05-30-2004, 03:11 PM
சமாதானத்திற்குத்தடை புலிகளல்ல அரசே! - சிறி. இந்திரகுமார்
சனாதிபதி சந்திரிக்கா தலைமையிலான அரசு சமாதான முயற்சியை இழுத்தடிக்கவே விரும்புகிறது.உண்மையில் சமாதான முயற்சி தொடரப்பட்டாலும் அங்கு ஒரு உறுதியான தீர்வு எட்டவேண்டும் என்ற இதயசுத்தியுடனான விருப்பத்திற்க்குப் பதிலாக சமாதானமுயற்சி என்றபோர்வையில் காலங்கள் இழுத்தடிக்கப்படவேண்டும் என்பதே அரசின் விருப்பமாக இருக்கிறது.இதனைத்தான் சமாதானப்பேச்சுக்களின் போது இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கான பேச்சுக்கள் தொடரும் சமநேரத்தில் இறுதித்தீர்வு பற்றியும் பேசவேண்டும் என சந்திரிகா அரசு விரும்புவதையே காட்டுகின்றது. இதற்;கு முதலில் சந்திரிகா அரசு நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் எதனை விரும்பி புலிகளுக்கு வாக்களித்தார்களோ அதனை முதலில் நடைமுறைக்கு கொண்டுவரும் வகையில் பேச்சுக்களை தொடர்வதோடு தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மதிப்பளிக்கவேண்டும்.
அதோடு சனாதிபதி சந்திரிகா தலைமையிலான இந்த அரசு அரசமைப்பதற்காக கூட்டினை ஏற்படுத்தியிருக்கும் ஜே.வி.பி.மற்றும் ஏனைய கடசிகள் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை நிறுவுவதற்கே இணங்காது என்ற நிலையே காணப்படுகின்றது.
அதிலும் ஜே.வி.பி.யின் போக்கிலும் அதன் பேச்சிலும் தற்போது கடுமையான கருத்துக்களை விதைத்து வருகிறது.
அத்தோடு சமாதான முயற்சியின் அனுசரணையாளராக செயற்படும் நோர்வேயை வெளியேற்ற வேண்டும் என்று இப்போது கூறிவரும் நிலையில் சந்திரிகா தலைமையிலான அரசோடு எப்படி நிரந்தரத் தீர்வுபற்றிப் பேசமுடியும்?
முதலில் சந்திரிகா அரசு இடைக் காலத் தன்னாட்சி அதிகாரசபை தொடர்பாக பேச்சுகளை நடத்தி அதனை நடைமுறைக்குக்கொண்டுவருமாயின் இந்த அரசின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கைகொள்ளமுடியும்.
சிறிலங்காவின் அரசியலமைப்பில் எந்த மாற்றங்களும் நிகழாதநிலையிலும் இந்த அரசு இன்னும் ஒரு வலுவான அரசாகத்தன்னை நிருபிக்காத நிலையிலும் நிரந்தரத்தீர்வு நோக்கிப் பேசுவது என்பது வெறும் விளலுக்கு இறைத்த நீராகவே இருக்கும்.
கடந்த வாரங்களில் கொழும்புக்கும் கிளிநொச்சிக்குமென விஜயங்களை மேற்கொண்ட நோர்வேக்குழுவினர் கூட கமாதான முயற்சிதொடர்பாக வெளியிடுவதாக இருந்த கூட்டறிக்கையினை வெளியிடமுடியாத நிலையிலேயே உள்ளனர்.
அத்தோடு இந்த அரசு உண்மையாகவே ஒரு தீர்வுக்காக பேச்சுக்களை நடத்தவே விரும்புகின்றது என்றால் தனது விருப்பங்களை உறுதியாக வெளிப்படுத்த தயாராக இருக்கவேண்டும்.
அந்தநிலையில்தான் இந்த அரசோடு சமாதானப் பேச்சுக்களை தொடர்வதில் புலிகள் இயக்கம் மிகவும் நிதானமாகவும் அதேநேரம் உறுதியானதுமான உறுதிப்பாடுகளைப் பொற்றுக்கொள்ள விரும்புகின்றது.
இது சமாதான முயற்சியை முன்தொடர வேண்டிய அரசு புலிகள் இரண்டு தரப்பும் விட்டுக்கொடுக்க வேண்டியதற்கும் பரஸ்பரம் றம்பிக்கைகொள்ளவேண்டியதற்கும் அப்பால் அரசின் நடவடிக்கைகள் அமைந்துவிட்ட நிலையைடீயகாட்டுகிறது.
இது இந்த அரசின் மீது நம்பிக்கையின் அடிப்படையில் சமாதானத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் இத்தகைய புலிகளின் உறுதிப்பாடு அவசியமாவதையுமே காட்டுகிறது.
சனாதிபதி சந்திரிகா முதலில் தனது கூட்டணிக் கட்சிகளுக்குள்ளிலிருந்து கொண்டு ஒரு சவாலான துணிகரமான முடிவுகளை எடுக்கும் ஒரு நிலையில்தான் சமாதான முயற்சி என்பது நடைமுறைக்கு சாத்தியப்பானதாக அமையும்.
இந்த நிலையில் சமாதானமுயற்சி இப்போது தேங்கிநிற்பதற்கு காரணம் புலிகள் இயக்கம் அல்லஇ பதிலாக சந்திரிகா அரசின் பலவீனங்கள் மட்டுமே கூட்டணிக் கட்சிகளைத் திருப்தி செய்ய வேண்டிய ஒரு தலைவியால் எப்படி ஒரு இனத்தின் அபிலாசைகளுக்கு மதிப்பளிக்கமுடியும்.
அவ்வாறு அவர் மதிப்பளிக்க முயன்றாலும் அதற்கு இந்த அரசு நீடிப்பதற்கு பௌத்த பேரினவாத சிந்தனைகளில் மூழ்கிப்போன அந்தக்கட்சிகள் அனுமதிக்குமா?
ஆந்த வகையில் அரசிடம் இருந்து ஒரு உறுதியான உடனடி சாத்தியப்பாடான விவகாரங்களைக்பற்றி பேசுவதென்ற புலிகள் இயக்கத்தின் நிலைப்பாடே பொருத்தமானது.
சிறி. இந்திரகுமார்/Eelanatham

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>