05-30-2004, 03:19 PM
கிழக்கு படைத் தலைமையில் புதிய மாற்றம் இராணுவ தரப்பின் நோக்கங்கள் என்ன?
மட்டக்களப்பில் புலிகள் தம்மை பலப்படுத்துவதை தடுக்கும் நோக்குடன் தொடரும் தாக்குதல்கள்
கிழக்கில் நிலைமைகள் மோசமடையலாமென அஞ்சப்படுகிறது. புலிகளுக்கெதிராகவும் பொதுமக்கள் மற்றும் கல்விமான்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலானது இவ்வாறானதொரு நிலைமையைத் தோற்றுவித்துள்ளது. கிழக்குப் பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டமை மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட பகுதியைச் சேர்ந்த இவரது படுகொலையானது மட்டக்களப்பில் வாழும் வட பகுதியினர் மீது இலக்கு வைக்கப்படலாமென்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு புறம் புலிகள் மீது தாக்குதலை நடத்தும் அதேநேரம், மறுபுறம் வட பகுதியினர் மீதும் புலிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாகச் செயற்படுவோர் மீதும் தாக்குதலை நடத்துவதன் மூýலம் மக்கள் மத்தியில் உளவியல் ரீதியில் அச்ச உணர்வை தோற்றுவிப்பதும் இந்தத் தாக்குதலின் பின்னணியிலிருக்கலாமெனக் கருதப்படுகிறது.
மட்டக்களப்பில் புலிகள் மீண்டும் தங்களைப் பலப்படுத்துவதற்கு முன்னர், புலிகள் அங்கு ஸ்திரமடைவதைத் தடுக்கும் நோக்கில் இராணுவத்தினர் தமிழ் குழுக்களின் ஆதரவுடன் தங்கள் செயற்பாட்டை விஸ்தரிக்கலாமெனவும் கருதப்படுகிறது. புலிகள் மீது தாக்குதலைத் தொடுக்கும் அதேநேரம், புலிகளிடமிருந்து மக்களைப் பிரிக்க வேண்டுமென்பதும் இவர்களது செயற்பாடாயுள்ளது. இது எந்தளவிற்கு வெற்றியளிக்குமெனத் தெரியாத போதிலும் முயற்சித்துப் பார்ப்போமென்ற நோக்கிலேயே இந்தத் தாக்குதல்கள் முடுக்கி விடப்படுகின்றன.
தங்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த புலிகள் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள்ளும் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியினுள்ளும் தங்கள் மீது நடைபெறும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த புதிய திட்டங்களை வகுத்துள்ளதுடன் பதில் நடவடிýக்கைகளைத் தீவிரப்படுத்தவும் அவர்கள் முயலக் கூýடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கில் நிலைமைகள் மோசமடைந்து வருகையில் அங்குள்ள நிலைமைகள் குறித்து தேசிய பாதுகாப்புச் சபையில் ஆராயப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி சில நடவடிýக்கைகளையும் மேற்கொண்டுள்ளார். இது வரை காலமும் கிழக்குப் பிராந்தியத்திற்கில்லாத புதிய படைத் தலைமையகமொன்றையும் உருவாக்கியுள்ளார். அனைத்து நடவடிýக்கைகளுக்குமான கட்டளைத் தலைமையகத்தை உருவாக்கி அதன் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சாந்த கொட்டகொடவை நியமித்துள்ளார்.
இராணுவ தலைமை அதிகாரியான சாந்த கொட்டகொடவின் கீழேயே கிழக்கில் இராணுவ, கடற்படை, விமானப்படை மற்றும் விசேட அதிரடிýப் படையின் செயற்பாடுகள் வந்துள்ளன. அனைத்து நடவடிýக்கைகளும் இவரது பொறுப்பின் கீழேயே கொண்டுவரப்பட்டுள்ளன.
போர் நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையில், யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் கூýட இல்லாத ஒரு மாற்றம் தற்போது கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை பல்வேறு தரப்பிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள அதேநேரம் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
போர் நிறுத்த உடன்பாடு அமுலுக்கு வந்ததையடுத்து இடமாற்றம் பெற்றுச் சென்ற புலனாய்வாளர்கள் பலர் தற்போது மீண்டும் மட்டக்களப்பிற்கு இடமாற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளுக்கு எதிராக முன்னர் தீவிரமாகச் செயற்பட்ட இராணுவ புலனாய்வாளர்களே மீண்டும் மட்டக்களப்பிற்கு இடமாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கில் அனைத்து நடவடிýக்கைகளுக்குமான புதிய கட்டளைத் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ள அதேநேரம், புலனாய்வாளர்களின் இடமாற்றம், கல்விமான்களின் படுகொலைகள் மற்றும் பொது மக்களை கடுமையாக எச்சரிக்கும் துண்டுப் பிரசுரங்கள் மக்கள் மத்தியில் பேரச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.
