Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தலைப்பும் கருத்தும்
#7
கருத்துக்கள கருத்துக்கள் மீதான மட்டுறுத்தினர்... நண்பர்... இளைஞனுக்கு....

முதலில் என்ன எழுதப்படுகிறது என்பதை சற்று சிந்தித்து நோக்குங்கள்...கருத்தைக் கண்காணிக்கலாம் கருத்தாளரைக் கண்காணிக்க முடியாது என்பதன் பொருள்...இக்களத்திற்கு வந்து கருத்தெழுதும் போதுதான் கருத்தாளர்கள் வருகிறார்கள் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள் என்பதல்ல அர்த்தம்...இங்கு விலகிச் சென்றதாகக் கருத்தப்படும் அனைவரும் வருகிறார்கள் பார்வையிடுகிறார்கள்....எழுதவில்லைப் போகிறார்கள்....ஆகவே அவர்களுக்குள் உள்ள ஏதோ ஒன்று எழுத விடவில்லை....அதை நீங்கள் கண்காணிக்க முடியுமா அதற்கான தகுதிதான் இருக்குமா என்பதே எமது கருத்தின் தொனியே தவிர நாம் பெரிய அறிவுப் பிரபஞ்சங்கள் என்று சொல்லவரவில்லை...நாம் அப்படியானவர்களும் அல்ல....! ஏதோ பட்டறிந்ததைச் சொல்லும் பாமரங்கள்....!

ஆம் உண்மை...சில மட்டுறுனத்தினர்களின் செயற்பாடுகள் குறித்து நாம் மாத்திரமல்ல இங்கு களத்தில் பலரும் பல தடவைகள் விசனம் தெருவித்திருந்தனர்...அதை நாம் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை...அதை நீங்களே பழைய கருத்துகளைச் சென்று பார்த்தால் புரியும்....!

அடுத்தது மட்டுறுத்தினர்களின் திடீர் வரவும் கருத்தாடப்படும் விடயம் தொடர்பான பலரது கருத்துக்கள் மீதான அவர்களின் பார்வையும்...இது இங்கு முக்கிய விடயம்....நீங்கள் அந்த மருத்தவப் பிரிவில் எச்சரிக்கை செய்ய ஏன் 3 பக்கங்கள் செய்திகள் அல்லது கருத்துக்கள் பரவ இடமளித்தீர்கள்....காரணம் என்னவோ நாம் அறியோம்...ஆனால் நாம் எழுதிய சில கருத்துகளுக்குள் மருத்துவம் சார் குறிப்புக்கள் உள்ளதை எம்மால் காட்ட முடியும்....அதுபோக எந்தத் தலைப்பை எடுத்தாலும் வெறும் மருத்துவமோ அல்லது விஞ்ஞானமோ பேசினால் அந்தத்தலைப்பு போட்ட செய்தியோடு அமைதி கொண்டுவிடும் என்பதற்கு விஞ்ஞானச் செய்திப்பக்கம் சான்று.....! யாரும் தமது சுய கருத்தாக எதுவுமே எழுதமாட்டார்கள்....ஏன்...???!

இந்த நிலை தொடர்ந்தால் எந்தத் தலைப்புத் தொடர்பிலும் பலரும் எழுதவே அஞ்சுவார்கள்...ஆனால் ஒரு அதிகபட்ச வரையறைக்குள்.... அவர்கள் சாதாரணமாக எழுத அனுமதிக்கப்படும் போது (குழப்பகாரர்களை இங்கு கணக்கில் எடுக்கத் தேவையில்லை...அவர்களுக்குத்தானே தணிக்கையும் தண்டனையும் வழங்குகிறீர்களே....) அவர்களை அறியாமலே அவர்களிடம் கிடக்கும் திறமைகளைத் தகவல்களை வெளிப்படுத்த முயல்வர்......விஞ்ஞானம் எழுதென்றால் யாரும் எழுதுவார்களா.....???! ஆனால் விஞ்ஞானம் என்று அறியாமலே பலரும் பல விஞ்ஞானத் தகவல்களைக் தம்மகத்தே கொண்டிருக்கிறார்கள்...அப்படியாயின் அவர்களிடம் இருந்து அவற்றை எப்படிப் பெறுவது....????! அதை அவர்கள் போக்கில் சென்றுதான் பெற வேண்டும்...அதற்குத்தான் கருத்துக்களம்...வாதம் பிரதிவாதம்...சண்டை... சச்சரவு எல்லாம்...ஆனால் அதை எத்தனை பேர் புரிந்து கொள்கிறார்கள் என்பதே கேள்விக்குறி.... Idea

இப்படிப்பல முரண்பாடுகளை உங்கள் பதிலில் நாம் கொண்டிருப்பினும்... இது உங்கள் களம் நீங்கள் எதையும் செய்யுங்கள் அதைத்தடுக்க நாம் யார்...????! :twisted:

இந்த விளக்கங்கள் எங்கள் கருத்தின் மீதும் எங்கள் மீதும் நீங்கள் கொண்டுள்ள நேரடியான தவரான பார்வையை சுட்டிக்காட்டவே...மேற்கொண்டு உங்களை நாம் எது தொடர்பிலும் மாற்றங்களையோ அல்லது வலியுறுத்தல்களையோ கோரவில்லை....எமது அபிப்பிராயத்தையே வெளியிட்டோம்.....ஏதோ எமக்குப்பட்டதைச் சொன்னோம்...சரியாக புரிந்து கொள்வீர்கள் என்று பார்த்தால் நீங்களும் உண்ர்ச்சிக்குத்தான் வேலை கொடுக்கிறீர்கள் அறிவுக்கல்ல என்பது புலனாகிறது....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Eelavan - 06-04-2004, 01:17 PM
[No subject] - by இளைஞன் - 06-04-2004, 02:12 PM
[No subject] - by kuruvikal - 06-04-2004, 02:40 PM
[No subject] - by இளைஞன் - 06-04-2004, 02:58 PM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 03:20 PM
[No subject] - by kuruvikal - 06-04-2004, 04:57 PM
[No subject] - by இளைஞன் - 06-05-2004, 12:06 AM
[No subject] - by kuruvikal - 06-05-2004, 12:40 AM
[No subject] - by vasisutha - 06-05-2004, 03:07 AM
[No subject] - by tamilini - 06-05-2004, 12:00 PM
[No subject] - by kuruvikal - 06-05-2004, 12:10 PM
[No subject] - by vasisutha - 06-05-2004, 08:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)