06-04-2004, 08:02 PM
ஐ.நா.வில் பணியாற்ற வெளிநாடு செல்லலாம் என்ற பொய்ப் பரப்புரையில் சிறீலங்கா இராணுவத்திற்கு பெருமளவில் ஆட்சேர்ப்பு
இதுவரை இரு சிறிய இராணுவ அணிகளை ஆபிரிக்க நாடுகளுக்கு ஐ.நா.சேவைக்கென சிறீலங்கா அனுப்பியுள்ள நிலையில், ஐ.நா.வில் பணியாற்ற வெளிநாடுகளுக்கு செல்வதற்காக இராணுவத்திற்கு ஆள்தேவை என்ற கவர்ச்சிப் பரப்புரையில், சிறீலங்கா அரசு மீண்டும் ஆட்சேர்ப்பை முடுக்கி விட்டுள்ளது.
வெளிநாடு செல்லும் வாய்ப்பு என்றதும் ஏராளமான சிங்கள இளைஞர்கள் தினமும் இராணுவ ஆட்சேர்ப்பிற்கு வந்து குவிவதாகத் தெரிகிறது.
இவ்வகையில் ஆட்கள் சேர்க்கப்பட்டாலும், முதலில் பயிற்சி, பயிற்சியின் பின் தெரிவாகும் ஒருசிலருக்கே ஐ.நா. படையில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும் என்பதைத் தெரிவிக்காமல், தெரிவாகும் அனைவரும் ஐ.நா.படையில் வெளிநாட்டுக்கு அனுப்பப்படவுள்ளார்கள் என்று பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
5ம் வகுப்புவரை கூட படிக்காது, வறுமையின் பிடியால் கூலி வேலை செய்யும் இளைஞர் யுவதிகளும், வேலையற்ற இளைஞர்களும் வெளிநாடு செல்லும் வாய்ப்பை எண்ணி, அதிகளவில் தற்போது படையில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
கடந்த சில வருடங்களாக, சிறீலங்கா இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முன்னெடுப்புக்கள் நாடுதளுவிய hPதியில் பலமாக முடுக்கி விடப்பட்டபோதும், சம்பள உயர்வு, பட்டா, போனஸ், மீதிக் குடும்பத்தினருக்கான சலுகைகள் என்று பல கவர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட போதும், யாரும் படையில் சேர விருப்பம் தெரிவி;க்காததால், ஆட்சேர்ப்பு முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.
தற்போது வெளிநாடு செல்லும் வாய்ப்பை முன்வைத்து, ஏராளமான சிங்களவர்களை படையில் சேர்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது மேலதிக படையினர் யாரையும் ஐ.நா. படைக்கு சிறீலங்காவிலிருந்து கேட்காத நிலையில், இத்தகைய பொய்ப் பிரச்சாரத்தை சர்வதேச அமைப்புக்கள் வினவ ஆரம்பித்துள்ளன. ஐ.நா. படையில் சேர்வதற்காக ஆள்சேர்ப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து ஆட்சேர்ப்பது சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்பது குறிப்பிடத்தக்கது.
puthinam

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>