இதைவிட மட்டக்களப்பு-அம்பாறை எல்லைப் புறக்கிராமமான பக்கியல்லவினுள் கடந்த வாரம் விசேட அதிரடிýப்படையின் அணியொன்று திடPரென ஊடுருவியுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டிýலுள்ள இந்தக் கிராமத்தினுள் அதிரடிýப் படையினர் ஊடுருவியமை புலிகளைக் கடும் சீற்றமடையச் செய்துள்ளது. அண்மையில் வாகரை ஆலங்குளம் பகுதியிலும் இராணுவ அணியொன்று ஊடுருவியதாக புலிகள் கண்காணிப்புக் குழுவிடம் புகார் செய்து ஒரு சில நாட்களினுள் அங்கு புலிகள் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதுபோன்றே பக்கியல்ல பகுதியிலும் தாக்குதல் ஏதும் இடம்பெறலாமென்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து புலிகள் கண்காணிப்புக் குழுவிடமும் அதிரடிýப்படையினரிடமும் முறைப்பாடு செய்துள்ள போதிலும் அடுத்து வரும் நாட்களில் ஏதாவது தாக்குதல்கள் நடைபெறலாமென்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
இதேநேரம், கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு நகரில் இரவு நேரங்களில் புலிகளுக்கெதிராக துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. புலிகளின் தலைமையுடன் தொடர்பு வைத்திருப்போருக்கும் புலிகளின் ஆதரவாளர்களுக்கும் எதிராக தாங்கள் கடும் நடவடிýக்கை எடுக்கப் போவதாகக் கூýறியே இந்தத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனை இரவு நேரங்களில் வாகனத்திலும், மோட்டார் சைக்கிளிலும், சைக்கிள்களிலும் வருவோரே விநியோகிப்பதாகப் பொதுமக்கள் கூýறுகின்றனர். தாங்கள் பார்த்த பலர் புதியவர்களாயிருப்பதையும் அவர்கள் சுட்டிýக் காட்டிýயுள்ளனர்.
கருணா குழுவே புலிகளுக்கெதிரான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக படையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இராணுவத்தினரின் வழிகாட்டலுடனும் அவர்களது ஆதரவுடனும் தமிழ்க் குழுக்களே இந்தத் தாக்குதல்களை நடத்துவதாக புலிகள் கடுமையாகக் குற்றஞ்சாட்டிýயுள்ளதுடன் கடந்த புதன்கிழமை வன்னியில் எரிக் சொல்ஹெய்மை சந்தித்த போது புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.
கருணா குழு என்ற போர்வையில் நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் புலிகள் நடவடிýக்கைகளை எடுத்து வரும் அதேநேரம், ஏனைய தமிழ்க் குழுக்களையும் கருணாவுடன் தப்பிச் சென்று தற்போது இராணுவ முகாம்களில் தஞ்சமடைந்தவர்களையும் பயன்படுத்தியே படையினர் இவ்வாறான தாக்குதல்களை நடத்தி வருவதை புலிகளும் நன்கறிந்துள்ளனர்.
தங்கள் மீதான தாக்குதலொன்றுக்காகத் தயார்படுத்தப்பட்ட மூýவரை புலிகள் தந்திரமாக தங்கள் வலைக்குள் சிக்கவைத்தனர். கருணா குழுவைச் சேர்ந்த இவர்கள், புலிகளென்றறியாது புலிகளிடம் சிக்கிக் கொண்டனர். முன்னர் கருணாவுடனிருந்த இவர்கள் படை முகாம்களில் சரணடைந்த போது இவர்களை மிரட்டிýயும், பணத்தாசைக் காட்டிýயும் தற்போது புலிகளுக்கெதிராக இவர்களை செயற்படவைப்பதில் படையினர் தீவிரம் காட்டுவதைப் புலிகள் இவர்கள் மூýலம் அறிந்து கொண்டனர்.
தற்போது, தங்கள் மீது தாக்குதல் நடத்தும் தமிழ் குழுக்களைச் சேர்ந்தோரை அடையாளம் காண்பதில் புலிகள் தீவிரம் காட்டுகின்றனர். மட்டு நகரில் இரவு நேரத்தில், அச்சம் மற்றும் பதற்றம் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கையில் துண்டுப் பிரசுரங்களை வீசிவிட்டுச் செல்வோரை படையினரால் பிடிýக்க முடிýயும். ஆனால், படையினரோ இதுவரை அவ்வாறான நடவடிýக்கை எதிலும் இறங்கவில்லை. இதுவும் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளன.
