05-30-2004, 06:43 AM
அமெரிக்க வெகுமதி இதுதானா?
ஈராக்கிய முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனை சர்வாதிகாரியாக வர்ணித்த அமெரிக்கா, அவரிடம் இருந்து ஈராக்கிய மக்களுக்கு விடுதலை வழங்கப்போவதாகவும் அங்குள்ள பேரழிவு ஆயுதங்களை ஒழிக்கப்போவதாகவும் கூறியே போரை ஆரம்பித்தது. ஆனால், போருக்குப் பின்னர் அங்கு நடப்பவை என்ன? வியட்நாமில் வாங்கிய அடியைப் போல், ஈராக்கிலும் அமெரிக்கா அடி வாங்கப்போகிறது என்று "சுருதி' வாசித்தவர்கள் தற்போது ஒருபடி மேலேபோய் ""வியட்நாம் என்ன வியட்நாம் அதைவிட பன்மடங்கு அடி அமெரிக்காவுக்கு விடுவது நிச்சயமாகிவிட்டது'' என்று சற்றே உயர்ந்ததொனியுடன் கூறுகின்றனர்.
அத்துடன் அமெரிக்கப்படை ஈராக்கைவிட்டு எப்போது வெளியேறப்போகிறது என்ற ஆதங்கமும் அவர்களிடத்தில் எழுந்துள்ளது. ஏனெனில் அந்தளவுக்கு அப்பாவி ஈராக்கியர்களை அமெரிக்க வல்லூறுகள் கொத்தி தின்று கொடுமைப்படுத்தி வருகின்றன.
ஈராக் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியபோது எதிர்பார்த்ததிற்கு மாறாகவே சதாமின் படைகள் பல நாட்டுப் படைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் வெகுசீக்கிரத்தில் கூடு கலைந்தன. காலப்போக்கில் சதாமின் புதல்வர்கள் கொல்லப்பட்டும், பரதேசியாய் சதாம் பிடிபட்டதுடனும் தான் நினைத்ததை சாதித்துவிட்டதாக அமெரிக்க வல்லூறு நினைத்தது. உலகமும் அப்படித்தான் நினைத்தது. ஆனால் அந்த நினைப்பு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
""சதாம் பிடிபட்டுவிட்டார் தானே. இனி என்ன கவலை'' என்று எதேச்சதிகாரமாக நடந்துகெõண்ட அமெரிக்கப் படையினர், தாம் நினைத்ததெல்லாம் சரி என்றும் தாம் செய்பவையெல்லாம் பிழையல்ல என்றும் தப்புக்கணக்குப் போட்டனர். இந்த தப்புக் கணக்குத்தான் ஈராக்கியர்களை உசுப்பிவிட்டிருக்கிறது.
குறிப்பாக சிறைப்பிடித்தவர்களை அமெரிக்கப் படையினர் நடத்தியவிதம் ஈராக்கியர்களுக்கு அமெரிக்கா வழங்கிய வெகுமதி இதுதானா? என்ற கேள்வியைக் கேட்க வைத்திருக்கிறது.
இந்த வெகுமதியை கொடுக்கத்தான் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்தையும் பெறாமல் ஈராக் மீது அமெரிக்கா அவசரப்பட்டு போர் தொடுத்ததா? அல்லது தன்னை தட்டிக்கேட்க யாரும் வரமாட்டார்கள் என்ற நினைப்பில் அது இவ்வாறு செய்ததா?
இதற்கு பதில் கூறவேண்டியவர் உலகின் தலைமை பொலிஸ்காரனாக தன்னை நினைத்துக்கொள்ளும் ஜனாதிபதி புஷ் தான். ஆனால் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிட்டாற்போல் அவர் செயற்பட்டு வருகிறார்.
போர் குற்றவிதிகளை மீறி ஈராக்கிய கைதிகளை கொடுமைப்படுத்துவதற்கான மறைமுக உத்தரவை மூடிய கதவுக்கு பின்னால் இருந்துகொண்டு வழங்கிவிட்டு அது வெளியுலகிற்கு அம்பலமானவுடன் தான் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தனது படையினரையே சட்டத்தின் முன் பலிக்கடாவாக்கிவிட்டார்.
அத்தோடு, சிறைக்கைதிகளை கொடுமைப்படுத்திய ஒரு சிலருக்கு அற்ப தண்டனை வழங்கிவிட்டு மீண்டுமொரு தடவை அவர் உலகை ஏமாற்றிவிட்டார் என்பதே உண்மை. இதனை அதிகாரமிக்க ஏனைய வல்லரசுகளும் ஏனைய நாடுகளும் ஏன் அமெரிக்க கைப்பொம்மையாக வர்ணிக்கப்படும் ஐக்கியநாடுகள் சபையும் கண்டும் காணாமல் இருப்பதுதான் வேடிக்கை.
இத்தனைக்கும் காரணமான "அபு கிரைவ்' சிறைச்சாலையில் ஈராக்கியர்கள் அனுபவித்துவரும் கொடூரமான துன்பங்கள் குறைந்தபாடில்லை. அங்கு நடைபெற்ற, நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் எப்படியோ காலத்துக்கு காலம் அம்பலமான வண்ணமுள்ளன.
