Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தலைப்பும் கருத்தும்
#8
வணக்கம் மீண்டும்...

நன்றிகள் குருவிகள்.

1. நீங்கள் எழுதிய மூன்று பதில்களின் மூலமும் அவற்றில் குறிப்பிடப்பட்டவை மூலமும் கருத்தைத் திசைதிருப்பியவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை ஒத்துக்கொண்டுள்ளீர்கள்.

2. உணர்ச்சிக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லாதது போல குறிப்பிட்டிருக்கிறீர்கள். எதுவாக இருப்பினும் உணர்ச்சிவசப்பட்டதால் தான் வழங்கப்பட்ட எச்சரிக்கையை அறிவுபூர்வமாக எடுத்துக் கொள்ளாமல் இவ்வளவு எழுதுகிறீர்கள்.

3. உண்மையில் நீங்கள் கருத்தைத் திசைதிருப்பியவராக அல்லாமல் இருந்திருந்தால் எச்சரிக்கையை உங்களுக்கு வழங்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளாமல் "அந்தத் தலைப்பின்" கீழான உங்கள் கருத்துக்களைத் தொடர்ந்திருக்கவேண்டும்.

4. திசைதிருப்பியவர் நீங்கள் அல்லாத பட்சத்தில், வழங்கப்பட்ட எச்சரிக்கையை உங்களுக்கு வழங்கப்பட்டாதாக நீங்கள் ஏடுத்துக்கொண்டால் அது உங்களின் _ _ _ _ _ _ _ _ _ யைக் குறிக்கிறது.

5. கருத்தைக் கண்காணிப்பது கருத்தாளரைக் கண்காணிப்பது என்று உங்களைக் குழப்பிக் கொள்ளாதீர்கள். அல்லது மற்றவர்களைக் குழப்ப நினைத்தால் - மன்னிக்கவும். நோக்கர்கள், அங்கத்துவர்கள், கருத்தாளர்கள் - இம்மூன்று நிலைகளும் அந்தந்த நேரங்களில் மாறுபடும்.

6. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நான் நீங்கள் பாதைமாறிப் போகிறீர்கள் என்று சொன்னால், நீங்கள் "வாகனம் மாறிப்போனால் என்ன இலக்கை அடைஞ்சால் சரிதானே" என்று எழுதுகிறீர்கள்.

7. மூன்று பக்கம் போனபிறகு வந்து சொல்கிறீர்கள், நான்னு பக்கம் போனபிறகு சொல்கிறீர்கள் என்று வருத்தப்படுவது நியாயம் தான் குருவிகள். *மூன்றுபக்கத்திலும் எப்போது கருத்துத் திசைமாறியது என்று நான் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லையே! யார் திசைமாற்றினார்கள் என்றும் நான் குறிப்பிடவில்லை.

8. மற்றையது நீங்கள் எழுதிய கருத்தில் மருத்துவக்குறிப்பு இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். அறிவியல்பூர்வமாக இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் குறிப்பிட்டது திசைமாற்றுகிற கருத்துக்களைப் பற்றியது. அவை எல்லாமே உங்களுடையதுதான் என்று அளவில்லாத தொப்பியைப் போட்டுக்கொண்டு அளவில்லை அளவில்லை என்றால் நான் என்ன செய்வது.

* எப்பொழுது கருத்து திசைமாறியது, யாரால் திசைமாற்றப்பட்டது என்று நான் குறிப்பிடவில்லை. காரணம், நீங்கள் எவரும் சிறுபிள்ளைகள் அல்ல என்பதாலும் அது அவசியமற்றது என்பாதாலும்- திசைமாறியவர்கள், திசைமாற்றியவர்கள் எல்லோரும் கருத்துக்குள் மீண்டும் வரவேண்டும் என்பதாலேயே எச்சரிக்கை செய்யப்பட்டது.

எழுதப்பட்ட எச்சரிக்கையை பலரும் சரியாகவே விளங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று நம்புகிறேன். அப்படி, எச்சரிக்கையை நண்பர் "குருவிகள்" தவிர மற்றவர்களும் சரியாக விளங்கிக் கொள்ளவில்லையென்றால் எழுதுங்கள்.


Reply


Messages In This Thread
[No subject] - by Eelavan - 06-04-2004, 01:17 PM
[No subject] - by இளைஞன் - 06-04-2004, 02:12 PM
[No subject] - by kuruvikal - 06-04-2004, 02:40 PM
[No subject] - by இளைஞன் - 06-04-2004, 02:58 PM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 03:20 PM
[No subject] - by kuruvikal - 06-04-2004, 04:57 PM
[No subject] - by இளைஞன் - 06-05-2004, 12:06 AM
[No subject] - by kuruvikal - 06-05-2004, 12:40 AM
[No subject] - by vasisutha - 06-05-2004, 03:07 AM
[No subject] - by tamilini - 06-05-2004, 12:00 PM
[No subject] - by kuruvikal - 06-05-2004, 12:10 PM
[No subject] - by vasisutha - 06-05-2004, 08:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)