06-03-2004, 02:28 AM
கிழக்கில் இடம்பெறும் படுகொலைச் சம்பவங்கள் குறித்து உதவி வழங்கும் மாநாட்டில் கவலை தெரிவிப்பு
இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற சமாதான முயற்சிகளில் முன்னேற்றங்கள் காணப்படாத விடத்து வெளிநாட்டு நிதியுதவிகள் கைநழுவிப் போகும் சாத்தியம் உள்ளதாக இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டின் ஏற்பாட்டாளர்குழு தெரிவித்துள்ளது. உடனடியாக சமாதான செயற்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொண்டால் மாத்திரமே வெளிநாட்டு நிதியுதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் மேற்படி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்புக்கு உதவிகளை வழங்கும் நாடுகளின் மாநாடு செவ்வாய்க்கிழமை பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸில் நடைபெற்றது.இங்கு சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் சமாதான செயற்பாடுகளுக்கான ஆர்வம் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய சங்கம், ஜப்பான், நோர்வே ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் மேற்படி மாநாட்டில் கலந்து கொண்டனர். சமாதான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு இணங்கிக் கொண்டுள்ள அரசாங்கத்தையும் புலிகள் இயக்கத்தையும் பாராட்டியுள்ள மேற்படி உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் நோர்வே நாட்டை சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு அனுசரணையாளராக ஏற்றுக் கொண்டுள்ளமையையும் வரவேற்றுள்ளனர். அத்துடன் சமாதான செயற்பாடுகள் குறித்து புலிகள் இயக்கம் வெளிக்காட்டும் ஆர்வத்தையும் பாராட்டியுள்ளனர்.மேலும் பொருளாதார திட்டங்களையும் நடுத்தர கைத்தொழில் திட்டங்களையும் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். வடகிழக்கில் இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்படும் வரை அப்பகுதிகளுக்கான நிதியுதவிகள் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும்
இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கு பகுதியில் இடம் பெற்று வரும் அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பாக கவலை தெரிவித்த மேற்படி நாடுகள் போர்நிறுத்த உடன்படிக்கையை அனைவரும் சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>