06-02-2004, 10:13 PM
அமரர் ஐp.நடேசனின் இறுதிஅஞ்சலியின் போது, அரசுக்கு பாலகுமார் கடும் எச்சரிக்கை
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ புதன்கிழமை, 02 யூன் 2004, 21:56 ஈழம் ஸ
இன்று கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பு செயலகத்தில் மூத்த பத்திரிகையாளரும் சிறந்த எழுத்தாளருமான 'நாட்டுப்பற்றாளர்" அமரர் ஜி.நடேசனுக்கு இறுதி வணக்க நிகழ்வு இடம்பெற்றபோது பல பிரமுகர்களும் உரை நிகழ்த்தினார்கள்.
எழுத்தாளர் திரு.பாலகுமார் உரையாற்றுகையில், தமிழினத்திற்குப் பாரிய பணி செய்த அற்புதமான ஒரு மனிதரை, எமது இனம் இழந்துவிட்டது என்று குறிப்பிட்டார்.
கடந்தகால வரலாற்றிலிருந்து சிங்கள அரசும் சிங்கள மக்களும் சரியான பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லை என்றும், பேச்சுவார்த்தைகளும் யுத்தநிறுத்தமும் வெறும் கண்துடைப்புக்களாகவே அரசு நினைக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
எத்தனையோ சிங்களத் தலைவர்கள், இராணுவத் தலைவர்கள், அரசியற் கட்சியின் தலைவர்கள் வந்துபோய்க்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் தமிழினத்தின் உரிமைக்குரலாக ஒலிப்பது எங்களது தலைவரே. அவர் ஒருவரே அரசில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும், எதற்கும் அஞ்சாது, எதற்காகவும் தன் நிலையை மாற்றிக் கொள்ளாது, துணிந்து தமிழின விடுதலைக்காகக் குரல் கொடுப்பவர்.
தேசியத் தலைவரைப் பற்றி யாராவது தவறாக மதிப்பீடு செய்தால், அதற்கான பின்விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்பதை சிங்கள அரசு புரிந்து கொள்ள வேண்டும். நாம் போரை விரும்பவில்லை. எம்மீது திணிக்கப்பட்ட போரில், நாம் வலுவானவர்கள் என்பதை சிங்களத் தலைமைக்கும் மக்களுக்கும் புரியவைத்துள்ளோம்.
இப்போது நாம் சமாதானத்திற்காக, எமது அடிப்படை உரிமைக்காகக் குரல்கொடுத்துக் காத்திருக்கிறோம்.
இந்த வேளையில் தொடர்ச்சியான இந்த அத்துமீறல்கள், கொலைகள், கொலை மிரட்டல்கள் மூலம் சிங்கள அரசு எமக்குத் தரும் செய்தி என்ன? என்ன அழுத்தத்தை சிங்கள அரசு தர எண்ணுகிறது? தமிழினத்தின் அறிவுப் பலத்தை அழிக்கும் எண்ணமா? அல்லது இறங்கி வந்து தருவதை ஏற்றுக்கொள் என்ற அழுத்தமா?
இலங்கையின் வரைபடத்தில் ஈழத்தின் எல்லைகள் எவையென்று சிங்கள அரசுக்கு நன்றாகவே தெரியும். வரைபடத்தில் பிரிவுகளை ஏற்படுத்தி, இல்லாத பிரிவினைவாதத்தையும் பிரதேசவாதத்தையும் இருப்பதாக நியாயப்படுத்த அவசியமற்ற இரகசிய வன்முறைகளில் சிங்கள அரசு இறங்கியுள்ளதை நாம் பார்க்கிறோம்.
இதுகுறித்து சிங்கள அரசு தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ஊடகத்துறைக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்பு, தமிழனத்திற்கான ஒரு மிகப்பெரிய துரோகம். சிங்கள அரசின் இந்தத் துரோகச் செயல் மீண்டும் இலங்கையில் ஒரு புதிய வரலாற்றைச் சொல்லப்போகும் அறைகூவலாக அமைந்து விடப்போகிறது. சிங்கள அரசு இதைப் புரிந்துகொண்டு, சரியான தெளிவான நிலைப்பாட்டை எடுப்பது மிகமிக முக்கியமானது.
இந்த நிலை தொடருமானால், நாம் மீண்டும் போருக்குப் புறப்பட்டு எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இந்த இறுதி எச்சரிக்கையை அரசு புரிந்துகொண்டு செயற்படும் என்று நாம் நம்புகிறோம்.
இங்கே உயிரிழந்து தூங்கும் அமரர் ஐp.நடேசன் ஒரு தனிமனித இழப்பென்று நாம் கருதவில்லை. இது ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் இழைக்கப்பட்ட ஒரு கோரமான அநீதி, அநியாயம், துரோகம். இந்த சோகநிலையில், இம்மரணத்தை நாம் அரசியலாக்க விரும்பவில்லை. ஆனாலும் அரசுக்கு தெளிவாக இதைச் சொல்லிவைக்கவே விரும்புகிறோம்.
என்று தன் உணர்வுகளை ஆக்ரோசத்துடன் கொட்டித் தீர்த்தார், அமரர் நடேசனின் நண்பனும் நலன்விரும்பியும் தமிழ்ப் பற்றாளருமான எழுத்தாளர் பாலகுமார்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>