Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தலைப்பும் கருத்தும்
#3
மதிவதனன்:
மருத்துவ ரீதியாக தேங்காயெண்ணையை அணுகவேண்டிய இடத்தில், அரசியல் ரீதியாக அணுகியது திசைதிருப்பல்.

ஈழவன்:
ஆமாம் ஈழவன்! நீங்கள் சொல்வது சரி. தாங்களாகவே திருத்திக் கொள்வர்கள் என்று தவறான கணிப்பீடு செய்துவிட்டேன். அதற்காய் வருந்துகிறேன்.

குருவிகள்:
Quote:இது தலைப்புடன் சம்பந்தப்படாத போதும் எச்சரிக்கை ஒன்று இங்கு வைக்கப்பட்டதால் அது தொடர்பில் எழுந்த எமது எண்ண அலைகளை இங்கு முன்வைக்கின்றோம்....!
மீண்டும் மீண்டும் உணர்த்திய பின்பும், உணர்ந்த பின்பும் மறுபடி மறுபடி எழுதுவது _ _ _ _ _ _ _.
"உங்கள் கருத்து" என்கின்ற பிரிவு களம்பற்றிய உங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அடிக்குடி மறந்து போகிறீர்கள்.

Quote:இதென்ன கருத்துக்களமா அல்லது தகவற் தளமா...???! யாழ் டொட் கொம் எனும் ஒரு தகவற் தளத்துள் அடங்கும் ஒரு கருத்துக்களம்...அதிலேயே ஒருவர் இப்படி எழுதாதே அப்படி எழுது என்கிறார் .... மற்றவர் இதற்குமேல் எழுதாதே என்கிறார்....???!
கருத்துக்களைக் கருத்துக்களாக எழுதாமல், "கரைதல்"களாக எழுதினால் --> இப்படி எழுதாதே அப்படி எழுது என்றுதான் சொல்வார்கள். சொன்னதன் பிறகும் கரைந்துகொண்டேயிருந்தால் இதற்குமேல் எழுதாதே என்றுதான் சொல்வார்கள். அதன்பின்பும் கரைந்துகொண்டேயிருந்தால் களத்தில் இருந்தே விலக்கப்படுவார்கள். இந்த படிநிலைகள் கருத்துக்களத்தில் மட்டுமல்ல...

Quote:கருத்துக்களம் என்றால் எதுவிடயமாகவும் ஒரு வாதப்பிரதிவாதம் இருக்க வேண்டும் அதன் போது கருத்துக்கள் திசைமாறிச் செல்வது போல் இருந்தாலும் இலக்கை நோக்கி மீட்டுவர வேண்டியது கருத்தாளர்களின் கடமையே அன்றி...அதை எழுதாதே இதை எழுதாதே என்று எச்சரிப்பதானது கருத்தாடுபவர்களை உற்சாகப்படுத்தும் ஒரு கைங்கரியமாகத் தெரியவில்லை.....! அச்சுறுத்திப் பணிய வைப்பதாகவே தெரிகிறது....!

1. திசைமாறிப்போகும் கருத்தாளர்களுக்கு தாம் திசைமாறிப்போகிறோம் என்பது தெரிந்தால் தாமே இலக்கை நோக்கி வருவார்கள்.
2. ஆனால் தாம் திசைமாறிப்போகிறோம் என்பதே தெரியாமல் திசைமாறிப் போகிறவர்களிற்கு, நீங்கள் திசைமாறிப்போகிறீர்கள் என்று அறிவுறுத்த வேண்டிய நிலை எமக்கு உண்டாகிறது.
3. ஒருமுறை திசைமாறிப்போகிறவர்களை அறிவுறுத்தலாம். அறிவுறுத்திய பின்னும் மீண்டும் மீண்டும் கவனமில்லாமல் கருத்துப்போன போக்கிலே திசைமாறுபவர்களை எச்சரித்தால் தான் அடுத்தமுறை கவனமாக இருப்பார்கள்.
4. திசைதிருப்பவேண்டும் என்று அலைகிறவர்களை அறிவுறுத்தியும் பயனில்லை, எச்சரித்தும் பயனில்லை. இவர்களை என்ன செய்யவேண்டும் என்பது தெளிவு.

