06-05-2004, 04:09 PM
இணையத்தளமூடாக இலங்கை சிறுவரை வசப்படுத்த முயற்சி
இணையத்தளத்தினூடாக இலங்கைச் சிறுவர்களை தன்வசப்படுத்த முயன்ற, சிறுவர்கள் மீது வேட்கை கொண்ட லண்டன் வாசி ஒருவருக்கு பிரிட்டன் இரு வருட கால சிறைத்தண்டனையை வழங்கியிருக்கிறது.
லண்டனைச் சேர்ந்த பிரயன் பார்னெல் (66 வயது) என்பவர் கடந்த 2002 ஆம் ஆண்டு இசைநாடகக் கம்பனியொன்றினூடாக தெற்காசிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்த வேளையில், இணையத்தளத்தின் ஊடாக இளம் பையன்களை தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
இச்செய்தியை இணையத்தளத்தில் கண்டுகொண்ட இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் ஒரு 15 வயது சிறுவன் என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு இணையத்தளம் ஊடாக பார்னெல்லையுடன் தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து, சில மணித்தியாலங்களில் அவர் பதிலளித்துள்ளதுடன், மின்னஞ்சல் மூலமாக தனது புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார். அவற்றுள் பார்னெல் பாலியல் ரீதியான உறவில் ஈடுபட்டிருப்பது போன்ற படமொன்றும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கை அதிகாரிகள் பார்னெல்லின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, அவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தியுள்ளனர். இவர் மீது வழக்குத் தாக்கல் செய்வதற்கு இலங்கை சட்டத்தில் இடமில்லாததன் காரணமாக இவ்வதிகாரிகள் இது தொடர்பான விபரங்களை பிரிட்டிர்; பொலிஸாருக்கு அனுப்பியுள்ளனர்.
பிரிட்டிர்; பொலிஸார் இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து கொழும்பில் சாட்சியங்களை விசாரணைக்குட்படுத்திய பின்னர் 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பார்னெல்லை கைது செய்தனர்.
லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன. கடந்த புதன்கிழமை சந்தேக நபருக்கு இரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், இவரது பெயர் பிரிட்டிர்; பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் பதிவு செய்யப்படவுள்ளது.
இச்சம்பவமானது உலகெங்கும் சர்வதேச ஒத்துழைப்புடன் சிறுவர் பாதுகாப்பு நடவடிக்கைகள் வளர்ச்சி பெற்று வருவதை வெளிக்காட்டுகின்றது. அத்துடன் சிறுவர்கள் மீதான துர்;பிரயோகத்தில் ஈடுபட முனைபவர்களும், அது தொடர்பான புகைப்படங்களை வெளியிடுபவர்களும் எங்கிருந்து செயற்பட்டாலும் நாம் அவர்களை கண்டுபிடிக்க முடியும் என்பதையும் இச்சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது என்று பிரதம புலனாய்வு அதிகாரி மேட் சார்டி தெரிவிக்கின்றார்.
Thinakkural

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>