அனைத்து நடவடிýக்கைகளுக்குமான புதிய கட்டளைத் தலைமையகம், இராணுவ புலனாய்வாளர்களின் இடமாற்றம், பொது மக்கள் மற்றும் கல்விமான்கள் மீதான தாக்குதல்கள், துண்டுப் பிரசுர விநியோகம், தங்கள் மீது தாக்குதல் நடத்துவோர் குறித்து படையினர் மௌனம் சாதிப்பதென்பதெல்லாம் புலிகளுக்கு சில விடயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளது.
போர் நிறுத்த காலத்தில் அதுவும் புதிய ஆட்சியில் தங்களுக்கெதிரான தாக்குதல்களை இராணுவ புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்து விட்டனர் என்பதை புலிகள் நன்கறிந்துள்ளனர். கடந்த ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்பிலும் - அம்பாறையிலும் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த தமிழ் உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர். ஆனால், இராணுவத்தினர் எவரும் கொல்லப்படவில்லை. 30 இற்கும் மேற்பட்ட, தமிழ் புலனாய்வுப் பிரிவினர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் புலிகள் தங்கள் மீது எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை என்பதை உணர்ந்திருந்தும் தற்போது இராணுவத்தினர் புலிகள் மீதான தாக்குதலை, கருணா குழுவென்ற போர்வையில் நடத்துவது சமாதான முயற்சிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாயிருக்குமென்பதை உணர்வர். ஆனாலும், புலிகளுக்கு பல்வேறு நெருக்கடிýயையும் ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் தாக்குதல்கள் தொடர்கின்றன.
இவ்வாறான தாக்குதல்களையடுத்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலும், தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியிலும் புலிகளின் முக்கியஸ்தர்களின் நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதேநேரம், மட்டக்களப்பில் எழுந்துள்ள நிலைமைகளைக் கையாளும் நோக்கில் அங்கு தலைமைப் பதவிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் கூýறப்படுகிறது.
புலிகளின் இராணுவத் தளபதிகள் சிலர் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்து அடுத்து மேற்கொள்ள வேண்டிýய நடவடிýக்கைகள் குறித்து உள்@ýர் தளபதிகளுக்கு விளக்கியுள்ளனர். தங்கள் புலனாய்வுப் பிரிவை நன்கு கட்டிýயெழுப்புவதிலும் புலிகள் தீவிரம் காட்டுகின்றனர். சில பதில் நடவடிýக்கையில் புலிகள் இறங்கலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளரின் கொலை மக்கள் மத்தியில் கடும் சீற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள அதேநேரம், இது புலிகளுக்கு பெரும் சவாலையும் விடுத்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து வட பகுதியைச் சேர்ந்தவர்களை கருணா குழுவினர் விரட்டிýயது போன்று வடபகுதியைச் சேர்ந்த கல்விமான்கள், வர்த்தகர்கள், மற்றும் சிலரை இலக்கு வைப்பதன் மூýலம் கருணா குழுவே இந்தத் தாக்குதல்களை நடத்துவது போன்றதொரு தோற்றப்பாட்டை உருவாக்க படையினர் முயற்சிப்பதாக பலரும் கருதுகின்றனர்.
ஆனாலும், இவற்றுக்கெல்லாம் புலிகள் கடுமையான பதிலடிý கொடுப்பார்களென மக்கள் கருதுகின்றனர். சரியான பதிலடிýயே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையுமெனப் புலிகளும் கருதுகின்றனர். கருணாவின் கிளர்ச்சியின் பின் கிழக்கில் தங்களைத் துரிதமாகக் கட்டிýயெழுப்பிவரும் புலிகள் தற்போது பல்வேறு தகவல்களையும் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல்களின் நோக்கம், தாக்குதல் நடத்துபவர்கள் எங்கிருந்து செயற்படுகின்றார்கள், இவர்களது தொடர்புகளென்ன, பொதுமக்களையும், கல்விமான்களையும் ஏன் இலக்கு வைக்கின்றார்கள் என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்களை அவர்கள் துரிதமாகத் திரட்டுகின்றனர். இந்தத் தகவல்களைத் திரட்டிýய பின் அதற்கான பதில் நடவடிýக்கையில் அவர்கள் இறங்குவரென எதிர்பார்க்கப்படுகிறது.
நோர்வேயின் அனுசரணை முயற்சியில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிப்பதில் மேலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதால் கிழக்கில் நிலைமைகள் மேலும் மோசமடையலாமென எதிர்பார்க்கப்படுகிறது. படையினரின் தாக்குதல்களுக்கு புலிகளும் பதில் தாக்குதல் நடத்தத் தொடங்க அங்கு நிலைமை எப்படிýயிருக்குமென்பதை கற்பனை செய்தால் நிலைமையின் தீவிரம் நன்கு புரியும்.
Thinakkural

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>