05-31-2004, 06:53 PM
ஊடகவியலாளர் நடேசன் கொலை தொடர்பாக இதுவரை எவரும் கைதாகவில்லை
ஜ மட்டக்களப்பிலிருந்து தேனுராள் ஸ ஜ திங்கட்கிழமை, 31 மே 2004, 19:04 ஈழம் ஸ
இன்று காலை மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் பிரேத பரிசோதனை முடிவடைந்திருப்பதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையிலுள்ள பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்டவர் சம்பந்தமாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் கூறுகிறது.
கடுமையான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இவர் உயிரிழந்திருப்பதாக பிரேதப் பரிசோதனையின் இறுதியில் தெரிவிக்கப் பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
கொலை சம்பந்தப்பட்ட முழுமையான தகவல்களை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் சுட்டிக்காட்டுகின்றனர். மட்டக்களப்பில் தற்போது பதற்றம் நிலவுவதனால் சாட்சியமளிப்பதற்கு பொதுமக்கள் எவரும் முன்வரவில்லையென்று பொலிசார் கூறுகின்றனர்.
நடேசன் கொலை செய்யப்பட்டதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளும், ஊடகவியலாளர்கள் பலரும், பிரமுகர்கள் பலரும் தமது கண்டனத்தையும் ஆழ்ந்த கவலையையும் தெரிவித்திருக்கின்றனர்.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>