06-02-2004, 03:05 AM
நடேசன் படுகொலைக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும்
யாழ். எம்.பி. சிவõஜிலிங்கம்
மூத்த பத்திரிகையாளர் ஐயாத்துரை நடேசன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது ஈழத்தமிழ் மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. நீண்டகாலமாக தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்காகவும், ஒற்றுமைக்காகவும் அயராது உழைத்துவந்த நடேசனது இப்படுகொலைச் சம்பவத்திற்கான முழுப்பொறுப்பினையும், அரசே ஏற்றுக் கொள்ளவேண்டும் என யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உங்கள் பெயரில் எங்கள் தெரிவு என்ற அடிப்படையில் கருணா குழுவினரின் பெயரில் இவ்வாறான படுகொலைகளை அரசாங்கம், படைகளின் உதவியுடன் செய்வதனை தொடர்ந்தும் எம்மால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. இவ்வாறான படுகொலைகளை நிறுத்துவதன் மூலம்தான் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்க முடியும்.
இப்படுகொலைகளைச் செய்துவரும் அரசாங்கத்தின் முகமூடியைக் கிழித்தெறிந்து சர்வதேசத்திற்கும் அம்பலப்படுத்த முன்வருமாறு தமிழ்த்தேசிய இனத்தின் சகல பிரிவினருக்கும், முற்போக்காளர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் நாட்டுப் பற்றாளர் நடேசனின் மனைவி, அன்புச் செல்வங்கள், குடும்பத்தினர் தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எனது ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழினப் படுகொலைகளைப் பற்றி செய்திகளைத் திரிவுபடுத்தி வெளியிடும் சிங்கள ஊடகங்களையும் கண்டிக்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>