05-27-2004, 03:56 PM
சொல்ஹெய்மை 2 ஆவது நாளும் சந்திப்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்க தரப்பினரும் மறுப்பு
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான சமாதானப் பேச்சுகளை மீள ஆரம்பிக்கும் நோர்வேயின் அனுசரணை முயற்சிகள் மீண்டும் ஒத்திவைக்கப்படும் சாத்தியமேற்படலாமெனக் கூறப்படுகிறது.
இரு தரப்பையும் சந்தித்து சமாதானப் பேச்சுகளை மீள ஆரம்பிக்கும் நோக்கில் கடந்த திங்கட்கிழமை கொழும்பு வந்த நோர்வேயின் விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெய்மை நேற்று 2 ஆவது நாளும் சந்திக்க ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மறுத்து விட்டதாலேயே இவ்வாறானதொரு சூழ்நிலை எழலாமென அஞ்சப்படுகிறது.
ஜனாதிபதி மற்றும் அரச தரப்பினருடன் பேசுவதற்கு முன்னர், கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்புக்கு புறப்பட சற்று முன், லண்டனிலுள்ள புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் சொல்ஹெய்ம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புலிகளின் நிலைப்பாட்டை அறிந்து கொண்டார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை காலை பிரதமரையும் அன்று மாலை கண்டியில் ஜனாதிபதியையும் சந்திக்க சொல்ஹெய்ம் காத்திருந்த போதிலும், இவ்விருவரையும் அவரால் சந்திக்க முடியாது போனது.
செவ்வாய்க்கிழமை மாலை கண்டியில் ஜனாதிபதியைச் சந்திக்க சொல்ஹெய்ம் செல்வதற்காக விமானப்படை ஹெலிகொப்டரும் ஏற்பாடு செய்யப்பட்டு சொல்ஹெய்மும் அதற்காகக் காத்திருந்தார்.
எனினும், கண்டியிலிருந்து ஜனாதிபதி கொழும்பு திரும்புவதால் செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பில் ஜனாதிபதியைச் சந்திக்க முடியுமென சொல்ஹெய்மிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனால், தனது கண்டிப் பயணத்தைக் கைவிட்ட சொல்ஹெய்ம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை இந்தச் சந்திப்புக்காக ஜனாதிபதியின் அழைப்புக்கெனக் காத்திருந்தார்.
எனினும், அந்த அழைப்பு வராததால் நேற்றுக் காலை ஜனாதிபதியைச் சந்தித்து விட்டு வன்னிக்குச் சென்று புலிகளின் தலைவர்களைச் சந்திக்கலாமெனச் சொல்ஹெய்ம் காத்திருந்தார்.
அப்போதும் ஜனாதிபதியின் அழைப்பு வராததால் அரச தரப்பினர் எவரையுமே சந்திக்காது அவர் நேற்று முற்பகல் வன்னிக்குச் சென்று புலிகளைச் சந்தித்தார்.
புலிகளுடனான சந்திப்பின் பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் பேசிய சொல்ஹெய்ம், உடனடியாக கொழும்பு சென்று நேற்று மாலையே ஜனாதிபதியைச் சந்திக்கப் போவதாகக் கூறியிருந்தார்.
எனினும், ஹெலிகொப்டர் மூலம் நேற்று பிற்பகல் வன்னியிலிருந்து கொழும்பு திரும்பிய சொல்ஹெய்மினால் நேற்று நள்ளிரவு வரை ஜனாதிபதியைச் சந்திக்க முடியவில்லை என நோர்வேத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்றும் இந்தச் சந்திப்பு நடைபெறுவதற்கான வாய்ப்புகளில்லையென்றே தெரிவிக்கப்படுகிறது.
இதனால், சொல்ஹெய்மினால் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதியையோ அல்லது அரச தரப்பினரையோ சந்திக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அவ்வாறு சந்திக்க முடியாது போனால் சொல்ஹெய்ம் தனது விஜயத்தை இடை நடுவில் முடித்துக் கொண்டு நாடு திரும்பும் அதேநேரம், நோர்வேயின் அனுசரணை முயற்சிகள் மீண்டும் ஒத்தி வைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>