05-26-2004, 10:58 PM
மேலும் மூன்று அமைச்சர்கள் ஐனாதிபதியால் நியமனம்
ஏப்ரல் 2ல் நடைபெற்ற தேர்தலுக்கான பரப்புரையில், தனது அமைச்சில் 35ற்கு மேற்பட்ட அமைச்சர்களை நியமிக்க மாட்டேன் என்று மக்களுக்கு உறுதி வழங்கிய ஐனாதிபதி சந்திரிகா, தனது வாக்குறுதியை மீறி, 2 அமைச்சர்களையும் 1 பிரதி அமைச்சரையும் மேலதிகமாக நியமித்துள்ளார்.
முன்னைய சந்திரிகா அரசில் அனுரத்த ரத்வத்தை வகித்த பிரதி பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு முன்னாள் பிரதமர் ரத்னசிறீ விக்ரமநாயக்கவும், இராஐhங்க அமைச்சராக டியூ குணசேகரவும், பிரதி வெளிவிவகார அமைச்சராக விரிவுரையாளர் விஷ்வா வர்ணபாலவுமே இவ்வாறு ஐனாதிபதியால் புதிதாக நியமிக்கப்பட்டு, சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
புதிய அமைச்சரவையில் பௌத்த மத கலாச்சார அமைச்சராகவுள்ள ரத்னசிறீ விக்ரமநாயக்கவை சட்ட ஒழுங்குகள் மற்றும் பிரதி பாதுகாப்பு அமைச்சராக நியமித்துள்ளதன் மூலம், நாட்டின் இனப்பிரச்சனைக்கு சமாதான வழியிலான சுமூகமான தீர்வு காணும் சமிக்ஞைகளை சந்திரிகா அரசு நலிவடையச் செய்துள்ளதாகத் தெரிகிறது.
பௌத்த மதத்தையும் சிங்கள மொழியையும் கடுமையாக ஆதரிக்கும், பௌத்த சிங்கள இனவெறியர்களில் ஒருவராகக் கணிக்கப்படும் ரத்னசிறீ விக்ரமநாயக்க, நாட்டின் சமாதான முன்னெடுப்புக்களுக்கு ஒரு பாதுகாப்பு அமைச்சராக எவ்விதமான ஒத்துழைப்பைக் கொடுப்பார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
முன்னாள் விரிவுரையாளரும், பெரும்பான்மையினத்தவரின் அபிமானத்தைப் பெற்றவரும், சந்திரிகாவின் அபிமானத்திற்குரியவருமான பேராசிரியர் விஷ்வா வர்ணபாலவை பிரதி வெளிவிவகார அமைச்சராக நியமித்திருப்பது, லக்ஷ்மன் கதிர்காமரைப் படிப்படியாக ஓரம்கட்டும் ஒரு செயற்பாடாகக் கணிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக கதிர்காமருக்கு ஐனாதிபதி சந்திரிகா வழங்கிவரும் ஆதரவும் வசதிகளும் குறைந்து வருவதற்கும் இதுவே காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது.
Puthinam

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>