05-30-2004, 03:22 PM
நோர்வேக்கு என்ன அக்கறை?
உலகளாவிய ரீதியில் சமாதானத்தை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கே நோர்வேயின் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய இடம் வழங்கப்பட்டிருக்கிறது
பொருளாதார ரீதியான எதிர்பார்ப்புகளே குறுகிய வேறு நோக்கங்களோ நோர்வேக்கு இல்லை.....
இனப்பிரச்சினை விவகாரத்தில் நோர்வே நாட்டின் ஈடுபாடு குறித்த விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட வண்ணமே இருக்கின்றன. எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்று பார்த்தால், சமன் சாப்பிடுகின்ற அரக்கர்கள் என்று அமைச்சர் மங்கள சமரவீர நோர்வே அனுசரணையாளர்களை ஒரு சந்தர்ப்பத்தில் விமர்சித்திருந்தார். தீவிரமான புலி ஆதரவாளர்கள் அவர்கள் என்றும் இந்த நாட்டை எவ்வாறு பிரிக்கலாம் என்று செயற்பட்டு வருகிறார்கள் என்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) விமர்சித்திருந்தது.
இன்னும் சிலர் ஒருபடி மேல் சென்று, கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவான லூதரலிஸ கோட்பாடுகளை பரப்புவதற்குத்தான் சமாதானத்தின் போர்வையில் இத்தனை பிரயத்தனங்களும் என்கிறார்கள். இலங்கையின் கடல் வளத்தின் மீதான ஆசைதான் சமாதான முயற்சிகள் மீதான ஆசை என்கிறார்கள் இன்னுமொரு பிரிவினர். இத்தகைய விமர்சனங்கள் எந்தளவிற்கு உண்மை என்று பார்ப்பதற்கு சமாதான முயற்சிகளில் நோர்வே நாட்டின் பின்னணி என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமானது.
மிக நீண்ட நிலப்பரப்பை (ஏறத்தாழ 5 000 மைல்கள்) கொண்டுள்ள நோர்வே, உலகின் முதல் 5 செல்வந்த நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. 45 இலட்சம் சனத்தொகையைக் கொண்டுள்ளது. இத்தனைக்கும் 1930 களிலும், 20 களிலும் மிக மோசமான வறுமை மற்றும் பல கர்;டங்களை அந்த நாடு அனுபவித்திருக்கிறது. பெரும் எண்ணிக்கையில் மக்கள் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்திருக்கிறார்கள். வருடத்தின் கூடுதலான காலப்பகுதியில் கடும் குளிர் நிலவுகின்ற ஒருநாடு.
ஆனால், இத்தனை கர்;டங்களையும், சவால்களையும் இலகுவாக வெற்றி கண்டு மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை இப்போது அனுபவிக்கிறது. அங்குள்ள சமூக ஜனநாயக அரசியல் இதனை உறுதிப்படுத்துகிறது. அற்புதமானதொரு ஜனநாயகக் கட்டமைப்பை அங்கு காண முடியும். பெண்களுக்கான சமத்துவத்தை எந்தவொரு மட்டத்திலும் கண்டு கொள்ளலாம். அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர். கடந்த முறை ஆட்சியிலிருந்த தொழிற்கட்சியின் அமைச்சரவையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள். அப்போது பிரதமராக இருந்த வரும் ஒரு பெண்தான்.
இத்தகைய மிகச் சிறந்த விழுமியங்களைக் கொண்டிருக்கின்ற நோர்வே சமாதானத்தின் மீதும் அபிவிருத்திக்கான உதவிகளின் மீதும் பற்றுறுதி கொண்டு செயற்படுவதற்குக், காரணம் அந்த நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைதான். உலகளாவிய ரீதியில் சமாதானத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு அதன் வெளிநாட்டுக் கொள்கையில் முதலிடம் வழங்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் மட்டுமல்ல, மத்திய கிழக்கு, குவாட்டமாலா, பிலிப்பைன்ஸ், சூடான், இந்தோனேசியா ஆகிய நாடுகள் உட்பட பல நாடுகளில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. சமாதான மேம்பாட்டாளர்கள் என்று சர்வதேச ரீதியாக நோர்வேக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையிலான வெளிநாட்டுக் கொள்கை வகுப்பே உலகளாவிய ரீதியிலான நோர்வேயின் சமாதான முயற்சிகளுக்குக் காரணம். இது ஒன்றைத் தவிர, பொருளாதார ரீதியிலான ஏதாவது எதிர்பார்ப்புகளோ அன்றி வேறு எந்தக் குறுகிய நோக்கங்களோ பின்னணியில் இல்லை. இதற்கான எந்தவிதமான தேவைகளோ, அடிப்படையோ நோர்வேக்குக் கிடையாது.
சமாதானத்திற்காகப் பாடுபடுவது மிகச் சிறந்த அங்கீகாரத்தைத் தனக்கு பெற்றுக் கொடுக்கும் என்று கருதிச் செயற்படுகிறது. இந்த ஒரு சொத்தை மட்டும் தான் இறுதியில் நோர்வே அநுகூலமாகப் பெற்றுக் கொள்ளப் போகின்றது.
