06-02-2004, 04:32 PM
நடுநிலை என்பது இருவரையும் குற்றம் செய்யாதே என்று அழைப்பதில் இல்லை....குற்றம் ஒன்றின் தோற்றுவாய்....அதன் தொடர்ச்சி ...அதன் பின்னணி...அதன் தேவை என்று பலதையும் நீண்ட நோக்கில் நடுநிலை நின்று ஆராய்ந்து சொல்லும் அறிவுரை என்றால் அதை நாம் என்ன எந்தப் பகுத்தறிவாளனும் கேட்பான்....அப்படி அன்றி...அவர் பெரியவர்...இவர் எழுத்தாளர்...இவர் கவிஞர்....இவர் பெண்ணியவாதி சமூகச் சீர்திருத்தவாதி...இவர் நல்லவர்... வேண்டியவர்...எமக்கு ஆதரவா நாலு சொல்லுவார்...அல்லது எந்தச் சந்தர்ப்பத்திலும் எனக்கு வக்காலத்து வாங்குவார்...இவர் எனது கூட்டாளி...என்னுடைய துயரத்தின் போது அருகிருந்தவர்...உதவி செய்தவர் இப்படி என்று பல கோணங்களில் சிலரைப் பற்றி நாமே நமக்குள் ஒரு கற்பனைத் தோற்றம் கொடுத்து உயர்த்தி வைத்துக் கொண்டு அவர்களின் தவறுகளைப் புறக்கணித்து விட்டு.... மற்றவர்கள் அவர்களின் செயல்களை,தவறுகளை சுட்டிக்காட்டும் போது அல்லது கண்டிக்கும் போது அல்லது அவர்களின் செயல்கள் குறித்து அவர்களுக்கு மறைமுகமாக உணர்த்த முற்படும் போது...நாமோ நடுநிலை என்று கூறி தங்கள் சார்ந்தோரின் பெரிய தவறுகளை மறைப்பதற்காக மற்றவர்களின் சிறிய தவறைத் தூக்கிப் பிடித்துக்காட்டி நடுநிலை என்ற போர்வையில் இருவரையும் சமனாக வைத்துக் கருத்துச் சொல்வது என்பது நடுநிலையல்ல...!
அப்படியானவர்களின் கருத்து ஒரு போதும் நடுநிலைக் கருத்தும் ஆகாது.....அவை தாம் சார்ந்தோர் விடும் தவறுகளுக்கு மறைமுக அங்கீகாரம் வழங்குவதே ஆகும்...அதனால்தான் இன்றும் குருவிகள் தொடர்பில் சில பெண்களும் சரி சில ஆண்களும் சரி தமது நிலை... சுயம் எதுவுமே கருதாது கண்டபடி திட்டித் தீர்க்கவும் அதை மறைக்க... பின் நால்வர் சண்டை சமாதானம் என்பதும் தொடர்கதையாகி வருகிறது.....! இவைதான் குற்றவாளிகள் தமது குற்றங்களை எந்த நியாயத்துக்கும் அப்பால் செய்ய தூண்டுகின்றன.....! எனவே எமக்குதுத் தேவை இதய சுத்தியுள்ள நடுநிலைக் கருத்தே அன்றி நடுநிலை என்ற போர்வைக்குள் இருந்தான கருத்தல்ல....அப்படியான கருத்துக்கெல்லாம் செவிமடுக்க வேண்டிய தேவை எமக்கில்லை எனும் போது நாம் தாம் எம் சுயத்தைப் பாதுகாக்க சிலவற்றை செய்ய வேண்டி ஏற்படுகிறது....இது இக்களத்தில் மட்டும் அன்றி தமிழ் சமூகத்திலும் நன்கு ஊறிக்கிடக்கும் ஒரு துரதிஷ்டமான சமூக நடத்தை........!
பாரபட்சமான முறையில் வழங்கப்பட்ட எச்சரிக்கை ஒன்றைத் தொடர்ந்து நாம் இங்கு வந்த போது சில உறுதியோடுதான் வந்தோம்....ஆனால் நாம் ஏதோ எழுத அதற்கு சம்பந்தமே இல்லாது தான் கொண்ட மனக் காழ்புணர்ச்சியைக் கொட்ட வேண்டும் என்று துடிக்கும் மனிதர் 9 போட்டு மகிழ்ந்தார்....அதையாரும் கண்டிக்கவில்லை.....அதை அப்போது அங்கு செய்திருந்திருந்தால்...இங்குள்ள பலபேரின் நடுநிலமை குறித்து நாமே குழம்பிப் போயிருப்போம்...அப்படிச் செய்யாது விட்டதற்கு நன்றி...!
ஒன்றைச் சொல்கிறோம் கெட்டது செய்ய நினைத்தால் நிச்சயம் இவர்களைவிட மிக மோசமான கெட்டதுகள் செய்ய எம்மால் முடியும்....ஆனால் நாம் பகுத்தறிவுள்ள தற்பெருமையற்ற சாதாரண மனிதர்கள்....அதை ஒரு போதும் செய்ய மாட்டோம்....!
பிரச்சனைக்குத் தீர்வு சரியான விளக்கமும் புரிந்துணர்வுமே அன்றி சமாளிப்புக்கள் அல்ல...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>