Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Miss Universe 2004
#10
<img src='http://www.thatstamil.com/images22/cinema/jennifer.jpg' border='0' alt='user posted image'>

<b>மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற மிஸ் ஆஸ்திரேலியா</b>

2004ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை ஆஸ்திரேலியா நாட்டு அழகி ஜெனீபர் (20) வென்றார்.

மிஸ் யுனிவர்ஸ் ஈகுவடார் நாட்டில் உள்ள குயிடோ நகரில் நடந்தது. இந்திய அழகி தனுஸ்ரீ தத்தா உட்பட 80க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.

தொடக்க சுற்றுப் போட்டிகள் கடந்த மாதம் 10ம் தேதி முதல் நடந்தன. இதில் இந்தியா, ஈகுவடார், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நார்வே, டிரினிடட் நாட்டு அழகிகள் முன்னிலை பெற்றனர். இன்று நடந்த இறுதிப் போட்டியில் 80 நாட்டு அழகிகளும் அணிவகுத்து வந்தனர். பின்னர் நீச்சல் உடையில் தனித்தனியே நடை பயின்றனர். 10 அழகிகள் அரை இறுதிக்கு தேர்வானார்கள்.

அவர்களில் தனுஸ்ரீ தத்தாவும் ஒருவர். ஆனால் இறுதிச்சுற்றுக்குத் தேர்வான 5 அழகிகள் பட்டியலில் தனுஸ்ரீ தத்தாவால் இடம் பிடிக்க முடியவில்லை. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, போர்டோ ரிகோ, பராகுவே, டிரினிடட் நாட்டு அழகிகள் இறுதிச் சுற்றுக்கு வந்தனர்.

இறுதிச் சுற்றில் நடுவர்கள் கேட்டு கேள்விக்கு சிறப்பாக பதிலளித்து ஆஸ்திரேலியா நாட்டு அழகி ஜெனீபர் ஹாக்கின்ஸ் உலக அழகிப் பட்டத்தை வென்றார். ஜெனீபருக்கு முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் அமிலியா வேகா (டொமினிக்) கிரீடம் சூட்டினார்.

2வது இடத்தை அமெரிக்க அழகி சந்திபின்னெசியும், 3வது இடத்தை போர்டோரிகோ அழகி ஆல்பா ராயசும், 4வது இடத்தை பராகுவே அழகி யானினாவும், 5வது இடத்தை டிரினிடட் அழகி டானிலியும் பெற்றனர்.

இந்தப் போட்டியை சுமார் 8,000 பேர் நேரில் பார்த்தனர். உலகம் முழுவதும் சுமார் 150 கோடி பேர் தொலைக்காட்சியில் கண்டு களித்தனர்.


(thatstamil.com)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
Miss Universe 2004 - by Mathan - 05-29-2004, 06:49 AM
[No subject] - by Mathan - 05-29-2004, 06:51 AM
[No subject] - by Mathan - 05-29-2004, 06:59 AM
[No subject] - by Mathan - 05-29-2004, 07:06 AM
[No subject] - by kuruvikal - 05-29-2004, 11:36 AM
[No subject] - by aathipan - 05-31-2004, 10:02 PM
[No subject] - by Mathan - 06-02-2004, 10:26 AM
[No subject] - by Eelavan - 06-02-2004, 03:18 PM
[No subject] - by Paranee - 06-02-2004, 04:09 PM
[No subject] - by kuruvikal - 06-02-2004, 08:33 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)