05-30-2004, 06:48 AM
புலிகளை இராணுவ hPதியில் வெல்லலாம் என்ற நப்பாசை ஜனாதிபதி உட்பட அரசுத் தலைவர்களுக்கு இன்னமும் உள்ளது: ~தமிழ் கார்டியன்|
ஜ வீரகேசரி ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 30 மே 2004, 7:02 ஈழம் ஸ
'வடுதலைப் புலிகளை இராணுவ hPதியில் வெல்லலாம் என்ற நப்பாசை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட அரசுத் தலைவர்களுக்கு இன்னமும் உள்ளது" என்று புலிகளின் உத்தியோகப10ர்வ வார இதழான ~தமிழ் கார்டியன்| அதன் ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
அவ் ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
ஜனாதிபதி சந்திரிகாவின் நயவஞ்சக அரசியல் வெளிப்படையானது. அவரும் அவரது அரசுத் தலைவர்களும் புலிகளை யுத்தத்தால் வெல்லலாம் என்ற நப்பாசையிலேயே இன்னமும் உள்ளனர்.
ஜே.வி.பி. யின் நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வின் மூலம் தீர்வுகிடைக்கவேண்டும் என்பதைவிட அவர்கள் மீது யுத்தம் நடத்தவேண்டும் என்பதே தமது விருப்பம் என்று ஜே.வி.பி. பகிரங்கமாக தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றில் சபாநாயகரை தெரிவு செய்யமுடியாத நிலையில் உள்ள சந்திரிகா குமாரதுங்கவின் சிறுபான்மை அரசு, அடிப்படை அரசியல் பிரச்சினைகளைப் பேசித்தீர்த்துவைக்கும் என்று கூறுவது ஜனாதிபதி சந்திரிகாவின் நயவஞ்சக அரசியலை வெளிப்படுத்துகிறது.
சமாதான முயற்சிகளின் ஆரம்பத்திலேயே ஜே.வி.பி. யினரின் முட்டுக்கட்டைகளைத் தாண்ட முடியாமல் ஜனாதிபதி நிற்கிறார். சண்டைகளின்றி அமைதியாக உள்ள இந்த காலப்பகுதி கடந்த காலக் கொடூரப்போரின் நினைவுகளை மறைக்கலாம். ஆனால், இந்த அமைதி தொடர்ந்தும் நீடிக்கும் என்று கூறமுடியாது.
ஏனெனில் இந்த அவகாசம் புலிகளை யுத்தத்தால் வெல்லவேண்டும் என்ற அவா கொண்ட ஜே.வி.பி. இராணுவத்தைத் தயார்படுத்தும் காலப் பகுதியாகிவிடுமோ என அஞ்சவேண்டியுள்ளது.
கிழக்கில் நடைபெறும் தொடர்ச்சியான படுகொலைகள் குறித்து தெரிவிக்கையில்:-
அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படை விடயமான இராணுவ சமநிலை என்ற வரம்பை மீறி இராணுவத்தினர் புலிகளின் மீது தாக்குதல் நடத்தினால் தற்பாதுகாப்புக்காகப் புலிகளும் திருப்பித்தாக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>