06-04-2004, 08:31 PM
சர்வதேச ரீதியில் சமாதானப் பணிகள் புரியவே இலங்கையில் சமாதானப்படையணி உருவாக்கம்
இலங்கையில் சமாதான படையணியொன்றை உருவாக்கி, உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் சமாதானப் பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு பெற்றுக் கொடுக்கும் தார்மீக பணியொன்றில் இலங்கை இராணுவம் ஈடுபட்டுள்ளதாக மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்க தெரிவித்தார்.
இராணுவ தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
களுத்துறை குக்குலேகங்க பகுதியில் சமாதான நடவடிக்கைகளுக்கான பயிற்சிப் பாடசாலையொன்றை ஆரம்பித்து சர்வதேச ஒத்துழைப்புடன் இலங்கைப் படையினருக்கு சமாதான பணிகளுடன் சம்பந்தப்பட்ட பயிற்சிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்திருப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கவே இந்த செய்தியாளர் மாநாடு இடம்பெற்றது.
இதில் மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்க, பிரிகேடியர் } நாத் ராஜபக்ர், கேணல் சுமேத பெரேரா ஆகியோர் உட்பட இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பாரமி குலதுங்க இங்கு தொடர்ந்து பேசும் போது கூறியதாவது:
இலங்கையில் முதல் முறையாக இவ்வாறானதோர் பாரிய பணியில் இலங்கை இராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்தப் பணிக்கு சர்வதேச நாடுகள் சிலவற்றின் பங்களிப்பும் கிடைத்துள்ளது.
இலங்கையில் சமாதான படையணியொன்றை ஸ்தாபிக்கும் முதல் முயற்சி எமது நாட்டினதும், உலக நாடுகளினதும் அமைதிப் பணிகளுக்கு உரமாக இருக்கும். உலகில் பல நாடுகளில் சமாதான படையணிகள் உள்ளன. அவை தேவை ஏற்படும் போது தேவையான நாடுகள் மூலம் சமாதான பணிகளில் ஈடுபட அழைக்கப்படுகின்றன.
இதுவரை இவ்வாறான பணிகளில் இலங்கையின் படையணியாக பங்குகொள்ள நாம் தவறியுள்ளோம். இருந்த போதும், ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளுக்கிணங்க தெரிவு செய்யப்பட்ட சிலரை வெளிநாட்டு சமாதான பணிகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் தமது பணியை திறம்பட நிறைவேற்றி எமது நாட்டுக்கும், இலங்கை இராணுவத்திற்கும் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளனர்.
தெற்காசியாவில் முதலில் 2000 ஆம் ஆண்டில் நேபாளத்தில் இவ்வாறான சமாதான படையணியொன்றை அமைக்கும் பயிற்சி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2002 ஆம் ஆண்டில் பங்களாதேர்pலும் இதே போன்ற பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.
மூன்றாம் கட்டத்தில் 2004 ஆம் ஆண்டில் இலங்கையிலும் இவ்வாறானதோர் பணிக்கு அடித்தளம் போட்டு, செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டு, மல்டி பிளட்டூன் எக்சய்ஸ் 3. 'சாமகமன" என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
சமாதான படையணிப் பயிற்சி பாடசாலை களுத்துறை குக்குலேகங்க பகுதியில் இம் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படும்.
இந்தப் பயிற்சி நடவடிக்கைகள் அமெரிக்காவின் அனுசரணைகளுடன் இடம்பெறவுள்ளதுடன், பங்களாதேர்;, நேபாளம், மொங்கோலியா, இலங்கை ஆகிய நாடுகளும் கலந்து கொள்ளவுள்ளன.
இதில் உள்நாட்டு, வெளிநாட்டு படைகளைச் சேர்ந்த 250 பேர், ஐந்து வகையான பயிற்சிகளை பெற்றுக் கொண்டு சமாதான படையணியை உருவாக்கும் ஆரம்ப பணியில் கலந்து கொள்கின்றனர்.
இதேவேளை, எதிர்காலத்தில் இப்பயிற்சியில் வேறு பல நாடுகளையும் இணைத்துக் கொள்ளவும் திட்டமிடப் பட்டுள்ளது. வெளிநாட்டு நிபுணர்களே இந்த பயிற்சிகளை நடத்தியும், மேற்பார்வை செய்தும் ஐக்கிய நாடுகள் சபைக்கு உறுதிப்படுத்துவர்.
புருண்டி, நாட்டின் சமாதான பணிகளுக்கு இலங்கைப் படையினருக்கு தற்போது அழைப்புக் கிடைத்துள்ளது. மேலும் பல நாடுகளும் இலங்கையரின் சேவைகளை பெற்றுக் கொள்ள ஆவலுடன் அழைக்கின்றனர் என்றார்.
பிரிகேடியர் நாத் ராஜபக்ர், இங்கு நடைபெறும் பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளித்தார்.
Thinakkural

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>