Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எயிட்ஸ்
#1
வளர்முக நாடுகளுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள எச்.ஐ.வி

ஆபிரிக்க, கரிபிய, பசிபிக் நாடுகளில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் அபிவிருத்திக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று ஐரோப்பிய ஆர்வலர் குழுக்கள் எச்சரிக்கை செய்துள்ளன.

15 வயதுக்குட்பட்ட 3.4 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் எய்ட்ஸின் விளைவாக அவர்களது தாயை அல்லது தந்தையை அல்லது இருவரையுமே இழந்துள்ளனர் என்று கொன்கோர்ட் எனப்படும் அரசாங்க சார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது. 2,000 க்கும் அதிகமான ஐரோப்பிய அபிவிருத்தி நிறுவனங்களை உள்ளடக்கிய தாய் அமைப்பாக கொன்கோர்ட் விளங்குகிறது.

இந்த அநாதைப் பிள்ளைகளில் 80 சதவீதமானோர் உப சாரா ஆபிரிக்க பிராந்திய நாடுகளில் வசிக்கிறார்கள் என்று மனிதநேய அமைப்பான கொன்கோர்ட் கூறுகிறது. ஆபிரிக்க, கரிபிய, பசுபிக் பிராந்திய நாடுகள் எச்.ஐ.வி.எய்ட்சினால் ஏற்படக்கூடிய மிக மோசமான பொருளாதார அபிவிருத்தி விளைவுகளை தவிர்க்க வேண்டுமானால் அநாதை மற்றும் பாதிப்படையக்கூடிய சிறுவர்களின் எதிர்காலத்திற்காக தாமதமின்றி முதலீடு செய்ய வேண்டியது அவசியமாகும் என்று கொன்கோர்ட் வலியுறுத்தியுள்ளது.

உலகளாவிய அபிவிருத்தியை அச்சுறுத்தும் உலகளாவிய பிரச்சினை இதுவாகும் என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ள கொன்கோர்ட் இந்தக் கொள்ளை நோய் தோன்றியதிலிருந்து உலகெங்கிலும் 60 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி. கிருமித் தொற்றுக்கு ஆளானார்கள் என்றும் 20 மில்லியன் பேர் இதற்குப் பலியானார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.தொற்றுக்கு உள்ளானவர்களில் 95 சதவீதமானோர் வளர்முக நாடுகளை சேர்ந்தவர்களாவர்.

ஆபிரிக்க, கரிபிய, பசிபிக் பிராந்தியஐரோப்பிய ஒன்றிய அமைச்சரவை அண்மையில் பொட்சுவானா நகரான கபெரேனில் நடத்திய 29 ஆவது கூட்டத் தொடரில் சிவில் சமூக குழுக்கள் சமர்ப்பித்த அறிக்கையில் எச்.ஐ.வி./ எய்ட்ஸ் கொள்ளை நோயை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. சிறுவர்களே இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

வருடம் ஒரு தடவை நடத்தப்படும் ஆபிரிக்க, கரிபிய, பசிபிக் பிராந்திய ஐரோப்பிய ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளினதும் ஆபிரிக்க, கரிபிய, பசிபிக் பிராந்தியத்திலுள்ள 77 நாடுகளினதும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

பல நாடுகளில் எச்.ஐ.வி. தொற்றுக்களின் அதிகரிப்பு விகிதம் குறைந்துவர ஆரம்பிக்கும் இவ்வேளையில் அநாதைப் பிள்ளைகளிலும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய சிறுவர்களிலும் இதன் தாக்கம் இன்னமும் காணப்படுவது மிக மோசமான நிலைமையாகும் என்று கொன்கோர்ட் அறிக்கையின் இணை ஆசிரியர் குகி லார்யா தெரிவித்தார்.

பல நாடுகளில் அநாதைப் பிள்ளைகள் மற்றும் இந்நோயினால் பாதிப்படையக் கூடிய சிறுவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளின் தாற்பரியம் உணரப்படுவதில்லை என்று கொன்கோர்ட் கூறுகிறது. சிறுவர்களுக்கு அரசியல் செல்வாக்கும் நல்ல குரல்வளமும் இல்லாதிருப்பது அவர்களது நலன்களை பாதுகாப்பதற்கு பெரும் தடையாக இருக்கிறது என்றும் கொன்கோர்ட் குறிப்பிட்டுள்ளது.

எச்.ஐ.வி/எய்ட்ஸ் காரணமாக அநாதைப் பிள்ளைகளினதும் பாதிப்படையக் கூடிய சிறுவர்களினதும் தொகை அதிகரித்துவரும் அதேவேளையில் இப்பிரச்சினையினால் பாரம்பரிய உள்ளூர் பராமரிப்பு சேவைகளும் அருகிவருகின்றன என்றும் கொன்கோர்ட் கூறுகிறது.