Quote:அது சுதந்திரமாக கருத்தாடும் வகையில் கருத்தாளர்களை உள்ளிளுக்க உதவுமா....????!
சுதந்திரமாகவும், சுத்தமாகவும் கருத்தாடிய பல கருத்தாளர்கள் தாமாக வெளியேறிய நிகழ்வுகள் நடந்ததாலும், அந்த சூழல் இப்பொழுது இருப்பதாலும் --> அதனை மாற்ற இது உதவும் என்றே நம்புகிறேன்.

Quote:சரி... அது இருக்கட்டும்...இந்த மட்டுறுத்தினர்கள் (ஒரு சிலரைத் தவிர) தாங்கள் கருத்தாளர்கள் அல்ல ஏதோ ஒரு தனி வகை என்பது போல பாவனை செய்வதும் சக கருத்தாளர்களுடன் கைகோர்த்து நிற்காமல் தாம் ஒரு நிர்வாகக் கிறுக்கர்கள் போல் பாவனை செய்வதும் மற்றைய கருத்தாளர்கள் மீது குறைந்தது இக்களத்தின் கருத்தாளன் என்ற குறைந்தளவு மதிப்பீடு கூட இல்லாமல் நடப்பதும் ஒன்றும் சிறந்ததாகத் தெரியவில்லை....!
மட்டுறுத்துனர்கள் கருத்தாளர்களாகவும் இருக்கலாம் அல்லது தனியே மட்டுறுத்துனர்களாகவும் இருக்கலாம். இது கருத்துக்களத்தின் நிர்வாகம் சார்ந்தது. அதுபற்றி இந்தநேரத்தில் நீங்கள் கவலைப்படுவது எதற்கு என்று விளங்கவில்லை. மட்டுறுத்துனர்களும் உங்களோடு கருத்தாடவேண்டும் என்ற உங்களுடைய எதிர்பார்ப்பும் அவசியமற்றது, அர்த்தமற்றது.

Quote:கருத்துச் திசைமாறுகிறது என்று கண்டால் எச்சரிப்பேன் வெட்டுவேன் புடுங்குவேன் என்று நில்லாமல் பதவியை கொஞ்சம் அரக்கி வைத்துவிட்டு களத்தில் இறங்குங்கள்....உங்கள் திறமையைக் காண்பித்து தலைப்புடன் சம்பந்தப்பட்ட உங்கள் கருத்துக்களால் கருத்தினை திசைப்படுத்துங்கள்...அதுதான் கருத்துக்களத்திற்கும் சக கருத்தாளர்களுக்கும் செய்யும் பெறுமதிமிக்க செயலாக இருக்க முடியும்
நீங்கள் _ _ _ _ _ _ _ _ என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள். கருத்துக்களத்திற்கு வேண்டியது _ _ _ _ _ _ _ _ அல்ல. மட்டுறுத்தினர்கள் தங்கள் திறமையைக் காட்டவேண்டும் என்பதற்காகத்தான் நீங்கள் கருத்தைத் திசைமாற்றுகிறீர்களோ. நல்ல விடயம். ஆனால் அதேமாதிரி, மட்டுறுத்துனர்கள் எச்சரிக்காதவாறு, வெட்டாது, புடுங்காது கருத்துக்களை திசைமாறாமல், பொருத்தமானதாக, அர்த்தமுள்ளதாக முன்வைத்து உங்கள் திறமையைக் கொஞ்சம் காண்பியுங்களேன்!

Quote:அதைவிடுத்து திடீர் திடீர் என்று தோன்றி எச்சரிப்பதும் தணிக்கை செய்வதும் பின் மறைந்து போவதும் ஒன்றும் களக் கருத்தாளர்களை நெறிப்படுத்தும் கைங்கரியமாகத் தெரியவில்லை....!
மட்டுறுத்துனர்கள் இங்கு முழுநேரப் பணியாளர்கள் அல்ல. நீங்களும் இங்கே சிறுபிள்ளைகள் அல்ல. மட்டுறுத்துனர்கள் தமக்கு கிடைக்கும் நேரத்தை ஒதுக்கி இங்கே ஒவ்வொரு கருத்தையும் கவனிக்கிறார்கள். சில தவறுப்பட்டுப் போகும்.

Quote:இதெப்படி இருக்கிறது தெரியுமா வகுப்பறை மொனிரரே வெளியில உலாவித் திரிந்து கொண்டு வகுப்புக்கு அடிக்கடி வந்து "டேய் ஒருத்தரும் வெளியில போகக் கூடாகது சரியா" என்பது போல இருக்கிறது....!