சதாமின் ஆட்சிக்காலத்தில் தாமும் தம்பாடுமென இஸ்லாமிய விழுமியங்களின் படி வாழ்ந்து வந்த ஈராக்கியர்கள் இன்று விசாரணை என்ற போர்வையில் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அனுபவிக்கும் கொடுமைகள் சொல்லியடங்கா. விசாரணைக்கென கைது செய்யப்படுபவர்கள் வாழ்வில் புகுந்து விளையாடிவரும் அமெரிக்கப் படையினர், கைதிகளுக்கு தாங்கமுடியாத சித்திரவதைகளை செய்தது மட்டுமல்லாமல் அவர்களை நிர்வாணமாக்கி எள்ளிநகையாடியுள்ளனர். கைதிகளை நிர்வாண கோலத்தில் நிற்கவைத்து அவர்களின் உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சியது முதல் பாலியல் சேஷ்டை வரையான அத்தனை கொடுமைகளும் "அபு கிரைவ்' சிறைச்சாலையில் அரங்கேற்றமாக நடந்துமுடிந்துள்ளன.
காலப்போக்கில் இதனை அமெரிக்கர்கள் மறந்து போனாலும் ஏன் உலகம் கூட மறந்தாலும் ஈராக்கியர்கள் மறக்கமாட்டார்கள். அமெரிக்கப் படையினருக்கு ஈராக்கிலேயே சவக்குழி பறிக்கவே அவர்கள் விரும்புவார்கள். இதனை அமெரிக்கப்படையினர் உணர்ந்துகொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
"அபு கிரைவ்' சித்திரவதைகளை மூடிமறைக்க எவ்வளவோ முயன்றும் அதில் தோற்றுப்போய்விட்ட அமெரிக்கா, அதற்குப் பரிகாரமாக அந்த சிறையில் இருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்திருக்கிறது. இவர்களை விடுவித்தால் தனக்கு ஏற்பட்ட களங்கம் தீர்ந்துவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி கருதினார். ஆனால், நடந்ததோ வேறு; அவரது நினைப்பு தவிடுபொடியாகியிருக்கிறது.
சிறையில் இருந்து மீண்டவர்கள் அங்கு தமக்கு நடந்த சித்திரவதைகளையும், கொடுமைகளையும் அழுதுபுலம்பியவாறு வெளிநாட்டு ஊடங்களின் முன்னால் கொட்டித்தீர்த்துள்ளனர்.
இது "தலையிடியுடன்' இருந்த அமெரிக்க ஆளும் தரப்புக்கு "குலப்பன் காய்ச்சலைக்' கொடுத்திருக்கிறது. இனி என்ன நடக்கப்போகிறதோ என்று உள்மனதிற்குள் கலக்கம் எடுத்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாத அமெரிக்க ஆளும்தரப்பு, ஈரõக்கில் தனது ஆக்கிரமிப்பை மேலும் இறுக்கமாக்கவே முனைகிறது. ஏனெனில், ஈராக்கில் நாளுக்குநாள் குண்டுத்தாக்குதல்கள் அதிகரிப்பதும் உயிரிழப்புகள் தொடர்வதும் இது அமெரிக்காவுக்கே பாதகமாக அமைந்துவிடுவதும் சாதாரண விடயமாகிவிட்டது. இந்நிலை தொடர்ந்தால் ஈராக்கை கைவிட்டு விரைவாக வெளியேறிவிடவேண்டிய நிலை ஏற்படலாம் என்று அமெரிக்கா கருதுகிறது.
அது நடந்துவிட்டால் அது அமெரிக்காவுக்கு விழுந்த மற்றொரு அடியாகவே கருதப்படும். அப்படியான "அடி'யை வாங்குவதற்கு ஜனாதிபதி புஷ் தயாரில்லை. அதனால்தான் கிளர்ந்தெழும் ஈராக்கியர்களை பூண்டோடு பரலோகம் அனுப்பும் தீவிரமுயற்சியில் இறங்கியிருக்கிறது அமெரிக்கõ.
ஆனால், அமெரிக்கப் படையினரை முந்திக்கொண்டு நேருக்கு நேர் நின்று எதிர்ப்புக்காட்டும் அளவுக்கு ஈராக்கியர்கள் கொதிப்படைந்துள்ளதைப் பார்க்குமிடத்து அமெரிக்கப் படையினரின் உயிரிழப்புகள் ஈராக்கில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
இதுவரை காலமும் அமெரிக்ககூட்டுப்படைக்கு எதிரõக ஒரு குழுவினரே செயற்பட்டு வந்தனர் என்றே அமெரிக்காவும் நம்பியது. உலகமும் நம்பியது. ஆனால், இனிமேல் அமெரிக்கப் படைக்கு எதிராக ஒட்டுமொத்த ஈராக்கியர்களும் திரெண்டெழுவார்கள் என்பதில் ஐயமில்லை.
