07-08-2003, 01:14 PM
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஆனந்தசங்கரிக்கு நம்பிக்கை தெரிவிக்கும் வகையில் பிரேரணை கொண்டுவரப்பட்டதே தவிர அது சபையால் ஏற்றுக்கொளளப்படவும் இல்லை. ஏகமனதாக நிறைவேற்றப்படவும் இல்லை. இவ்வாறு கூட்டணியின் சிரேஷ்ட உபதலைவர் ஜோசப் பரராசசிங்கம் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் பிற்பகல் 2.15க்கு கூட்டம் ஆரம்பமானபோதும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து நீண்ட நேரம் ஆராயப்பட்டதால் கட்சி சம்பந்தமான விடயங்களை ஆராய நேரம் போதாமல் போய்விட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