உதாரணத்தை தரும்பொழுது பொருத்தமாகத் தரவேண்டும். ஒன்றோடு ஒன்று சம்பந்தமில்லாத உதாரணத்தை எழுதுவது _ _ _ _ _ _ _ _ _.
நிற்க, மட்டுறுத்துனர்கள் தனிப்பட்ட முறையில் என்ன செய்கிறார்கள், எங்கு போகிறார்கள் என்பது ஒரு உண்மையான கருத்தாளனுக்கு அவசியமற்றது. தன்னுடைய கருத்தைக் கருத்தாக முன்வைத்துவிட்டு, அதற்கான பதில் வந்தால் அதற்கு பொருத்தமான பதிலை வைத்து கருத்தாடலைத் தொடர்வது தான் பயனுள்ளது.

Quote:களவிதிகள் எல்லாவற்றையும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் திணிக்க முயலாமல் கொஞ்சம் சில நெகிழ்வுத் தன்மையைக் காண்பிக்கக் கூடிய களவிதிகளில் கொஞ்சம் நெகிழ்வுப் போக்கை காண்பிப்பதே கருத்தாளர்கள் தம் கருத்தை சுதந்திரமாக முன்வைக்க உற்சாகளிக்க முடியும்....!
களவிதிகளை முழுமையாகத் திணிக்க முயன்றிருந்தால் சில கருத்தாளர்கள் இங்கே எழுதவே முடியாமல் போயிருக்கும். நெகிழ்வுதன்மையை இங்கே கடைப்பிடித்ததால் தான் தனிப்பட்ட தாக்குதல்களும், மட்டுறுத்துனர்களை விமர்சிப்பதுவும் நடக்கிறது. சுதந்திரத்தைக் கருத்தாளர்கள் சிலர் நன்றாகவே பயன்படுத்துகிறார்கள். வாழ்க.

Quote:அதேபோல் களவிதியும் பக்கச் சார்பில்லாமல் எல்லோருக்கு எதிராகவும் தேவையான வேளையில் கருத்துக்கள் சிதைந்து சச்சரவுகள் தோன்றாமல் இருக்க பயனபடுத்தப்படுவது அவசியமே....அதனை நட்புடன் செய்யுங்கள் இராணுவம் போல் சர்வாதிகாரம் போல் செய்யாதீர்கள்....அது கருத்தாடுபவர்கள் மனச்சோர்வடையவே வழி செய்யும்....! இது ஆங்கிலக் களமல்ல....தமிழ் களம் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்....எனவே குறிப்பிட்ட சில தமிழ் ஆர்வலர்களை மட்டுமே இங்கு கருத்தாட வைக்க முடியும் என்ற வரையறையையும் மனதிற் கொள்வது பயன்தரும்....!
சச்சரவுகளைத் தோற்றுவிப்பதற்கென சிலர் உலவுகிறார்களே அவர்களை என்ன செய்வது? தான் செய்கின்ற பிழைகளை உணராதவர்களிடம் களவிதிகளைச் சொல்லி உணரவைக்கலாம். உணர்ந்தும் ஒத்துக்கொள்ளாதவர்களை என்ன செய்வது? தமிழ் ஆர்வலர் என்பதற்காக அவர் களவிதிகளை மீறினாலோ கருத்துக்களைத் திசைதிருப்பினாலோ வீண் சச்சரவுகளைத் தோற்றுவித்தாலோ பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது!


Reply


Messages In This Thread
[No subject] - by Eelavan - 06-04-2004, 01:17 PM
[No subject] - by இளைஞன் - 06-04-2004, 02:12 PM
[No subject] - by kuruvikal - 06-04-2004, 02:40 PM
[No subject] - by இளைஞன் - 06-04-2004, 02:58 PM
[No subject] - by Mathivathanan - 06-04-2004, 03:20 PM
[No subject] - by kuruvikal - 06-04-2004, 04:57 PM
[No subject] - by இளைஞன் - 06-05-2004, 12:06 AM
[No subject] - by kuruvikal - 06-05-2004, 12:40 AM
[No subject] - by vasisutha - 06-05-2004, 03:07 AM
[No subject] - by tamilini - 06-05-2004, 12:00 PM
[No subject] - by kuruvikal - 06-05-2004, 12:10 PM
[No subject] - by vasisutha - 06-05-2004, 08:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)