அந்தளவுக்கு "அபுகிரைவ்' சிறைச்சாலை சித்திரவதைகள் அவர்களை பாதித்துள்ளன. அத்தோடுசிறைச்சாலையில் இருந்து மீண்டவர்கள் எப்படியாவது தம்மை சித்திரவதைப்படுத்தியவர்களை பழிக்குப்பழி வாங்கிவிடவேண்டும் என்பதில் குறியாக உள்ளனர் என்று பக்தாத்திலுள்ள வெளிநாட்டு நிருபர் ஜோன் ஹென்றி தெரிவித்திருக்கிறார்.
""இனிமேல்தான் அமெரிக்கப்படை எதிர்ப்பை சந்திக்கப்போகிறது'' என்று தெரிவித்துள்ள அவர் அமெரிக்கப் படையினர் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டவிதத்தில் ஒட்டுமொத்த அமெரிக்காவுக்குமே இழுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
இது இவ்வாறிருக்கையில், அமெரிக்கப் படையினர் ஈராக்கியர் கைதிகளை நடத்தியவிதம் சர்வதேச ரீதியிலும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது. உலகின் எந்தவொரு மூலையில் அநியாயம் நடந்தாலும் அதில் மூக்கை நுழைத்து அந்த விவகாரத்தை ஊதிப்பெருப்பித்து தனது அத்துமீறலை அரங்கேற்றும் அமெரிக்கா, ஈராக்கில் நடந்துகொண்ட முறைக்கு என்ன சொல்லப்போகிறது என்பதே அமெரிக்காவைப் பார்த்து சர்வதேசம் விடுக்கும் கேள்வி. இந்த கேள்விக்கு பதிலளித்தாற்போல் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ரம்ஸ் பீல்ட் முதலிலும் ஜனாதிபதி புஷ் அடுத்ததாகவும் மன்னிப்புக்கேட்கும் தொனியில் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.
ஆனால், இவர்களது கருத்தை ஏற்றுக்கொள்ள ஈராக்கியர்கள் தயாராக இல்லை. எப்படியாவது பழிக்குப்பழி வாங்கிவிடவேண்டுமென துடித்துக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கப் படையினரைக் குறிபார்க்கும் ஈராக்கியர்களின் கண்களில் அமெரிக்கப் படையினருக்கு துணைபோகும் உள்நாட்டவர்களும் துரோகிகளாகவே தென்படுகின்றனர். அதன் விளைவுதான் நாளாந்தம் இடம்பெறும் குண்டுவெடிப்புகளும், உயிரிழப்புகளும்.
சதாம் கைதுசெய்யப்பட்டதன் பின்னரே இங்கு இவ்வாறான தாக்குதல்கள் அதிகரித்தன. அதற்கு முக்கிய காரணம் சதாமின் விரோதிகள் அவரைக்காட்டிக்கொடுத்தது தான். அமெரிக்காவின் டொலருக்கு ஆசைப்பட்டு தமது பகையைத் தீர்த்துக்கொண்ட சதாமின் விரோதிகளை முதலில் அரவணைத்த அமெரிக்கா, தற்போது அவர்களை கைகழுவப் பார்க்கிறது. குறிப்பாக அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாகக் கருதப்பட்ட ஈராக்கிய இடைக்கால சபைத் தலைவரைக்கூட ஜனாதிபதி புஷ்ஷின் நிர்வாகம் கை கழுவியுள்ளது. கடந்த வாரம் அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்கத் துருப்பினர் அங்கு சல்லடைபோட்டுத் தேடினர். அவர்கள் எதனை தேடினர் என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. ஆனால், தனது தேடுதலை வெளியுலகம் சந்தேகக் கண்கொண்டு பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அமெரிக்கப் படைக்கு சொந்தமான வாகனங்கள் சிலவற்றை சலாபியின் ஆதரவாளர்கள் கையாடிவிட்டனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது அமெரிக்கா. சலாபியின் ஆதரவாளர்கள் வாகனங்களைக் கையாடிய குற்றத்திற்காக சலாபியின் வீட்டுக்குள் திடீரெனப் புகுந்து சோதனை நடத்தியதன் நோக்கம் என்ன? இதற்கு அமெரிக்கப் படைதான் பதில் சொல்லவேண்டும்.
சதாம் ஆட்சிக்கவிழ்ப்பில் அமெரிக்கப் படை யின் கைக்கூலியாக விளங்கிய சலாபிக்கே இந்த கதி என்றால், அமெரிக்காவுக்கு வால்பிடிக்கும் ஏனைய ஈரõக்கியர்களின் நிலை அந்தோகதி தான். வால்பிடிகளின் நிலை இப்படியென்றால் அமெரிக்கப் படையின் நிலையும் அந்தோ கதிதான். ஏனெனில் அமெரிக்கப் படையை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்துவந்தவர்களுடன் அமெரிக்காவால் கைகழுவப்பட்டவர்களும் இணைந்துகொண்டால் நிலைமை என்னவாகும்?
அலெக்ஸ்/வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>