06-03-2004, 05:49 PM
சூரியனை வெள்ளி கடக்கும் காட்சி! நேராக பார்க்கக் கூடாது!
எண்ணற்ற விண் அற்புதங்களை கண்டு வரும் உலக மக்களுக்கு வரும் 8-ந் தேதி மேலும் ஒரு அற்புதம் காத்திருக்கிறது. ஆனால், இதனை கண்ணால் பார்ப்பது பாதகமானது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்!
வரும் செவ்வாய்க்கிழமை அன்று சூரியனை வீனஸ் என்று அழைக்கப்படும் அழகு நட்சத்திரமான வெள்ளி கடக்கிறது.
பூமியில் இருந்து பார்க்கும்போது ஒரு கரும்புள்ளியாக சூரியனின் மேல் பகுதியில் மெல்ல கடந்து செல்லும் இந்த அரியதொரு காட்சி, 6 மணி நேரம் 12 நிமிட நேரம் நீடிக்கிறது.
இதனை சோலார் ஃபில்டர்ஸ் என்று அழைக்கப்படும் சூரிய ஒளியை நன்கு வடிகட்டி கண்ணுக்கு கூசாத வண்ணம் பார்க்கவல்ல புகை பிடித்த கண்ணாடி, பயன்படுத்தாத வண்ண பிலிம், சன் கிளாசஸ், பயன்படுத்தாத கருப்பு வெள்ளை பிலிம், நியூட்ரா டென்சிட்டி பில்டர்ஸ், போலார் ரைசிங் ஃபில்டர்ஸ், எக்ஸ்ரே பிலிம் ஆகியவற்றின் வாயிலாக காணலாம்.
இதுபோன்ற விண் அதிசயம் கடைசியாக எப்பொழுது நடந்தது தெரியுமா? 122 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1882ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. மீண்டும் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை காண இன்னும் 8 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ந் தேதி மீண்டும் இதேப்போல் வெள்ளி சூரியனை கடக்கிறது.
இத்தகவல்களை ஹரியான மாநில விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பேரவையின் இயக்குனர் வி.எஸ். குண்டு செய்தியாளர்களிடம் கூறினார்.
Webulagam

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>