பாதுகாப்பு வலையமைப்புகளின் பலவீனம் காரணமாக மேலும் மேலும் சிறுவர்கள் வீதிச் சிறுவர்களாக அல்லது சிறு பராய விபசாரிகளாக அல்லது சிறு பராய போராளிகளாக அல்லது வேறு வழிகளில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவோராக மாறிவிடும் அபாயம் எதிர்நோக்கப்படுகிறது என்று பிளான் நெதர்லன்ட்ஸ் அமைப்பைச் சேர்ந்த மேறியோஸ் வன்டர்சான்ட் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஆபிரிக்க, கரிபிய, பசிபிக் பிராந்திய நாடுகளும் எச்.ஐ.வி/ எய்ட்ஸ் பிரச்சினைக்கும் இதனால் ஏற்படக்கூடிய வறுமை நிலைமைக்கும் தீர்வு காணக்கூடிய பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டளவில் உலக வறுமையை அரைவாசியாக குறைப்பதுடன் கல்வி, சுகாதார துறைகளை விருத்தி செய்வதென 2000 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மிலேனியம் அபிவிருத்திக் குறிக்கோள்களில் இந்நடவடிக்கைகளும் அடங்குகின்றன. ஆனால் ஆபிரிக்க, கரிபிய, பசிபிக் பிராந்திய நாடுகளில் வறுமையினால் ஏற்படும் நோய்கள் மற்றும் மகப்பேற்று சுகாதாரம் ஆகியன தொடர்பாக பெப்ரவரி மாதத்தில் நடை பெற்ற ஐரோப்பிய ஒன்றிய, ஆபிரிக்க கரிபிய, பசிபிக் பிராந்திய கூட்டுக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மூன்று மிலேனியம் அபிவிருத்திக் குறிக்கோள்களான சிசு மரண விகிதத்தை குறைத்தல், மகப்பேற்று சுகாதாரத்தை விருத்தி செய்தல், எச்.ஐ.வி/எய்ட்ஸை கட்டுப்படுத்தி அது பரவுவதை தடுப்பது ஆகியனவே குறிப்பிட்ட காலக்கெடுவான 2015 க்குள் நிறைவேற்றப்பட முடியாதவையாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமையின்படி, சுகாதாரம் மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் ஆகியன சம்பந்தப்பட்ட துறைகளுக்கான உதவித் தொகை ஒதுக்கீடுகள் தற்போதையதைப் போன்றே தொடருமானால் சுகாதாரம் மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் ஆகியன தொடர்பான குறிக்கோள்களை நிறைவேற்ற முடியாதென்று லார்யா கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட சகல பகுப்பாய்வுகளிலிருந்தும் இது தெளிவாகிறது என்றும் அவர் கூறினார்.

கொன்கோர்ட், பிளான் யுரொப் அமைப்புக்கள் வறுமை காரணமாக ஏற்படும் நோய்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும்போது பெண்கள் சிறுவர்கள் முதியோர் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஆபிரிக்க, கரிபிய, பசிபிக் பிராந்திய நாடுகளிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளன. பாலியல் மகப்பேற்று சுகாதாரம் சிறுவர்களுக்கான தொற்றுநோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை அரசாங்கங்கள் அவற்றின் அபிவிருத்திக் கொள்கைகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இவ்வமைப்புக்கள் கேட்டுள்ளன.

எச்.ஐ.வி/எய்ட்ஸ் கொள்ளை நோயை ஒழிக்கவும் அதற்கான தடுப்பு நடவடிக்கையை அமுல் செய்வதற்கும் பங்காளி நாடுகள் நிதியளிக்க வேண்டுமெனக் கோரும் என்ஜிஓக்கள் வளர்ந்தவர்களும் இளைஞர் யுவதிகளும் திருப்திகரமானதும் ஆரோக்கியமானதுமான பாலுறவு வாழ்க்கையை அனுபவிப்பதற்கான வாழ்க்கைத்திறனை விருத்திசெய்ய அவசியமான கல்வியையும் சேவைகளையும் விநியோகங்களையும் பெற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளன.

முக்கியமாக எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றுள்ள சிறுவர்களுக்கு சுகாதார பராமரிப்பையும் மட்ட ஆதரவையும் வழங்குவதற்கான பிரமாணங்களை ஐரோப்பிய ஒன்றிய வரவுசெலவுத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென கொன்கோர்ட் கேட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய ஆபிரிக்க கரிபிய, பசிபிக் சபை எச்.ஐ.வி/எய்ட்ஸ் பிரச்சினைக்கு பயன்தரும் வகையில் தீர்வுகாண உறுதிவாய்ந்ததும் பொறுப்பானதுமான தலைமைத்துவத்தை வழங்க வேண்டுமென்றும் கொன்கோர்ட் கூறுகிறது.

ஐ.பீ.எஸ்/வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
எயிட்ஸ் - by Mathan - 06-05-2004, 03:42 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)