05-29-2004, 04:47 PM
"கில்லி" மீது அஜீத் கடுப்பு
கில்லி பட வசனங்களால் அஜீத் ஏகத்துக்குக் கடுப்படைந்துள்ளார்.
விஜய்யின் சமீப கால படங்களில் தன்னைத் தாக்கி வசனம் வைப்பதாக குமுறிக் கொண்டிருக்கும் அஜீத், சமீபத்திய விஜய் ரிலீஸான கில்லியிலும் பல வசனங்கள் தன்னைக் குறி வைத்து இருப்பது குறித்து டென்ஷனாகியுள்ளாராம்.
விஜய் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற திருமலை படத்தில் யாருடா உன் தலை, தலை மட்டுமில்லை, வாலையும் சேர்த்துக் கூட்டி வா, அடக்குறேன் என்று விஜய் வசனம் பேசுவார். தீனா படத்தில் அஜீத்தை அவரது ஆட்கள் செல்லமாக தலை என்று கூப்பிடுவது வழக்கம்.
திருமலையில் இடம் பெற்ற வசனம் தன்னைக் குறி வைத்தே வைக்கப்பட்டதாக அஜீத் தரப்பு கடுப்படைந்தது. ஆனால் இதை விஜய் மறுத்தார். தற்செயலாக வந்த வசனம் அது என்று விளக்கினார். இருப்பினும் அஜீத் தரப்பு சமாதானம் ஆகவில்லை.
இந் நிலையில் கில்லி படத்திலும் சில வசனங்கள் தனக்கு எதிராக இருப்பதாக அஜீத் நினைக்கிறாராம். படத்தை ரகசியமாக சென்று பார்த்த அவர் பல வசனங்கள் தன்னை குறி வைப்பதாக நினைக்கிறார். இதனால் தனது அடுத்த படத்தில் விஜய்யை கடுமையாக விமர்சிக்கும் வகையில் வசனங்களை வைக்க முடிவு செய்துள்ளாராம்.
விக்ரம், சூர்யாவின் கிடுகிடு வளர்ச்சியால் விஜய்யும், அஜீத்தும் கலங்கிப் போயிருந்தனர். ஆனால் திருமலை, கில்லி பட வெற்றிகளால் விஜய் சற்று தெம்பாகிவிட்டார். ஆனால் அஜீத்துக்கு சமீபத்தில் வெளியான ஜனா படம் காலை வாரிவிட்டது.
இதனால் கட்டாயம் ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் அஜீத். ஏற்கனவே கைவசம் அட்டகாசம், ஜி, மிரட்டல் படங்களை வைத்திருக்கும் அஜீத், அவற்றை முடிக்காமலேயே அடுத்து கதை கேட்க முடிவு செய்துள்ளாரõம். இது ஏற்கனவே பாதி முடிந்த நிலையில் இருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>