06-01-2004, 06:52 PM
நெஞ்சை உலுக்கும் படுகொலைகள்
மட்டக்களப்பில் அடுத்தடுத்து இடம் பெறும் வன்முறைகள், துப்பாக்கிக் கலாசாரம், தொடர்பாக பத்திரிகைகள் அடிக்கடி சுட்டிக் காட்டி வந்தன.
அது மாத்திரமன்றி, பத்திரிகையாளர்கள், கல்விமான்களுக்கு அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும் தெட்டத் தெளிவாக பாதுகாப்புசார்ந்தோரின் கவனத்துக்கு பல்வேறு தடவைகள் கொண்டு வரப்பட்டன.
எவ்வாறெனினும் வன்முறைகளும், கொலைகளும் கட்டுமீறிச் செல்வதையே காண முடிகின்றது. அந்த வரிசையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய பாதுகாப்புத் தரப்பினர் தவறி விட்டனரோ என்ற சந்தேகமே இன்று எங்கும் மேலோங்கியுள்ளது. பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் அடிக்கடி இடம் பெற்று வரும் சம்பவங்கள் பாதுகாப்புப் படையினருக்கே பாரிய சவாலாக மாறி வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
போர் நிறுத்தத்துக்கு மத்தியில் ஆயுதபாணிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்களா? அல்லது வேறு ஏதேனும் சக்திகள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பழிதீர்க்கும் பணியில் ஈடுபடுகின்றனவா? என்ற சந்தேகங்களும் கூடவே எழுதுகின்றன. அத்துடன் மக்களின் பாதுகாப்பும் கேள்விகுறியாகி வருகிறது.
தமது அட்டூழியங்களுக்கும் வன்முறைக் கலாசாரங்களுக்கும் துணைபோகத் தவறுகிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அப்பாவி பத்திரிகையாளர்களைத் தீர்த்துக் கட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்கதும், கவலைக்குரியதுமாகும்.
இதுவரை காலம் அரசியல்வாதிகள் மீது வைக்கப்பட்ட குறி தற்பொழுது பத்திரிகையாளர்கள் மீது வேகமாக மாறி வருவதை நன்கு உணர முடிகின்றது. யாழ்ப்பாணத்தில் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலோ அல்லது பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக அக்கறை செலுத்தப்பட்டிருந்தாலோ இவ்வாறான படுகொலைகளைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும்.
சாதாரணமாக எழுத்துச் சுதந்திரத்தைக் கூட குழிதோண்டி புதைக்கும் வகையில் ஆயுத கலாசாரம் தலைவிரித்தாடுமானால், இந்த நாட்டின் எதிர்காலமும், இளம் வயதினரின் எதிர்காலமும் குட்டிச் சுவராகப் போவதை எவராலும் தடுக்க முடியாமலேயே போகும்.
சமுதாயத்தை நல்வழிப்படுத்தவும், அவர்களுக்குப் பக்க பல மாகவும்இருக்கும் புத்திஜீவிகள், பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் தடுத்து நிறுத்துவதற்கும் அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுப்பது இன்றியமையாதது.
வெறுமனே ஒவ்வொரு கொலைக்கும் ஏதாவதோர் நியாயம் கற்பித்து அதேவேகத்தில் மறந்து போவதை விடுத்து, மேலும் ஒருகொலை இந்த நாட்டில் எந்த மூலையிலும் இடம் பெறாதிருப்பதை உறுதி செய்வது அனைத்து தரப்பினரதும் கடப்பாடாகும்.
நாட்டின் சமாதானத்துக்காகவும், மக்களின் ஒருமைப்பாட்டுக்காகவும் ஓயாது குரல் கொடுத்து வந்த ஒரு ஜீவன் இன்று மீளாத்துயில் கொண்டு விட்டது. அந்த ஜீவனின் ஆத்ம சாந்திக்காக நாமும் பிரார்த்திக்கும் அதேவேளை, கொலைஞர்களை கண்டுபிடித்து சட்டத்தின்முன் நிறுத்த அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.
வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>