உலகளாவிய ரீதியில் சமாதானத்தை மேம்படுத்துவதை கருதிய நோர்வேயின் செயற்பாடு, சர்வதேச அரசியலில் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக அமைந்திருக்கிறது. சமாதானத்தை மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் வறுமை ஒழிப்பு, சுற்றாடல் பாதுகாப்பு ஆகியவற்றுக்காகவும் காத்திரமான பங்களிப்பை நோர்வே செய்து வருகிறது.
இலங்கை சமாதான முயற்சியில் நோர்வேயின் ஈடுபாட்டைப் பார்க்கின்றபோது, 1970 களிலேயே பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுடன் நோர்வே தொடர்புபட்டிருக்கிறது. குறிப்பாக, அம்பாந்தோட்டையில் கிராமிய ஒருங்கிணைப்புச் செயற்றிட்டமொன்றை முன்னெடுத்தனர்.
அத்துடன், நோர்வே நாடு தமிழ் அகதிகளுக்கு திறந்து விடப்பட்டிருக்கிறது. இதனால், தமிழ் சமூகத்துடன் மிகச் சிறந்த இடைத் தொடர்புகளுக்கான வாய்ப்பை நோர்வே கொண்டிருக்கிறது. அங்குள்ள தமிழர்களும் மிகவும் சிறந்த நிலைமையில் இருக்கின்றனர். ஏராளமான தமிழர்கள் அங்கு பொறியியலாளர்களாகவும், மருத்துவர்களாகவும், கணக்காளர்களாகவும் பல்வேறு உயர் பதவிகளையும் வகிக்கின்றனர். இவ்வாறு எல்லா வகையிலுமே இலங்கை பற்றிய மிகச் சிறந்த அறிவு நோர்வேக்கு இருக்கிறது.
1990களில் தான் இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியில் நோர்வே நாட்டின் பங்களிப்புக் கோரி அரசாங்கத்தினாலும், புலிகளினாலும் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன. தனிநபர்கள் சிலரினூடாக இந்தத் தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக, ஆனபியர்டொவ்ட் ஜான் ஏகலான்ட் ஆகியோரைக் கூறலாம். சுமார் 20 வருடங்களாக இலங்கையில் வாழ்ந்து வரும் ஆனபியர் டொவ்ட் ஒரு பிரபலமான நோர்வே நாட்டவர் வேல்ட் விய10 என்ற அரச சார்பற்ற அமைப்பின் தலைவராக அவர் செயற்படுகிறார். ஜான் ஏகலான்ட் சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர். பின்னர் நோர்வேயின் வெளிநாட்டமைச்சுச் செயலாளராகவும் பணியாற்றியவர். இவர்கள்தான் சமாதான முயற்சியில் நோர்வேயின் அனுசரணையை ஆரம்பித்து வைத்தவர்கள்.
ஆனால், இலங்கை சமாதான முயற்சியில் நோர்வே அனுசரணையின் முதற்கட்டம் அவ்வளவு ஆரோக்கியமானதாக அமைந்திருக்கவில்லை. சமாதானத்திற்கான யுத்தம் என்ற கோட்பாட்டின் கீழ் அப்போதைய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் யுத்தத்தின்மீது தாகம் கொண்டிருந்தமை இதற்கான பிரதான காரணம். அத்துடன், நோர்வேயின் விசேட தூதுவரான எரிக் சொல்ஹெய்ம், அரசாங்கத்திலான குறிப்பாக, வெளிநாட்டமைச்சர் லடீ;மன் கதிர்காமரினால் விமர்சிக்கப்பட்டு வந்தார். இருந்தபோதிலும் ஒரு தாழ்நிலை தொடர்பு பேணப்பட்டு வந்தது.
ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்த பின்னர்தான் நோர்வேயின் பங்களிப்புச் சிறந்த நிலையை அடைய முடிந்தது. அனுசரணையாளர்களாகவும், மத்தியஸ்தர்களாகவும் அவர்கள் செயற்பட்டனர். யுத்த நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு கண்காணிப்புக் குழு ஸ்தாபிக்கப்பட்டு உண்மையானதொரு அமைதிச் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணியும், ஜே.வி.பி.யும் கடுமையான விமர்சனங்களை நோர்வே மீது முன்வைத்தன. கதிர்காமர் மற்றும் பொ.ஐ.முன்னணியின் சிரேர்;ட உறுப்பினர்கள் மிக மோசமாக விமர்சனம் செய்தனர். ஜே.வி.பி.யினர் நோர்வேத் தூதரகத்துக்கு முன்பாகவே நோர்வேயின் தேசியக் கொடியை எரித்தனர்.
ஆனால், இப்போது அந்த இரண்டு கட்சிகளும் இணைந்து புதிய ஆட்சியை அமைத்து, அதே நோர்வேயை மீண்டும் அழைத்திருக்கின்றன. இதற்குக் காரணம், அவர்களுக்கு வேறு மாற்றுத் தெரிவு இல்லை என்பதுதான்.
தற்போது நோர்வே இரு தரப்பினருடனும் ஆலோசனைகளை நடத்தி வருகிறது. ஆனால், சமாதானப் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரல் தொடர்பில் இரு தரப்பினரிடையேயும் இணக்கப்பாடு ஏற்படுவதாக இல்லை. இது இரு தரப்பினரதும் ஆர்வத்தில் தான் தங்கியிருக்கிறது.
தற்போதைய பிரச்சினையே அதுதான். சமாதானப் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டவுடன் சாத்தியமானளவு விரைவாக சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதில் தடங்கல்கள் இல்லை.
Thinakkural

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>