்குமிடையே ஒற்றுமை காணப்படுகிறது.

அமெரிக்காவில் சிறைக் கைதிகளை நடத்துவது தொடர்பான ஜெனீவா ஒப்பந்தத்தின் கீழ் உள்ள சரத்துக்கள் குறித்து ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்ய10. புர்;ர்pன் நிருவாகம் அதன் எதிர்ப்பை பிரகடனப்படுத்தியுள்ள அதேவேளையில் கம்ய10னிஸ் ஆட்சியிலான லாவோஸில் சிறை அதிகாரிகள் மனித உரிமை அம்சங்களில் அலட்சியப் போக்கை கடைப்பிடி க்கிறார்கள்.

ஜெனீவா ஒப்பந்தம் பற்றியோ ஐக்கிய நாடுகள் மனித உரிமை பிரகடனம் பற்றியோ தாங்கள் கவலைப்படப் போவதில்லை என்று அவர்கள் கூறியதாக லாவோஸ் சித்திரவதைகளினால் பாதிக்கப்பட்ட டேன்ஸ் தம்மை துன்புறுத்தியவர்களைப் பற்றி குறிப்பிடுகையில் கூ றினார். சிறை அதிகாரிகள் இதனை பரிகாசம் செய்ததுடன் லாவோஸ் ஒரு கம்ய10னிஸ் நாடென்றும் அந்த நாட்டின் இறைமையில் எந்தவொரு நாடும் தலையிட முடி யாதென்றும் கூறினார்கள். ஐக்கிய நாடுகள் சபையினாலும் கூ டத் தான் என்றும் தெரிவித்தார்கள்.

Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
மனித உரிமை ??? - by Mathan - 05-14-2004, 04:04 AM
[No subject] - by Mathan - 05-14-2004, 12:06 PM
[No subject] - by Mathan - 05-14-2004, 12:08 PM
[No subject] - by Mathan - 05-15-2004, 12:11 PM
[No subject] - by Mathan - 05-15-2004, 12:16 PM
[No subject] - by Mathan - 05-19-2004, 03:20 PM
[No subject] - by tamilini - 05-21-2004, 11:14 PM
[No subject] - by Mathan - 05-30-2004, 06:43 AM
[No subject] - by tamilini - 05-30-2004, 05:14 PM
[No subject] - by Mathan - 06-05-2004, 04:14 PM
[No subject] - by Mathivathanan - 06-05-2004, 05:17 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)